தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 juli 2014

புலிகளை இலங்கை இரணுவம் கொன்றது போல காசாவில் நடைபெறும் கொலைகள் !

புலிப்பார்வை படத்தில் பிரபாகரன் வேடத்தில் தயாரிப்பாளர் மதன் !


ஸ்டார்’ மற்றும் ‘ரட்சகன்’ படங்களை இயக்கிய பிரவீன்காந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அதோடு இசையமைப்பாளரும் அவரே. வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர் எஸ்.மதன்தான் இதில் பிரபாகரனாக நடித்துள்ளார். பாலசந்திரனாக 9ம் வகுப்பு மாணவன் சத்யா நடித்துள்ளார். இப்படம் குறித்து பிரவீன்காந்த் கூறியதாவது, “ஈழப்போரின் போது பிரபாகரனின் 13 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொன்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அவனுடைய மரணத்தை மறு விசாரணை செய்யும் விதத்தில் ஒரு வரலாற்று பதிவாய் எடுத்திருக்கிறோம் என்றார். ஆனால் ஆர்வக் கோளாறில் படம் எடுக்கப்போய் தற்போது பெரும் சிக்கலில் இவர் மாட்டியுள்ளார்.
அது என்னவென்றால் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் மகனை, ஒரு சிறுவர் போராளியா இவர் சித்தரிக்க முயன்றுள்ளது தான் பெரும் சிக்கலை கொடுத்துள்ளது. பாலச்சந்திரன் புலிகளின் சீருடை அணிந்து ஆயுதப் பயிற்சி எடுப்பது போலமும், அவர் துப்பாக்கி கொண்டு சுடுவது போலவும் பல காட்சிகள் அடங்கியுள்ளது. இதனை இவர்கள் வேண்டும் என்று செய்தார்களா ? இல்லை ஆர்வக் கோளாறில் அறியாமல் செய்தார்களா தெரியவில்லை. ஆனால் மேலாடை கூட இல்லாமல், வெறும் கால்சட்டையோடு இலங்கை இராணுவத்திடம் அகப்பட்ட பாலச்சந்திரனை ஒரு சிறுவர் போராளியாக எப்படி சித்தரிக்க முடியும்.
அவர் எந்த வகையிலும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாத ஒரு பிள்ளை. அவரை இவ்வாறு சித்தரித்தால் இலங்கை இராணுவம் அவரை சுட்டுகொன்றது சரி என்று அல்லவா அதன் அர்தம் பொருள் படும். அத்தோடு புலிகள் சிறுவர்களை படையில் சேர்கிறார்கள் என்று பாரிய பிரச்சாரத்தை மெற்கொண்டு தான் இலங்கை அரசு பல வெளிநாடுகளின் ஆதரவை பெற்றது. அதுக்கும் இது துணை போகும் வகையில் அல்லவா அமைந்துள்ளது. குறித்த இந்த படத்தில் இருந்து இக் காட்சிகள் உடனடியாக நீக்கப்படவேண்டும். அங்கே உண்மையாக என்ன நடந்ததோ அதனை படமாக்கினாலே போதும். இதற்கு எக்ஸ்ரா பிட்டிங் எல்லாம் போட்டு ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும், தலைவரின் மகனையும் கொச்சைப்படுத்தவேண்டாம்.
தமிழ் நாட்டில் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளது. எமது போராட்டத்தையும் அங்கே கொல்லப்பட்டவர்களையும் வைத்து பணத்தை சம்பாதிக்க நினைத்தால், அவர்கள் வம்சமே அழிந்துபோகும் !
http://www.athirvu.com/

புலிகளை இலங்கை இரணுவம் கொன்றது போல காசாவில் நடைபெறும் கொலைகள் !


முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உடைகளை களைந்து, கண்களையும் கைகளையும் கட்டிக் கொலைசெய்தது போல தற்போது காசாவில் நடைபெற்று வருகிறது. காசா பகுதிக்குள் உள் நுளைந்துள்ள இஸ்ரேலியப் படையினர், அங்கே உள்ள பலாஸ்தீன இளைஞர்களை சுற்றிவளைத்துள்ளார்கள். பல நூறு இளைஞர்களின் ஆடைகளை அகற்றி அவர்களை, நிலத்தில் முட்டிக்கால் போட வைத்துள்ள போட்டோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் பலரை இஸ்ரேல் இராணுவம் சுட்டுக்கொன்றுவிட்டது. மேலும் பலரை கைதிகளாக பிடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குள் செல்லும் காட்சிகளும் புகைப்படமாக வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லப் பிள்ளையான இஸ்ரேல், இவ்வாறு நடந்துகொள்வதை எந்த ஒரு உலக நாடும் இதுவரை கண்டிக்கவே இல்லை என்பது ஒரு புறம் இருக்க, காசா பகுதி மற்றுமொரு முள்ளிவாய்க்காலாக மாறி வருகிறது. முள்ளுகம்பி வேலிகளை போட்டு காசாவில் உள்ள இளைஞர்களை அந்த வேலிக்குள் நாள் கணக்காக முடக்கி வைத்துள்ளது இஸ்ரேலியப் படை. கடும் வெய்யிலுக்கு மத்தியில் இவர்கள் இவ்வாறு பல மணி நேரமாக சுட்ட மண் மீது நிற்கிறார்கள் என்று கூறப்படுகிறது. பல சித்திரவதைகளை செய்யும் இஸ்ரேல் படையினர் பின்னர் இவர்களில் சிலரை கொலைசெய்தும் உள்ளார்கள்.
புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/579.html

Geen opmerkingen:

Een reactie posten