சிறீலங்கா சுதந்திரக் கட்சியை அதன் தற்போதுள்ள தலைவரிடமிருந்து மீட்பதற்காக கட்சிக்குள் உள்ள மாற்று அணியொன்று முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிர்வாகம் குறித்து அதிருப்தியடைந்துள்ள மூத்த உறுப்பினர்கள் ஆதரவு அந்த குழுவினருக்கு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முயற்சியில் தொடர்புபட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் நெருக்கமானவர்கள் எனவும், புதிய உறுப்பினர்கள் மற்றும் கட்சி தாவிகளால் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய ஆட்சி அமைவதற்கு காரணமான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை பலப்படுத்துவது அவசியம் என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட குழுவினர் அடுத்த பாராளுமன்ற தேர்தலிற்கு முன்னர் வெளிப்படையாக செயற்படுவார்களா என்பது தெரியாத அதேவேளை இவர்கள் குறித்த விபரங்கள் ஜனாதிபதிக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten