இலங்கையை தவித்து! 140 நாடுகளுக்கு இந்தியாவின் இலத்திரனியல் பயண அனுமதி
திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட 9 விமான நிலையங்களில், இதற்கான வசதிகள் செய்யப்படவுள்ளன. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளை செய்யும்படி, குறிப்பிட்ட 9 விமான நிலையங்களிலும் உள்ள குடிவரவுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 180 நாடுகளின் பயணிகளுக்கு இந்த வசதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், தற்போது, 140 நாடுகளில் இருந்து வரும் பணிகளுக்கே இந்த வசதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விளக்கங்களுக்காக காத்திருப்பதாக, குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஒக்ரோபர் 2ம் நாள் தொடக்கம் இலத்திரனியல் பயண அனுமதியை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாக குடிவரவுப் பகுதி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கென அனைத்துலக முனையப் பகுதியில் மேலதிக இடவசதிகளை விமான நிலைய அதிகார சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
புதிய ஆளணியும் ஏனைய மேலதிக வசதிகளும் கோரப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் சிறிலங்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் உள்ளடக்கப்படவில்லை. இதற்கு சிறிலங்கா தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதும், இந்திய அதிகாரிகள் தமது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/77496.html
ஓமந்தையில் நடந்தது என்ன? இராணுவத்தின் புதிய கதை…
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஓமந்தையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர், தொடர்ந்து தெளிவுபடுத்துகையில்,
ஓமந்தை சோதனை சாவடியில், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்தே சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், வானொன்றில் பெருந்தொகையான ஹெரோயின் கடத்தப்படுவதாக ஓமந்தையிலுள்ள இராணுவத்திற்கு நேற்றிரவு 9 மணிக்கும் 9.15 க்கும் இடைப்பட்ட நேரத்தில் தகவலொன்று கிடைத்துள்ளது.
பஸ்ஸில் வந்த ஒருவரினாலேயே இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட இராணுவத்தினரும் பொலிஸாரும் அந்த பஸ்ஸுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த சகல வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தினர்.
10 நிமிடங்களுக்கு பின்னர் வந்த வானொன்றை சோதனைசெய்தபோது அந்த வானில், சாரதி ஆசனத்திற்கு கீழிருந்த சிகரெட் பெட்டிக்குள் சிறிய தொகை கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதனையடுத்து வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை பொலிஸார் எடுத்துள்ளனர். ஏனைய ஏழுபேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் விசாரணையின் போதே அவர்கள் ஊடகவியலாளர்கள் என்று தெரியவந்துள்ளது.
அதனையடுத்து வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை பொலிஸார் எடுத்துள்ளனர். ஏனைய ஏழுபேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் விசாரணையின் போதே அவர்கள் ஊடகவியலாளர்கள் என்று தெரியவந்துள்ளது.
வானில் இருந்தவர்கள் ஊடகவியலாளர்கள் என்று தெரிந்துகொண்டு இராணுவத்தினர் இடையூறு விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது முற்றிலும் தவறானதாகும். பொலிஸாரின் விசாரணைக்கு இராணுவத்தினர் இலகு படுத்தி கொடுத்துள்ளனர். அந்த ஊடகவியலாளர் மற்றொரு வாகனத்தில் இன்று அதிகாலையே கொழும்புக்கு திரும்பியுள்ளனர் என்றார்.
அந்த கஞ்சாவையை இராணுவத்தினரே போட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றரே என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பொலிஸாரே கஞ்சாவை மீட்டுள்ளனர். இராணுவத்தின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்பட்டுள்ளன. அதனை இராணுவம் முற்றாக மறுக்கின்றது என்றார்.
http://www.jvpnews.com/srilanka/77499.html
சிறுமியை சீரளித்த கடற்படைச் சிப்பாயை கைது செய்ய வேண்டும் சபையில் சம்பந்தன் அழுத்தம்
“இராணுவத்தின் செயற்பாடுகளினால் வடக்கு, கிழக்கு பெண்களினதும், சிறார்களினதும் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பில் இந்தச் சபையில் பேசவேண்டியுள்ளது. யாழ்.காரைநகரில் அண்மையில் 11 வயது சிறுமி ஒருத்தி பாலியல் ரீதியாக பல தடவைகள் துன்புறுத்தப்பட்டுள்ளார். காரைநகர் கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை சிப்பாய்களாலேயே இவ்வாறான துஷ்பிரயோகம் நடத்தப்பட்டது என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 10 வயது சிறுமியும் இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. இது மிகவும் கொடூரமான குற்றம். இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் மேலும் இடம்பெறாமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வடக்கில் இராணுவமயமாக்கல் பற்றி பல தடவை வலியுறுத்தியிருக்கின்றோம். இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே இந்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. காரைநகர் சம்பவம் தொடர்பிலான பாதுகாப்பு தரப்பு நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. இந்தப் பிரச்சினை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உண்மையான குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்களா? உண்மையான குற்றவாளிகளை விடுத்து ஏனையவர்களை அடையாள அணிவகுப்பில் நிறுத்தினால் எவ்வாறு அடையாளம் காணமுடியும்? இந்தக் கேள்விக்கு அரசு பதிலளித்தே ஆகவேண்டும்” என்று தெரிவித்தார் சம்பந்தன் எம்.பி.
http://www.jvpnews.com/srilanka/77507.html
Geen opmerkingen:
Een reactie posten