தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

அகதிகள் பிரகடன விதிகளில் இந்தியாவை அழைக்க இடமில்லை!- பால விக்னேஸ்வரன்!



ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய உறவுத் திட்டங்கள்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 04:09.46 PM GMT ]
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை புதுப்பித்துக் கொள்ள இரண்டு நாடுகளும் இருதரப்பிலும் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் பொருளாதார அமைச்சர் கசுயாசி அகாபா இன்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்த போது இந்த கருத்தை வெளிப்படுத்தினார்.
இதன்போது இரண்டு நாடுகளின் தரப்பிலும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்துறைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில் ஜப்பானின் புதிய முதலீடுகளை தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கையின் ஒலிபரப்பு மற்றும் சுற்றுலாத்துறைக்கு உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பானிய அமைச்சர் உறுதியளித்தாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcho3.html
ஞானசார தேரர் மற்றும் சம்பிக்க ஆகியோருக்கு எதிராக 2 லட்சம் முறைப்பாடுகள்!
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 04:21.59 PM GMT ]
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு எதிராக 24 மணித்தியாலங்களுக்குள் 2 லட்சம் முறைப்பாடுகள் முகநூல் நிர்வாகத்துக்கு கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் ஆசிய நாடுகளில் இருந்தே அதிக முறைப்பாடுகள் கிடைத்தன.
இந்தநிலையில் பொதுபல சேனாவின் வாசகர் பக்கத்துக்கு எதிராக மொத்தமாக 50 லட்சம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பங்களாதேஸ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எந்த மதத்துக்கு எதிராகவும் தாம் முகநூலை பயன்படுத்தவில்லை என்று ஞானசார தேரர் முகநூல் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcho4.html
அகதிகள் பிரகடன விதிகளில் இந்தியாவை அழைக்க இடமில்லை!- பால விக்னேஸ்வரன்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 11:33.49 PM GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு படகில் சட்டவிரோதமாகப் பயணித்து தஞ்சம் கோர முற்பட்ட 157 இலங்கைத் தமிழ் அகதிகளை கடந்த மாதம் நடுக்கடலில் தடுத்து நிறுத்திய அவுஸ்திரேலிய அரசு, இப்போது, அவர்களை இந்திய அரசு விசாரிக்க உதவ, தமது நாட்டு பெருநிலப்பரப்புக்குள் அனுமதித்திருப்பதாக கூறியிருக்கிறது.
இது குறித்து அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றிடம் பேசிய அவுஸ்திரேலியக் குடிவரவு அமைச்சர் ஸ்காட் மாரிசன்,
இவர்கள் அனைவரும் இந்தியாவின் புதுச்சேரிக்கு அருகில் இருந்து வந்தவர்கள் என்றும், இந்தியாவில் இவர்களுக்குப் பாதுகாப்பு பிரச்சினை ஒன்றும் இல்லை என்பதால், இவர்களைப் பொருளாதாரக் குடியேறிகளாகவே கருதவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
அமைச்சரின் இந்தக் கருத்து யூகத்தின் அடைப்படையில் அமைந்தது என்கிறார் அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையைச் சேர்ந்த பால விக்னேஸ்வரன்.  அகதிகள் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள அவுஸ்திரேலிய அரசு, இந்த அகதிகளை முறையாக விசாரித்து முடிவெடுக்க வேண்டும், இந்தியாவை இதில் நுழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இது தொடர்பாக பல ஊகங்களை செய்துள்ளார் என்பதே எமது கருத்து மட்டும் அல்ல இங்கு உள்ள அகதிகளுக்காக போராடும் அமைப்புகளினதும் கருத்தாக உள்ளது.
இந்தியாவில் இருந்து வந்தவர்கள் பொருளாதார அகதிகள்தான், இவர்களுக்கு அங்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று. ஆனால் ஐக்கிய நாடுகள் கூட சிலாகித்து பேசி இருக்கின்றது.
அமைச்சர் இவர்கள் தொடர்பாக சொல்லும் விடயங்கள் உண்மையாக இருந்தால் இந்திய அதிகாரிகள் விசாரிப்பதற்கான தேவையே இல்லை என்பதுதான் எமது கருத்தாக உள்ளது.
இங்கு வருபவர்கள் தம்மை அகதிகள் என அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு புகலிடம் வழங்க வேண்டியது இந்த நாட்டின் கடப்பாடாக உள்ளது, அதை விட்டு முன் கூட்டியே அவர்கள் பொருளாதார அகதிகள் என்று வர்ணிப்பது சிறந்தது அல்ல.
அகதிகள் பிரகடனத்தின் அமைவாக இவர்கள் அகதிகள் என்று தம்மை அடையாளப்படுத்தினால் இவர்களை தகுந்த முறையில் விசாரிக்க வேண்டும். அதை விட்டு முன்பு வந்தவர்கள் தொடர்பில் இந்தியா உதவியதால் இவர்களுக்கும் இந்தியா உதவ வேண்டும் என்று மொரிசன் நினைப்பது வியப்பாக உள்ளது.
இவர்களின் பிரச்சினையில் இந்திய மூக்கை நுழைப்பது அகதிகள் பிரகடனத்தை மீறுவதாகவே உள்ளது.
இவர்களின் இத்த புகலிடக் கோரிக்கை விடயத்தில் மொரிசன் சிறந்த ஒரு முடிவு எடுப்பார் என நம்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார் பால.விக்னேஸ்வரன்.
அகதிகள் குறித்து சந்தேகம்
அகதி அந்தஸ்து கோரி அவுஸ்ரேலியா சென்ற 157 பேரில் 40 பேர் அண்மையில் இலங்கையில் இருந்து சென்றவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்தியா அதிகாரிகள் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணைகளில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இவர்களில் அநேகமான சிங்களவர்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களையும் இந்தியா பாரம் எடுக்குமா என்பது ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக உள்ளது
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcho5.html

Geen opmerkingen:

Een reactie posten