தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 juli 2014

காணாமற் போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட விசாரணை மன்னாரில்!

திருகோணமலையில் பெண்ணொருவர் தீக்குளித்து தற்கொலை- தோணி கவிழ்ந்ததில் இருவர் சடலமாக மீட்பு
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 09:50.00 AM GMT ]
திருகோணமலை மாவட்டம் கந்தளாய், பேராறு பிரதேசத்தில் உடலில் தீமூட்டிக் கொண்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, அவர் தனக்குத் தானே தீயிட்டு கொண்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கடும் தீக்காயங்களுக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.
கந்தளாய் பேராறு பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான பெண்ணே இவ்வாறு இறந்துள்ளார்.
இவர் பல காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தோணி கவிழ்ந்ததில் இருவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி ஆற்று முகவாயில் பகுதியில் தோணி கவிழ்ந்து காணாமல்போன இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று நாவலடி ஆற்று முகத்துவாய் பகுதியில் மூன்று இளைஞர்கள் தோணியில் சென்றுள்ளனர்.
இதன்போது காற்று காரணமாக தோணி கவிழ்ந்துள்ளது. இருவர் நீரிழ் மூழ்கி காணாமல்போயுள்ளனர்.ஒருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் காணாமல்போன இருவரும் நேற்று இரவு சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் ஒருவர் பதுளை, மகியங்கனை வீதியை சேர்ந்த சுப்ரமணியம் நவமினி (33வயது) எனவும் மற்றைய நபர் கல்லடி, டச்பார் வீதியை சேர்ந்த அருளானந்தன் ஜேசுதாஸ் (23வயது)எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விற்பனை முகவர்களாக செயற்பட்டுவரும் இவர்கள் கடற்கரை பகுதியில் மதுபானம் அருந்திவிட்டு தோணியில் சென்றபோதே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தப்பியதாக தெரிவிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது தாங்கள் மூவர் மட்டுமே தோணியில் பயணம் செய்ததாக தெரிவித்தார்.
எனினும் அப்பகுதியில் அடையாள அட்டையொன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒரு நபரும் காணாமல்போயுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcix0.html
காணாமற் போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட விசாரணை மன்னாரில்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 10:31.40 AM GMT ]
காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளின் அடுத்த அமர்வு மன்னாரில் இடம்பெறவுள்ளது.
காணாமற் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அடுத்த அமர்வுகளை மாந்தை, மன்னார் மற்றும் மடுவிலும் மேற்கொள்ளவுள்ளது.
காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளின் அமர்வுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் 9ஆம் திகதிகளில் மாந்தை மேற்கிலும் 10ஆம் திகதி மன்னாரிலும் 11ம் திகதி மடுவிலும் இடம்பெறவுள்ளன.
இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு ஜனாதிபதியினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழு இலங்கையில் மனிதவுரிமை மீறல்கள் மற்றும் சட்ட மீறல்கள் இடம்பெற்றதா என்ற கோணத்திலும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
நேரடியாக உள்ளக விசாரணைகளை நடாத்தி அது தொடர்பான அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இந்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcix1.html

Geen opmerkingen:

Een reactie posten