தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

விடுதலைப்புலிகளின் பின்தளைத்தை தேடும் சிறீலங்கா !

இஸ்ரேல் போர்க்குற்றங்களை இழைத்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவுக்கு பயந்த தனது தொனியில் மென்போக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் இது இஸ்ரேலின் போக்கை கட்டுப்படுத்தப்போவதில்லை. எனினும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் பயனடைந்த ஒரு நாடு ரஸ்யா தான், எம்எச் - 17 விமானத்தின் அழிவை ரஸ்யாவின் தலையில் கட்டி ஒரு போர்க்குற்றத்தை கொண்டுவந்து அதன் மூலம் உக்ரேனுக்குள் ஒரு உள்நுளைவுக்கு தன்னை தயார்படுத்திய மேற்குலகத்திற்கு இஸ்ரேலின் நடவடிக்கை முட்டுக்கட்டையாக அமைந்துவிட்டது.
இந்த சம்பவங்களுக்கு மத்தியில் சிறீலங்கா அரசும் தனது இனஅழிப்பை அனைத்துலக மட்டத்திற்கு விரிவாக்கி வருகின்றது. மலேசியாவை குறிவைத்தே சிறீலங்கா அரசு தற்போது மிகவும் தீவிரமாக செயற்பட்டுவருகின்றது. அதற்கான காரணமும் உண்டு. அதாவது 2008 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வன்னியில் பெருமளவான பகுதிகளை சிறீலங்கா படையினர் ஆக்கிரமித்தபோது விடுதலைப் புலிகளின் பின்தளம் தொடர்பில் பல தென்னிலங்கை ஊடகங்கள் தமது ஊகங்களை வெளியிட்டிருந்தன.
எதிரியின் தாக்குதல் எல்லைக்கு அப்பாற்பட்ட வலுவான வளங்களையும், வினியோக மார்க்கத்தையும் கொண்ட பின்தளம் ஒன்று அற்ற நிலையில் ஒரு இனம் தனது போராட்டத்தை முன்னெடுப்பது மிகவும் கடினமானதாகும். பலஸ்தீனப்பகுதியில் போராடுபவர்களுக்கு அதனை சுற்றி உள்ள பல அரபு நாடுகள் பின்தளதந்திற்கான உதவிகளை வழங்குகின்றன. வடஅயர்லாந்து போராளிகளுக்கு அயர்லாந்து பின்தளமாக இருந்தது. 1987 களிற்கு முன்னர் தமிழகத்தை விடுதலைப்புலிகள் பின்தளமாக பயன்படுத்திக் கொண்டனர். அதன் பின்னர் வன்னியில் அவர்கள் தமக்கு என ஒரு பாதுகாப்பான பின்தளத்தை உருவாக்கிக் கொண்டனர். கொக்காவில், மாங்குளம் மற்றும் முல்லைத்தீவு படைத்தளங்களின் அழிவும் அதற்காகவே நடந்தன.
ஆனால் வன்னியை சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்தபோது விடுதலைப்புலிகள் தமது பின்தளத்தை மலேசியாவுக்கு அல்லது, ஆபிரிக்க நாடு ஒன்றிற்கு மாற்றப்போவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தொடர்ச்சியாத் தெரிவித்துவந்தன. சிறீலங்கா அரசும் அதன் அடிப்படையில் தான் இந்த நாடுகளை குறிவைத்து வருகின்றது. அதிலும் மலேசியா அரசை தனது வலைக்குள் விழவைத்து மிகப்பெரும் நாசவேலைகளை அது முன்னெடுத்துவருகின்றது. அங்கு தஞ்சமடைந்த பலர் அண்மைக்காலங்களில் மலேசியா அரசின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்டு சிறீலங்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளுக்காகவே சிறீலங்கா அரசு முன்னர் களமுனையில் பணியாற்றிய தனது இராணுவ அதிகாரிகளை பல நாடுகளுக்கும் துணைத்தூதுவர்களாக நியமித்து வந்திருந்தது. எனினும் தமிழ் மக்களின் அழுத்தம் காரணமாக பல ஐரோப்பிய நாடுகள் படைஅதிகாரிகளின் நியமனங்களை நிராகரித்தபோதும், ஆசிய நாடுகள் சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழின அழிப்பை முன்னெடுத்துவருகின்றன. ற்போது மலேசியாவின் துணைத்தூதுவராக உள்ள மேஜர் ஜெனரல் எஸ் ஆர் மானவடுகே தான் வன்னிப் போரின் ஆரம்பத்தில் இருந்து செயற்பட்ட 57 ஆவது படையணியின் முதலாவது கட்டளை அதிகாரியாவார்.
2007 ஆம் ஆண்டு மாசி மாதம் பம்பைமடுவைத் கட்டளை மையமாகக் கொண்டு இந்த படையணி உருவாக்கப்பட்டபோது அதற்கு அவர் தலைமைதாங்கியிருந்தார். எனினும் விடுதலைப்புலிகள் அதன் கட்டளை மையத்தை தாக்கிஅழித்த போது அவர் வேறு பதவிக்கு நகர்த்தப்பட்டிருந்தார். தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் நடைவடிக்கைகளில் அதே படை அதிகாரிகள் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றனர். மலேசியாவுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையில் உள்ள உறவை மேலும் பலப்படுத்தும் நோக்கத்துடனும், தமிழ் மக்களை வேரோடு அழிக்கும் முயற்சியாகவும் கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்கா அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா தனது படை அதிகாரிகளுடன் மலேசியாவுக்கு சென்றிருந்தார்.
ஆசிய நாடுகளின் 14 ஆவது பாதுகாப்பு கண்காட்சியும், மாநாடும் என்ற நிகழ்வில் கலந்துகொள்ளவே அவர் மலேசியா சென்றிருந்தார். இன்நிகழ்வில் உலகநாடுகளின் பாதுகாப்பில் நாடுகள் அற்ற செயற்பாட்டாளர்களின் தாக்கம் என்ற உரையை நிகழ்த்துவதற்காக மலேசியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பின் ஹசையின் இன் அழைப்பில் சென்ற அவர் அங்கு சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கான களமமைப்பது தொடர்பாகவே பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது. எம்எச்௩70 விமானம் தொடர்பிலும் கோத்தபாயா தனது அனுதாபத்தை தெரிவித்து பலமான உறவைப்பேண முற்பட்டிருந்தார், ஆனால் மலேசியா அதனைவிட மோசமான மற்றுமொரு இழப்பைச் சந்தித்துவிட்டது.
சிறீலங்கா அரசும், இந்திய அரசும், மலேசியா அரசும் இணைந்து இரகசியமாக தமிழ் மக்களுக்கு எதிராக பல நாசவேலைகளை முன்னெடுத்துவருகின்றன என்பது தெளிவானது. இந்த நடவடிக்கை எதிர்வரும் காலத்தில் மேலும் தீவிரமடையலாம் என்பதையே சிறீலங்கா அரசின் நடவடிககைகள் எடுத்துக்காட்டுகின்றன. கோத்தபாயாவின் பயணமும், உரையும் அதனைத்தான் கட்டியம் கூறுகின்றன. ஆனால் இந்த நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பிழைத்து அதனை முறியடிக்கவேண்டியது எமது கைகளில் தான் உள்ளது.
நன்றி:
வேல்ஸ் இல் இருந்து அருஷ்
http://www.athirvu.com/newsdetail/616.html

Geen opmerkingen:

Een reactie posten