[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 03:04.01 AM GMT ]
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுமார் 50 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் நாகப்பட்டிணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அதில் 11 பேர் இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று அவர்கள் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் பாதுகாப்பு குறித்து தாம் அச்சம் கொண்டுள்ள நிலையில் அவர்களை விடுவித்து தருமாறு உறவினர்கள் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகியிடம் கோரிக்கை மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLchx7.html
தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதில்லை: ஜாதிக ஹெல உறுமய
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 03:18.09 AM GMT ]
ஏற்கனவே அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, ஊவா மாகாணசபை தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இரண்டாவது பங்காளி கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் தமது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனினும் தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து தமது கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அந்தக்கட்சியின் பேச்சாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தின் கொள்கை மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச சுமத்தியுள்ள குற்றச்சாட்டை தமது கட்சியும் ஏற்றுக்கொள்வதாக வர்ணசிங்க கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgoy.html
இலங்கை விஜயம் வெற்றி! தென்னாபிரிக்க நாடாளுமன்றத்துக்கு ரமபோஸா அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 03:47.21 AM GMT ]
தென்னாபிரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தென்னாபிரிக்காவின் நல்லிணக்க நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்வதற்காகவே தமக்கு இலங்கையால் அழைப்பு விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
தமது குழு இலங்கையின் ஜனாதிபதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட்டவர்களை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்க இணைந்து செயற்படுவதற்கு தென்னாபிரிக்கா தயாராக இருப்பதை தாம் அறிவித்ததாகவும் ரமபோஸா தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgoz.html
Geen opmerkingen:
Een reactie posten