[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 12:20.44 AM GMT ]
அளுத்கம பேருவளை சம்பவம், பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கமும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுமே காரணம் என்பது புலனாகியுள்ளது என ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி தொடர்பில் அவர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இஸ்லாமிய அமைப்புக்களின் ஒன்றியத்துடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அமைச்சர் ஹக்கீமுடன் கல்முனை நகரசபை மேயர், கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட சிலர் சவூதிக்கு விஜயம் செய்துள்ளனர்.
ஹக்கீம் விமர்சனம் செய்தமை தொடர்பில் ஜனாதிபதிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து குறித்த அமைப்பினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஹக்கீமின் முறைப்பாடுகள் பொய்யானவை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLciqz.html
ஜனாதிபதியின் நிபுணர் குழு, ஐ.நா விசாரணைக் குழுவை விடவும் ஆபத்தானது! இராஜதந்திரிகள் எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 12:27.32 AM GMT ]
போர்க்குற்றச் செயல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் சேர் டெஸ்மன்ட் டி சில்வா தலைமையிலான மூவர் அடங்கிய நிபுணர் குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இந்த விசாரணைக் குழுவானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினை விடவும் பத்து மடங்கு ஆபத்தானது என துறைசார் புத்திஜீவிகள் சுட்டிக்காட்;டியுள்ளனர்.
ஜனாதிபதியின் நிபுணர் குழுவிற்கு எந்தவிதமான எல்லைகளோ அல்லது வரையறைகளோ விதிக்கப்படவில்லை.
ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவானது ஐக்கிய நாடுகள் அமைப்பு என்ற வரையறைக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கும்.
ஜனாதிபதியின் நிபுணர் குழுவினை வேறு தரப்பினர் கூட வழிநடத்தலாம். இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டால் அது நாட்டை மிக மோசமாக பாதிக்கும்.
பாரியளவு ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் என தெரிந்திருந்தும் வெளிநாட்டு பிரதிநிதிகளை உள்ளடக்கிய நிபுணர் குழு ஒன்றை நியமிப்பது புத்திசாதூரியமற்ற நடவடிக்கையாகும் என துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இராஜதந்திரிகள், அரசியல் ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLciq0.html
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 12:53.43 AM GMT ]
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைமைப் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வகித்து வருகின்றார்.
சம்பந்தனின் பூரண ஆசீர்வாதத்துடன் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சம்பந்தனின் வயது முதிர்ச்சியைக் கருத்திற் கொண்டு புதிய தலைமை ஒன்றுக்கு சந்தர்ப்பம் வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தலைமைத்துவ பதவியில் ஏற்படுத்தப்பட உள்ள மாற்றங்கள் தொடர்பில் உயர்மட்ட உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21, 22 அல்லது 23ம் திகதியில் கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தின் போது கட்சியின் புதிய தலைமை குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக தொடர்ந்தும் சம்பந்தன் பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLciq2.html
இலங்கை தனது பிரதான எதிரியாக ஊடகவியலாளர்களை கருதுகின்றது: ஊடகவியலாளர் தயாபரன், செல்வம் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 03:15.32 AM GMT ]
யாழில் இருந்து கொழும்பு சென்ற ஊடகவியலாளர்களுக்கு எதிராக ஓமந்தையில் நேற்று இரவு இராணுவத்தினர் திட்டமிட்டு செய்த சதி தொடர்பாக சிரேஸ்ட ஊடகவியலாளர் தயாபரன் மற்றும் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் லங்காசிறி வானொலியின் விசேட செவ்வியில் கலந்து கொண்டு தமது கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஓமந்தை இராணுவக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியே ஒத்துக் கொண்டார்.
பொலிஸார் கடமைக்குத் தான் உள்ளனர். சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினரே செய்கின்றனர். இலங்கை அரசு தனது பிரதான எதிரியாக ஊடகவியலாளர்களை கருதுகின்றது என்றார் சிரேஸ்ட ஊடகவியலாளர் தயாபரன்.
மேலும், ஊடகவியலாளர்கள் மீதான நெருக்குவாரம் வடக்கில் அதிகரித்து வருகின்ற நிலையில், வடக்கு- தெற்கு ஊடகவியலாளர்கள் இணைந்து வலுவான கூட்டமைப்பொன்றை உருவாக்க பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழ் ஊடகவியலாளர்களை நொண்டிச் சாட்டுக் சொல்லி சிறையில் அடைக்க வேண்டுமென்பதே அரசின் குறியாக உள்ளது.
மண் மக்கள் சார்ந்து குரல் கொடுப்பவர்களுக்கு இதே நிலைதான். சர்வதேசத்திடம் முறையிடலாம். ஆனால் பாதுகாப்பை உறுதிப்படுத்த முயாது. ஏனெனில் தமிழர்கள் கேள்விக்குறியான, ஆடு மாடுகளை விட மோசமான நிலையில் பார்க்கப்படுகின்றனர் என செல்வம் அடைக்கலநாதன் எம்பி தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLciry.html
Geen opmerkingen:
Een reactie posten