தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 juli 2014

அகதிகள் அரசியல் உதைபந்துகளா? ஆஸி. கேர்ட்டின் தடுப்பு முகாமிற்கு செல்லத் திட்டமிடும் சாரா அம்மையார் பா.உ.!

ஜனாதிபதி சென்ற நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 11:39.45 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்ற ஹோட்டலில் சிறிய தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
அளுத்கமவில் அமைந்துள்ள ஈடன் என்ற நட்சத்திர ஹோட்டலின் அறையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த ஹோட்டலி;ல் நடைபெற்ற திருமண விருந்துபசாரமொன்றி; ஜனாதிபதி பங்கேற்றிருந்தார்.
ஜனாதிபதி நேற்று இந்த நிகழ்வில் பங்கேற்று விட்டு திரும்பிய சிறிது நேரத்தின் பின்னர் ஹோட்டலின் மற்றுமொரு கட்டிடத்தில் தீ பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டிடத்தின் நான்காம் மாடியில் அமைந்துள்ள அறையொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLciu0.html
அகதிகள் அரசியல் உதைபந்துகளா? ஆஸி. கேர்ட்டின் தடுப்பு முகாமிற்கு செல்லத் திட்டமிடும் சாரா அம்மையார் பா.உ.
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 11:53.13 PM GMT ]
மேற்கு அவுஸ்திரேலியாவின் கேர்ட்டின் தடுப்பு முகாமிற்கு விஜயம் செய்யப் போவதாக பசுமைக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஹன்சன்-யங் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களுக்குள் தடுப்பு முகாமிற்கு சென்று அங்கு சிறுவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்று அவதானிக்கப் போவதாக சாரா அம்மையார் தெரிவித்தார்.
தமது உரிமைகள் பற்றி புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளிப்பதும் தமது நோக்கமென அவர் குறிப்பிட்டார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் செனட்டர் சாரா கருத்து வெளியிட்டார்.
ஒரு மாத காலமாக அவுஸ்திரேலியாவின் சுங்கக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேரும் மத்திய அரசாங்கத்தால் அரசியல் பகடைக் காய்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்று அவர் சாடினார்.
இந்தக் குழுவினர் அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பிற்கு அழைத்து வரப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகளால் விசாரிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் ஸ்கொட் மொரிசன் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.
அதன்பிரகாரம், அவர்கள் ஞாயிற்றுக்கிழமை கொக்கோஸ் தீவுகளில் தரையிறக்கப்பட்டு விமானத்தின் மூலம் டெர்பி நகரின் தெற்கேயுள்ள கேர்ட்டின் தடுப்பு முகாமிற்கு மாற்றப்படுவதாகத் தெரிகிறதென கார்டியன் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களை இந்திய தூதரக அதிகாரிகள் விசாரிக்க அனுமதிப்பது எந்தளவுக்கு சட்டபூர்வமானதென செனட்டர் சாரா குறிப்பிட்டார்.
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கும் அவுஸ்திரேலிய அரசின் தீர்மானத்தை அந்நாட்டு எதிர்க்கட்சி விமர்ச்சித்துள்ளது.
இந்தியாவிலிருந்து 157 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்த படகொன்றை அவுஸ்திரேலிய அதிகாரிகள் சில வாரங்களுக்கு முன்னர் கைப்பற்றியிருந்தனர்.
அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு, இந்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்தித்து புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.
குறித்த படகில் உள்ள 157 புகலிடக் கோரிக்கையாளர்களை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறு இதன்போது இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அவுஸ்திரேலிய அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்ட படகில் இந்திய குடியுரிமை உள்ளவர்கள் இருந்தால் அவர்களை பொறுப்பேற்பதற்கு தயார் என இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனிடையே, புகலிடக் கோரிக்கையாளர்களை இந்திய அதிகாரிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றமை சட்டபூர்வமற்றது என அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் செனட்டர் சாரா ஹான்சன் யங் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய மண்ணில் உள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை சந்திப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் எதிர்காலத்தில் சந்தர்ப்பம் வழங்கப்படுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களை அரசியல் உதைபந்துகளாக கருதி இலகுவில் நகர்த்துவதற்கு பிரதமர் டோனி அபொட் தலைமையிலான அரசாங்கம் முயற்சிப்பதாகவும் சாரா ஹான்சன் யங் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLciu1.html

Geen opmerkingen:

Een reactie posten