தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 juli 2014

இலங்கைத் தமிழர் விவ­காரம் உள்­நாட்டு விட­ய­மாகும்!- பி.ரி.ஐ செய்தியை மறுக்கிறார் சேஷாத்ரி ஷாரி!!!

ஏவுகணை தாக்குதல் நடத்திய இரு புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 09:35.06 AM GMT ]
அன்டனோவ் 32 ரக விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி, 32 பாதுகாப்பு படையினரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி திருமதி ஸ்வர்ணாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏவுகணை படைப் பிரிவை சேர்ந்த இரண்டு பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
2000ம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில் பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கி பயணித்த அன்டனோவ் 32 ரக விமானம் வில்பத்து வனப்பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது, ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchv3.html

கொடிகாமம் அருகில் இருந்து பருத்தித்துறை செல்லும் எழுதுமட்டுவாழ் வீதியின் அவலம்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 10:04.37 AM GMT ]
எழுதுமட்டுவாழுக்கும் நாகர்கோவிலுக்குமாக ஒரு வீதியுண்டு,  உண்மையில் அது பாவப்பட்ட வீதிதான்,  வடக்கில் வீசுகின்ற வசந்தத்துக்கு ஒரு நல்ல உதாரணம் எழுதுமட்டுவாழ் நாகர்கோவில் வீதி.
வடக்கில் தேர்தல் வருங்காலங்களில் மாடுகள் மட்டுமே படுத்துறங்கும் எத்தனையோ வீதிகளுக்கு காப்பெற் தடவிய அரசாங்கம் காலம்காலமாக மனிதர்கள் பாவிக்கும் எத்தனையோ வீதிகளுக்கு கிறவலைக்கூட போட மறந்தது,  காரணம் என்னவென்றால் அந்த ஊர்களுக்குள் தங்களையும் தங்கள் அடிவருடிகளையும் ஆதரிக்க யாரும் இல்லை என்பது தான்.
வீதி தொடக்கம் வீட்டுத்திட்டம் வரை தமிழ்த் தேசியம் தமிழுணர்வு அதிகம் உள்ளவர்களுக்கு பழிவாங்கல் நடப்பது ஊர்களுக்குள் சர்வசாதாரணமாக நடக்கின்றது.  எழுதுமட்டுவாழ் நாகர்கோவில் வீதிக்கும் அந்த விதிதான்.
மன்னர் காலத்து வீதி என்று சொல்லுமளவில் அது பாழடைந்து கிடக்கின்றது.
இந்த வீதி திருத்தப்படாமலே நெடுங்காலமாய் இருப்பதால் அருகில் உள்ள கொடிகாமத்துக்கு செல்ல முடியாமல் வங்கி உள்ளிட்ட பல தேவைகளுக்கு பருத்துறை செல்ல வேண்டியுள்ளதாக அந்த சுற்றுவட்டார மக்கள் மிகுந்த கவலை வெளியிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchv4.html
இலங்கைத் தமிழர் விவ­காரம் உள்­நாட்டு விட­ய­மாகும்!- பி.ரி.ஐ செய்தியை மறுக்கிறார் சேஷாத்ரி ஷாரி
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 10:17.40 AM GMT ]
இலங்கைத் தமிழர் விவ­காரம் உள்­நாட்டு விட­ய­மாகும். இந்த விவ­காரம் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது என்­பதே எமது நிலைப்­பா­டாகும் என்று பார­தீய ஜனதாக் கட்­சியின் தேசிய செயற்­குழு உறுப்­பி­னரும் வெளி­யு­றவுக் கொள்­கைக்­கான ஏற்­பாட்­டா­ள­ரு­மான சேஷாத்ரி ஷாரி தெரி­வித்­துள்ளார். 
இலங்கை இந்­திய வர்த்­தக வாணிப நட­வ­டிக்­கை­களில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாயின் தமிழர் விவ­கா­ரத்­திற்கு தீர்வு காணப்­பட வேண்டும் என்று இலங்­கை­யிடம் எடுத்­துக்­கூ­றி­யுள்­ள­தாக சேஷாத்­திரி சாரி தெரி­வித்­தாக பி.ரி.ஐ. செய்தி ஸ்தாபனம் சில தினங்­க­ளுக்கு முன்னர் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.
இந்த செய்­திக்கு மறுப்பு தெரி­விக்கும் வகையில் அனுப்­பி­வைத்­துள்ள விளக்க அறிக்­கை­யி­லேயே சேஷாத்ரி சாரி மேற்­கண்­ட­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ளா­தா­வது:
தமிழர் விவ­கா­ரத்­திற்கு தீர்வு காணப்­பட்­டாலே இலங்கை இந்­திய வர்த்­தக வாணிப நட­வ­டிக்­கை­களில் முன்­னேற்­றத்தை காண­மு­டியும் என்று நான் தெரி­வித்­த­தாக வெளி­யான செய்தி தவா­றா­னது. சிங்­கப்­பூரில் நடை­பெற்ற கருத்­த­ரங்கில் இவ்­வாறு நான் எந்தக் கருத்­த­தையும் தெரி­வித்­தி­ருக்­க­வில்லை.
நான் கடந்த 20ம் திகதி முதல் 22ஆம் திக­தி­வரை கொழும்­புக்கு விஜயம் செய்­தி­ருந்த போது அங்கு இடம்­பெற்ற கருத்­த­ரங்கு மற்றும் நேர்­கா­ணல்­களில் இலங்கை, இந்­திய உறவு தொடர்பில் எனது நிலைப்­பாட்­டினை விளக்­கி­யி­ருந்தேன்.
இலங்கை தமிழர் விவ­கா­ர­மா­னது உள்­நாட்டு விட­ய­மாகும். இதனை சர்­வ­தேச மயப்­ப­டுத்­து­வது கூடாது, இலங்­கையின் வர்த்­தக வாணிப செயற்­பாடு தொடர்பில் உயர்ந்த எண்­ணத்­தையே நாம் கொண்­டுள்ளோம்.
இரு தரப்பு வர்த்­தக வாணிப நட­வ­டிக்­கைளில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாயின், தமிழர் விகா­ரத்­திற்கு தீர்வு காணப்­பட வேண்டும் என்று நாம் கூறி­ய­தாக வெளி­யி­டப்­பட்ட செய்தி தவறானது மட்டுமல்ல, வெறுப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
அத்துடன் இலங்கை இந்திய உறவு தொடர்பான எனது நிலைப்பாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றது  என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchv6.html

Geen opmerkingen:

Een reactie posten