தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 31 juli 2014

கத்திக்காக லைகா பின்வாசல் வழியாக ராஜபக்சவிடம்: திருமுருகன்!

வடக்கு ஊடகவியலாளர்கள் பாரிய போராட்டம்! தெற்கும் கைகோர்த்தது!

சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து கடந்த 25ம் திகதி கொழும்பு சென்று கொண்டிருந்த யாழ். ஊடகவியலாளர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்த படையினர் முயற்சி செய்தமை, வடக்கில் தொடரும் ஊடக அடக்குமுறைகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன், வட மாகாண சபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்களான அனந்தி சசிதரன்,கஜதீபன் சுகிர்தன், தமிழ் தேசிய மக்கள் முன்ணணியைச் சேர்ந்த செ.கஜேந்திரன் மற்றும் யாழ். மாநகரசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஆதரவை வெளிப்படுத்தினர்.
சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது. வடக்கில் தொடரும் ஊடக அடக்குமுறைகளை கண்டித்தும், பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் ஊடகவியலாளர்களைச் சிறையிலடைக்கும் அரசினது சதி முயற்சிகளைக் கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக வவுனியா மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஊடக அமைப்புக்களும் இணைந்து இப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக யாழ்.ஊடக அமையம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் வடக்கில் போர் நிறைவடைந்ததன் பின்னரும் கூட ஊடகத்துறை அச்சுறுத்தல் மிகுந்ததாக மாறியிருக்கும் நிலையில், பல ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு தப்பிச் சென்று கொண்டிருக்கிறார்;கள். மறுபக்கம் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல் விடப்படுகின்றது. இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் ஊடகப் பணி சந்திக்கப்போகும் அபாயங்கள் தொடர்பில் ஊடக சமுகம் அச்சத்தில் உறைந்துள்ளது.
2000ம் ஆண்டின் இறுதியில் எமது சக ஊடகவியலாளர்கள் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் தொடங்கிய ஊடகவியலாளர்கள் மீதான கொலைக்கலாசாரம் இன்று வரை தொடர்கிறது. எங்கள் கண் முன்னால் எங்கள் சக தோழர்கள் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். பலர் கடத்தப்பட்டார்கள், பலர் காணாமல்போனார்கள். இன்றுவரை அவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நீண்ட மௌனத்தையே பதிலாக கொடுத்திருக்கின்றது.
மூன்று தசாப்த கால போரை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக சிறீலங்கா அரசு கூறிக்கொண்டிருக்கும் நிலையில், அண்மைக்காலமாக அதிகரித்துள்ள ஊடக வன்முறைகள், சிறீலங்கா அரசாங்கத்தின் போர் ஊடகங்களுக்கு எதிராக திரும்பியிருக்கின்றதா? என்ற சந்தேகத்தை உருவாக்கியிருக்கின்றது.
வலம்புரி பத்திரிகையாளர் உதயராசா சாளின், உதயன் பத்திரிகையாளர் திலீப் அமுதன், தினக்குரலை சேர்ந்த செல்வதீபன் என பல ஊடகவியலாளர்கள் இனந்தெரியாத நபர்களின் கொலை முயற்சிகளிலிருந்து தப்பியிருக்கின்றார்கள்.
தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளர்களான த.வினோயித், பி.வின்ஸ்லோ ஆகிய இருவரும்; விடுதலைப் புலிகளின் பயிற்சி பெற்றதாகப் பொய்பிரச்சாரத்தை மேற்கொண்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரால் தேடப்பட்ட நிலையில், பி.வின்ஸ்லோ நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதேபோன்று யாழ்.உயர் பாதுகாப்பு வலய பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற எஸ்.நிதர்சன், வி.கஐPபன், எஸ்.கே.பிரசாத், எஸ்.கரன், எஸ்.தர்சன் ஆகிய ஊடகவியலாளர்களுக்கு படையினர் நேரடியாகவே உயிர் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். இத்தகைய அச்சுறுத்தல்கள் மத்தியில் எஸ்.கே.பிரசாத்தும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
இவற்றின் தொடர்ச்சியாக கடந்த 25ம் திகதி கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள் வதற்காகச் சென்றிருந்த ஊடகவியலாளர்களான கே.ஹம்சனன், வி.கஜீபன், எஸ்.நிதர்சன், எஸ்.மயூதரன், பெ.நியூமன்,பி.பாஸ்கரன், சொ.சொரூபன் ஆகிய ஊடகவியலாளர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டை சுமத்துவதற்கு ஓமந்தை சோதனை சாவடியில் நின்றிருந்த இராணுவத்தினர் முயற்சித்திருந்தனர்.
இவ்வாறு வடமாகாணத்தில் ஊடகவியலாளர்கள் தினசரி தமது பணிகளை மிகுந்த அச்சுறுத்தல்களின் மத்தியில், உயிரை பணயம் வைத்தே ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள். இன்னொரு புறம் ஊடகங்களை முடக்க மான நஸ்ட ஈடு கொரி வழக்கு போடுவதும் ஆசிரிய பீட பிரதிநிதிகளை பலாலிக்கும், நான்காம் மாடிக்கும் அழைப்பதும் சாதாரணமாகிப்போயுள்ளது.
மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் லெம்பேட் அத்தகைய விசாரணை வளையத்தினுள் வாழ்ந்தும் வருகின்றார். 24 மணி நேரமும் துப்பாக்கி முனைகளின் மத்தியில் அச்சத்துடனேயே வடக்கு ஊடகவியலாளர்கள் பணியாற்றுகின்றனர். அச்சுறுத்தப்படுவதும் பின் தொடரப்படுவதும் சாதாரணமாகியுள்ளது.
இத்தகைய சூழலில் ஊடகவியலாளர்கள் தமது தொழில் ரீதியான அறிவை பெறுவதற்கு கூட சிறீ லங்கா அரசு தடுத்துவருகின்றது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கடந்த 25ம் திகதி ஓமந்தை சோதனை சாவடியில் இடம்பெற்ற சம்பவம் மற்றும், அதற்கு முன்னர் இரு தடவை கள் யாழ்.குடாநாட்டிலிருந்து கொழும்பு சென்ற ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன்; இயங்கும் சிங்கள இனவாத அமைப்புக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
அவ்வகையான பயிற்சிப்பட்டறை ஒன்றிற்கு பயணித்த ஏழூ ஊடகவியலாளர்களை கஞ்சா குற்றச்சாட்டில் கைது செய்து சிறையிலடைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சியிலிருந்து அவர்கள் மீண்டிருக்கின்றார்கள். அப்பட்டமாக இலங்கை இராணுவ கட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழூள்ள ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து, சிக்கவைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சியை அச்சத்துடன் நாம் அவதானிக்கின்றோம். எதிர்வருங்காலங்களில் என்ன நடக்கப்போகின்றதென்பதை,இச்சம்பவம் இயம்பி நிற்கின்றது. அவர்கள் தொடரப்படுவதும் அச்சுறுத்தப்டுவதும் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.


இத்தகைய சதிமுயற்சிகளை வன்மையாக கண்டித்தும்; தொடரும் ஊடகவியலாளர்கள் மீதான கொலை முயற்சிகள் மற்றும் தாக்குதல்களை கண்டித்தும் சுதந்திரமாக ஊடகப்பணிகளை ஆற்றுவதற்கான சூழலை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கி கொடுத்திராத நிலையில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் வடக்கு ஊடகவியலாளர்களாகிய நாம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அனைத்து தரப்புக்களிற்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றுள்ளது.
Jaffna-02Jaffna-JaJaffna-Ja-01Jaffna-Ja-04Jaffna-Ja-05
http://www.jvpnews.com/srilanka/78057.html

வெடிமருந்து வைத்திருந்தார் நீர்வேலியில் இளைஞர்

தமக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறைப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/78064.html

கொழும்புத் துறைமுகத்தில் பங்களாதேஷ் போர்க்கப்பல்கள்!

Bangaladesh-ships
http://www.jvpnews.com/srilanka/78069.html

கத்திக்காக லைகா பின்வாசல் வழியாக ராஜபக்சவிடம்: திருமுருகன்

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது
ஈழ விடுதலை ஆதரவு அரசியல்களத்தில் தமிழகத்தின் திரைத்துறைக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. பொது மக்களிடத்தில் இவர்களின் ஈழ ஆதரவு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய பல நிகழ்வுகளை குறிப்பிட முடியும். 2009க்கு பின் தமிழகத் திரைத்துறையின் ஈழ ஆதரவு அரசியலை உடைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாலிவுட் திரைப்பட விருது வழங்கும் விழாவின் தோல்விலிருந்து இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தமிழக திரைத்துறையில் இருக்கும் நிதி முதலீட்டு நெருக்கடியையும், வணிக நோக்கமாக இருப்பவர்களையும் இலங்கை பயன்படுத்த எண்ணியது. FICCIயின் (வர்த்தக கூட்டமைப்பு) துணை கொண்டு பல ஒப்பந்தங்களை இந்திய திரை உலகுடன் இலங்கை ஏற்படுத்திக்கொண்டது. இதன் விரிவான திட்டமாக நாம் புரிந்து கொள்ள கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் 1. திரைத்துறையில் முதலீடு 2. திரையுலக கலைஞர்களை தமது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்வது.
லைகா மொபைலும் ராஜபக்சேவும்
இதன் அடிப்படையிலேயே தற்பொழுது லைகா மொபைல் நிறுவனத்தின் முதலீடு திரைத்துறையில் பெரிய பேனரில், வணிக ரீதியாக லாபம் கொடுக்கும் நடிகர் விஜய் – முருகதாஸ் மூலமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. லைகா மொபைல் ராஜபக்சேவிற்கு ஆதரவாக பல வர்த்தக பணிகளை மேற்கொண்டதை நாம் அறிவோம். அந்த நிறுவனம் தமிழகத்தில் ‘இலங்கை மீது பொருளாதார தடை இருப்பதை’ அறிந்து பின்வாசல் வழியாக நுழைகிறதா?
சந்தோஷ் சிவன் எனும் தரகுப் படைப்பாளி
மற்றொரு புறம் சந்தோஷ் சிவன் போன்ற அரசியல் தரகு படைப்பாளிகளின் வழியே நுணுக்க அரசியல் படங்களை ஈழவிடுதலைக்கு எதிராக கொண்டுவருவது. இந்தவகையான ‘அறமற்ற’ தொழிற்நுட்ப கலைஞர்களை தமிழ்திரையுலகில் ஆளுமை செலுத்த வைப்பது. சந்தோஷ் சிவனின் ‘இனம்’ திரைப்படத்தினை லிங்குசாமி கொண்டுவந்தார். சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கும் படத்திற்கு சந்தோஷ் சிவன் காமிரா செய்கிறார்.
பிவிஆர் மூலம்…
மாற்று அரசியல் என்கிற பெயரில் தென்னாப்பிரிக்கவின் மூலமாக மேற்குலகினால் முன்வைக்கப்படும் ‘நல்லிணக்கம்’ , ‘இனப்படுகொலை குற்றவாளிகளை மன்னித்து , இணைந்து வாழ்தல்’ என்கிற திட்டத்தினை நுணுக்கமாக அறிவுசீவி சமூகவெளிக்குள் நகர்த்தும் ‘வித் யூ, வித்தவுட் யூ’ போன்ற படங்களை பி.வி.ஆர் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் ‘புரட்சி’யும் இங்கு நிகழுகிறது.
புலிப் பார்வை எனும் கருத்தியல் சிதைவு
தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய பாலச்சந்திரனின் அந்த ‘இறுதிப் பார்வை’ புகைப்படம் இன்றளவும் பலரை துன்புறுத்தும் இனப்படுகொலை பதிவு. இந்த மனப்பதிவினை சிதைப்பதுவும், பாலச்சந்திரன் பற்றியான பிம்பத்தினை உடைப்பதுவும் இந்திய-இலங்கை அரசிற்கு மிக மிக அவசியமான உடனடித் தேவை. இப்பிம்பம் முற்றிலும் முறிக்கப்பட்டால் காலப்போக்கில் பல நினைவுகளை அழிக்க முடியும்.
‘புலிப்பார்வை’ எனும் படத்தின் அறிமுக காணொளியில் உளவியல் ரீதியாக தமிழர்களின் ஆழ்மனதில் புதைந்து நிற்கும், ‘ஏன் இந்த அப்பாவி குழந்தை படுகொலை செய்யப்பட்டான்’ என்கிற கேள்வியை சிதைத்து அழிக்கும் காட்சிப்படுத்தலை காணமுடிகிறது. இதை பிரவீன் காந்தி எனும் வணிகரீதியாக மலிவான படங்களை எடுக்கும் நபரைக் கொண்டு செய்திருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் வழியாக தமிழர்களின் மீது உளவியல் -பொருளியல்-கருத்தியல் சிதைவினை கொண்டுவரும் ‘போராக’ இது இலங்கை-இந்திய அரசினால் நிகழ்த்தபடுகிறது. இதிலிருந்து தமிழகமும், தமிழ் திரையுலகமும் தப்பிக்குமா எனத் தெரியவில்லை. இனிமேல் தமிழ் திரையுலகில் ஈழவிடுதலை ஆதரவாளருக்கு கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகளை விட இலங்கையின் நுண் அரசியலுக்கு துணை போகும் அறமற்றவர்களுக்கு வணிக வாய்ப்புகள் ஏராளம் கிடைக்கலாம். இம்முயற்சிகளை முறியடிப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் கடமை. தமிழகமும், திரையுலகுமும் எழுந்து நிற்குமா? அல்லது 2009 போர் முடிந்ததும் எழுந்த உணர்வலைகள் இன்று அடங்கிவிடுமா? -இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.kaththi-puli-parvai
 நன்றி 
ONE INDIA
http://www.jvpnews.com/srilanka/78075.html

Geen opmerkingen:

Een reactie posten