தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 juli 2014

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அடுத்த முட்டுப்பாடு ஆரம்பம்: மர்மமான பாக்கிஸ்தான் நபர் !


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சுமூகமான உறவு ஒன்று தற்போது இருப்பதாக கூறப்படுகிறது. இல்லையென்றால் அதுபோன்ற ஒரு தோற்றப்பட்டு வெளியாகி வருகிறது என்று சொல்லலாம். ஆனால் உண்மையில் பல முரண்பாடுகள் இவ்விரு நாடுகளுக்கும் இடையே தோன்றியுள்ளது. இதற்கு காரணமாக இருப்பது பாக்கிஸ்தான் தான். சமீபத்தில் நரேந்திர மோடியை திருப்த்திப்படுத்த இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான் தூதுவரை மாற்றுமாறு மகிந்தர் பாக்கிஸ்தானிடம் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று பாக்கிஸ்தானும் தூதுவரை மாற்றியது. ஆனால் தர்போது பிரச்சனை வேறு ரூபத்தில் தோன்றியுள்ளது.
சமீபத்தில் தழிழகத்தில் கைதான இலங்கையைச் சேர்ந்த முஸ்லீம் நபர் ஒருவர், பாக்கிஸ்தானின் உளவாளி என்பது பலராலும் அறியப்பட்ட உண்மை. அவரை கியூ பிரிவு பொலிசார் தொடர்ந்து விசாரித்து வந்ததில், கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் தூதரகத்தில் மேலும் ஒரு நபர் இருப்பதாகவும் அவர் ஐ.எஸ்.ஐ உளவாளி எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் இந்திய மத்திய பாதுகாப்பு துறையினர் மேலும் குழப்பிப்போயுள்ளார்கள். அவர் யார் என்பது தொடர்பான தகவலை இலங்கைக்கு அனுப்பியுள்ளார்கள் றா அமைப்பினர். ஆனால் அப்படி ஒரு நபர் கொழும்பில் இல்லை என்று கோட்டபாயவின் அலுவலகம் அறிவித்துள்ளதாம்.
ஆனால் கொழும்பில் உள்ள தூதுதரகத்தில் தான் குறிப்பிட்ட உளவாளி பதுங்கி இருப்பதாக இந்தியா நம்புகிறது. இதனால் இந்தியாவில் உள்ள ரா அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் , இன்ரலிஜன் புயூரோ பிரினர் தற்போது கொழும்புடன் தொடர்புகளை ஏறபடுத்தியுள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Geen opmerkingen:

Een reactie posten