தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 juli 2014

அகதிச் சட்டத்தை மீறும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கம்!

அடுத்த பொது வேட்பாளராக ஷிரானியா….

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு ஷிரானி பண்டாரநாயக்கவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மாதுலுவே சோபித தேரர் தலைமையில் அண்மையில் கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் பிரேரணை மூலம் பதவி கவிழ்க்கப்பட்டது முதல் இதுவரையில் ஷிரானி எந்தவொரு அரசியல் கூட்டத்திலும் பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்கத்கது. எவ்வாறெனினும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பது குறித்த இறுதித் தீர்மானங்கள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டவர்களின் பெயர்களும் பொது வேட்பாளருக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/77480.html

தேர்தல் காச்சலில் சகாக்களை மிரட்டும் மகிந்தர்…

ஜனாதிபதி தேர்தல்களுக்கு முன்னதாக விருப்பமின்றி பாராளுமன்றத் தேர்தல்களை நடாத்த நேரிடும் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் 2015ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எனினும் சில அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களின் நடவடிக்கைகள் காரணமாக பாராளுமன்றத் தேர்தல்களை முன்னதாக நடாத்த நேரிடலாம் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சுப் பதவிக்கான கடமைகளை செய்யாது சிலர் அரசாங்கத்தை விமர்சனம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவது தொடர்பில் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டுக்கு தாம் ஆற்றி வரும் சேவைகள் குறித்து மக்களுக்கு தெளிவிருப்பதாகவும் இதனால் தேர்தல்களுக்கு தாம் அஞ்சப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் திடீரென பாராளுமன்றத் தேர்தல்களை நடத்தினால் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும் ஜனாதிபதி அல்லது பாராளுமன்ற தேர்தல்கள் எப்போது நடத்தப்படும் என்ற திகதிகளை ஜனாதிபதி வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சில அமைச்சர்கள் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/77483.html

அரசாங்க நிதி ஒதுக்கீடு மந்தம் சம்பிக்க போர்க் கொடி

அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி குறித்த புள்ளி விபரத் தகவல்கள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனைவிடவும் துல்லியமான முறையில் புள்ளி விபரத்; தகவல்கள் வெளியிடப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நவீன தொழில்நுட்ப முறைமைகளை பயன்படுத்தி அதன் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் பாரியளவில் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் சர்வதேச அரங்கில் தகவல் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/77486.html

மன்னாரில் பல கோடி ரூபாய் மோசடி! வீதிக்கு வந்த பலர்…

மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் வசித்துவரும் பிரபல வர்த்தகர் ஒருவர் பணமோசடியில் ஈடுபட்டு குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளமை குறித்து பாதீக்கப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் இவரை நம்பி அதிகலவான வர்த்தகர்கள்,அரச தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இவரிடம் சீட்டு போட்டிருந்தனர். சில ஆண்டுகளாக குறித்த சீட்டு பிடிக்கும் நடவடிக்கைகளும் இடம் பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக இவரது வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் காணப்பட்டதோடு குறித்த நபரும், அவருடைய குடும்பத்தினருடைய நடமாட்டங்களும் இல்லாமை காணப்பட்டுள்ளது.
-இதனை அவதானித்த சீட்டு பிடித்த அங்கத்தவர்கள் இவர் தொடர்பில் அயலவர்களிடம் விசாரித்த போது குறித்த நபர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து குறித்த நபருடைய வீடு மற்றும் வியாபார நிலையங்களுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் உற்பட தலைமறைவாகியுள்ள நபருக்கு கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் கம்பனி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகைதந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவுசெய்து வருகின்றனர்.குறித்த நபர் பல கோடி ரூபாய் பணத்துடன் தலைமறைவாகியிருக்க கூடும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/77489.html

அகதிச் சட்டத்தை மீறும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கம்


புகலிடக் கோரிக்கையாளர்களிடம் இந்திய அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடாத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும், இது சட்ட விரோதமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடொன்றிலிருந்து புகலிடக் கோரும் நபர்களை அதே நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்த அனுமதிப்பது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளனர்.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரத்தில் இந்திய அதிகாரிகளின் பங்களிப்பு தெளிவற்ற நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் பற்றிய இரகசிய தகவல்களை இந்திய அதிகாரிகளுக்கு வழங்குவது அபாயகரமானது என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/77492.html

Geen opmerkingen:

Een reactie posten