தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 31 juli 2014

ராஜீவ் காந்தி இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பியமை குறித்து கசிந்துள்ள புதிய தகவல்

இலங்கைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்றி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமைதிப்படையை அனுப்பி வைத்தார் என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது, இலங்கை தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன, தமக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடப்பதாகவும், இதனால் இந்திய அமைதிப்படையை அனுப்பி வைக்குமாறும் ராஜீவ் காந்தியிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, ராஜீவ் காந்தியும் அமைதிப் படையை அனுப்ப ஒப்புக் கொண்டார்.
ராஜீவ் காந்தியும் சரி.. அவரது அமைச்சரவை சகாக்களும் சரி யாழ்ப்பாணத்தில் உணவுப் பொட்டலம் போடும் முன்பாக ஜெயவர்த்தனவிடமும் ஐ.நா.வில் உள்ள இந்திய பிரதிநிதியிடமும் தெரிவிக்கவில்லையே என்பதைப் பற்றியெல்லாம் உணரவில்லை.
சர்வ சாதாரணமாக உணவுப் பொட்டலங்களை யாழ்ப்பாணத்தில் போட்டனர்.
ராஜீவ் காலத்தில் இலங்கை பிரச்சினை தொடக்கம் முதலே தவறாக கையாளப்பட்டது. கடைசியில் அது தோல்வியைத்தான் சந்தித்தது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLcgr1.html

Geen opmerkingen:

Een reactie posten