[ புதன்கிழமை, 30 யூலை 2014, 12:11.11 AM GMT ]
பதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நான் அரசியலுக்கு வரவில்லை. அமைச்சுப் பதவியை எந்த நேரத்திலும் துறக்கத் தயார். நான் வெளியேறினேன் என்பதனால் அவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படப் போவதில்லை.
நாட்டையும் அப்பாவி வறிய மக்களையும் கருத்திற் கொண்டே நான் தீர்மானம் எடுக்கின்றேன்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் ஜனாதிபதி ஆர்வம் காட்டுகின்றார்.
நான் எந்தக் கட்சியில் எந்தப் பதவி வகித்தாலும் அது மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டதாக அமையும்.
சோசலிசத்தின் ஊடாக மக்களுக்கு உதவி வழங்குவதே எனது நோக்கமாகும். என் நோக்கங்களிலிருந்து நான் ஒருபோதும் மாறப்போவதில்லை.
நான் ஜனாதிபதி மீது நேசம் கொண்டுள்ளதாக அடிக்கடி என்னிடம் தெரிவிப்பார் எனினும், ராஜித என்னை விடவும் கொள்கைகள் மீது அதிக பற்று கொண்டவர் என ஜனாதிபதி குறிப்பிடுவார்.
அனைத்து இன மக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மனிதத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பேருவளையில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchs7.html
விவசாயிகளின் வாக்குகள் மிகவும் முக்கியமானது: மாதுலுவே சோபித தேரர்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 02:09.49 AM GMT ]
நாட்டின் மொத்த சனத்தொகையில் 74 வீதமானவர்கள் விவசாயிகளாகும். இதில் 54 வீதமானவர்கள் நெல் விவசாயிகளாகும்.
நாட்டின் தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தலின் போது, விவசாயிகளின் வாக்குகள் முக்கியமானது. எனினும் தற்போது விவசாயிகளும் அவர்களது குடும்பங்களும் பெரும் அசௌகரியங்களையும் சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
விவசாயிகள் தங்களது பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை. நெல் விவசாயம் செய்ய போதியளவு நீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. விவசாயிகளின் கைகளில் பணமில்லை. இதனால் அவர்களினால் விசம் குடித்து தற்கொலை செய்து கொள்ளக்கூட முடியவில்லை.
தற்போது நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் வரட்சி காரணமாக இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே காரணம் என மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchtz.html
குறைகளை சுட்டிக்காட்டுவோர் அரசாங்கத்திற்கு எதிரிகளாக தெரிகின்றனர்!: விமல் வீரவன்ச- ஆட்சியில் இருக்கும் போது சுதந்திரக் கட்சிக்கு கண் தெரிவதில்லை
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 02:21.48 AM GMT ]
பயணம் பிழையானது என சுட்டிக்காட்டுவோர் எதிரிகளாகவும், பிழைகளை மூடி மறைத்து முகஸ்துதி பாடுவோர் நண்பர்களாகவும் கருதும் அரசாங்கமொன்றின் எதிர்காலம் பற்றி எம்மால் குறிப்பிட முடியாது.
அன்று எதிரிகளாக இருந்தவர்கள் தற்போது அரசாங்கத்திற்கு நண்பர்களாக மாறியுள்ளனர்.
இவ்வாறான ஓர் அரசாங்கத்தை எவ்வளவு காலத்திற்கு ஆட்சியில் வைத்திருக்க வேண்டும் என்பது மக்களின் தீர்மானமேயாகும்.
நாட்டின் முற்போக்கான மாற்றங்களை செய்ய அரசாங்கத்திற்கு விருப்பம் இல்லாவிட்டால் அது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி சொல்ல முடியாது.
இந்த அரசாங்கத்தை உருவாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.
பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரின் கட்சி தனித்து போட்டியிடுவது பாதிப்பு என ஜனாதிபதி கருதினால் அதற்கு உரிய தீர்வினை ஜனாதிபதியே எடுக்க வேண்டுமென விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியில் இருக்கும் போது சுதந்திரக் கட்சிக்கு கண் தெரிவதில்லை - மத்திய மாகாண அமைச்சர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது கண் தெரிவதில்லை, காது கேட்பதில்லை என மத்திய மாகாண அமைச்சர் பந்துல எஸ்.பி.யாலேகம தெரிவித்துள்ளார்.
மாத்தளை ரத்தோட்டை தொகுதியில் நடைபெற்ற கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது மிகவும் துரதிஷ்டவசமான நிலைமை. சுதந்திரக் கட்சியை விட்டுச் செல்ல எமக்கு வேறு இடமில்லை.
ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதாக கூறி ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வந்தவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு கேடு விளைவித்து வருகின்றனர்.
அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு சென்று மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டவர்கள் அபிவிருத்தி செய்வதாக கூறி, தமது மடியை நிரப்பி கொள்கின்றனர் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULcht1.html
Geen opmerkingen:
Een reactie posten