இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு எந்த ஆசிய நாடும் இடமளியாது: பீரிஸ்
|
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் விசாரணை ஒன்றை நடத்துவதற்கு பெரும்பாலும் எந்த ஆசிய நாடும் இடமளிக்காது என்று கூறியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இது சந்தர்ப்ப வசத்தாலோ அல்லது விபத்தாகவோ வந்த விடயம் அல்ல என்றும், இந்த நாடுகளை அத்தகைய தீர்மானத்துக்கு வருவதற்கான இணக்க நிலைக்கு இலங்கை அரசே வரவழைத்தது என்றும் கூறினார்.
கடந்த வார இறுதியில் குருநாகலில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
மேற்குலகின் அரசியல் நலன்களுக்காக இலங்கை மீது திணிக்கப்பட்டுள்ள இந்த விசாரணை அநீதியானது என்பதில் பூமிப் பந்தின் பெரும்பாலான நாடுகள் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளன என்றார் அவர்.
எங்கள் நாட்டுக்குத் தீங்கு விளைவிப்பதற்காகப் பெரும்தொகைப் பணம், அரசியல் செல்வாக்கு எல்லாம் பிரயோகிக்கப்பட்டாலும் உண்மை ஒருநாள் வெளிப்பட்டே தீரும் என்று குறிப்பிட்ட அவர், பொதுநலவாய அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்களின் நடவடிக்கைகள் குழுவின் தலைவரான தன்ஸானிய வெளிவிவகார அமைச்சர் அண்மையில் இலங்கை வந்திருந்த போது இலங்கைக்கான ஆதரவை உறுதியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியிருந்தமையை நினைவுபடுத்தினார்.
இது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஆதரவு பெருகி வருவதை உறுதிப்படுத்தும் ஒரு சுட்டி என்றும் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டார்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்களில் இலங்கை எட்டியிருக்கும் அபிவிருத்தியும், இணக்கமும் ஏனைய நாடுகளை விட மிக உயர்வானது எனக் குறிப்பிட்டு தன்ஸானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கையை மெச்சியிருக்கின்றார் என்பதையும் பீரிஸ் சுட்டிக்காட்டினார். |
28 Jul 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1406541355&archive=&start_from=&ucat=1&
157 அகதிகளும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவர்! அவுஸ்ரேலியா அமைச்சர் தகவல் ( படங்கள் இணைப்பு)
|
இந்தியாவில் இருந்து தமது நாட்டுக்கு சட்டவிரோதமாக வந்த 157 தமிழர்களையும் மீண்டும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்ரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் இன்று காலை அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவுக்கு வந்தவர்கள் இந்திய அகதி முகாமில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர்களே என்றும், இந்த நிலையில், முழுமையான ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் இந்தியாவில் எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை என்றும், இவர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஸ்கொட் மொரிஸன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நாடு திரும்ப மறுக்கும் எவரையும் அவுஸ்ரேலியா தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் நௌரு அல்லது ப்புவா நியூகினியாவில் உள்ள தனது விசாரணை முகாம்களுக்கு அனுப்பக்கூடும் என்று கருதப்படுகிறது.
|
28 Jul 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1406573055&archive=&start_from=&ucat=1& |
|
Geen opmerkingen:
Een reactie posten