தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 juli 2014

ஊடகவியலாளர்களை நாளை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு!



ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 09:08.51 AM GMT ]
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க விபத்தொன்றில் சிக்கிய நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி - பாணந்துறை வீதியின் ஹொலிப்பிட்டிய பிரதேசத்தில் இன்று மதியம் ஒரு மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜே.வி.பி தலைவர் பயணித்த வாகனம் மீது, மணல் ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக ஜே.வி.பியின் தலைவருக்கு மார்பு பகுதியில் சிறிய உபாதை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் கூறியுள்ளனர்.
அவர் ஆபத்தான நிலையில் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சிகிச்சையின் பின் அனுரகுமார திஸாநாயக்க இன்று இரவு கொழும்பு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciw6.html
ஊடகவியலாளர்களை நாளை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 09:25.39 AM GMT ]
ஓமந்தை சோதனைச் சாவடியில் யாழ். ஊடகவியலாளர்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களை நாளைய தினம் விசாரணைக்கு வருமாறு ஓமந்தை பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த 25ம் திகதி யாழ்.குடாநாட்டிலிருந்து கொழும்பில் நடைபெறும் ஊடகப் பயிற்சி பட்டறைக்குச் சென்ற 7 பத்திரிகையாளர்கள் வவுனியா- ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து பொய்க்குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் படையினர் கஞ்சா போதைப் பொருளை வாகனத்தினுள் வைத்தமையினை நேரில் பார்த்த ஊடக வியலாளர்களை நாளைய தினம் காலை 11மணிக்கு ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் சாட்சிகளான  செய்தியாளர்கள், கே.ஹம்சனன், எஸ்.நிதர்ஷன், மற்றும் எஸ்.சொருபன்,  வி.கஜீபன், சுயாதீன ஊடகவியலாளர் இ.மயுரப்பிரியன், பி.பாஸ்கரன், சுயாதீன ஊடகவியலாளர் பெ.நியூமன், ஆகியோரையே விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciw7.html

Geen opmerkingen:

Een reactie posten