[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 07:02.46 AM GMT ]
கோல்டன் கீ வழக்கு விசாரணைகளில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக பிரதம நீதியரசர் மொஹன் பீரிஸ் அறிவித்துள்ளார்.
தனக்கு எதிராக அவதூறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக நீதிமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் நோக்கில் தான் இந்தத் தீர்மானத்தினை எடுத்ததாக பிரதம நிதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டிலிருந்து இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கோல்டன் கீ நிறுவனம் தனது நிறுவனத்தில் வைப்புச் செய்தவர்களின் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, வைப்பாளர்கள் சார்பில் கறித்த நிறுவனத்திற்கு எதிராதக இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciw2.html
புகலிடக் கோரிக்கையாளர்கள் கேர்ட்டின் தடுப்பு முகாமிற்கு மாற்றம்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 07:30.26 AM GMT ]
அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பிற்கு அழைத்து வரப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேரில் பெரும்பாலானவர்கள் பொருளாதார அகதிகள் என குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
பல வாரகாலம் சுங்கக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கொக்கோஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு
அங்கிருந்து மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள கேர்ட்டின் தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
அங்கிருந்து மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள கேர்ட்டின் தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
இந்தத் தமிழர்கள் இன்று பூர்வாங்க பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciw4.html
Geen opmerkingen:
Een reactie posten