தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

களுத்துறையில் புதிய இராணுவ முகாம் அமையவுள்ளது!

வடக்கு முதல்வர் ஜனாதிபதியுடன் சென்றிருந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும்! அமைச்சர் டக்ளஸ்
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 12:30.50 AM GMT ]
வடமாகாண முதலமைச்சர் ஜனாதிபதியுடன்  இந்தியா சென்றிருந்தால் மக்களின் கடற்றொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டிருக்க முடியும்.  என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை வியாபாரி மூலை எரிஞ்சம்மன் கோவிலடி பகுதியிலுள்ள மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மக்களின் பிரச்சினைகளக்குத் தீர்வு காண முயற்சிக்கும் போதெல்லாம் அதை அவர்கள் திட்டமிட்டு குழப்பி அதனூடாக அரசியல் ஆதாயத்தை தேடி வருவதாகவும், மக்களின் பிரச்சினைகளுக்கு சுமுகமாக தீர்வுகாண முயற்சிக்கும் போது சுயலாப நோக்கில் செயற்படும் அரசியல்வாதிகள் அதனைத் திட்டமிட்டுக் குழப்பி வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்..
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்ட போது அந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு இலங்கை உட்பட ஏழு அயல்நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது அந் நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.
ஜனாதிபதியின் அழைப்பை முதலமைச்சர் அப்போது நிராகரித்திருந்தார். ஆனால் முதலமைச்சர் ஜனாதிபதியுடன் அங்கு சென்றிருந்தால் மக்களின் கடற்றொழிலாளர் பிரச்சினைக ளுக்கு தீர்வுகளை கண்டிருக்க முடியும்.
இந்நிலையில் எல்லைமீறிய இந்திய மீனவர்களது தொழிற்துறை நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு தமக்கு கால அவகாசம் தேவையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்த போது எமது மக்களின் நலன்களுக்காக ஜனாதிபதி நிராகரித்திருந்ததையும் இங்கு சுட்டிக் காட்டியிருந்தார் என்றும் அமைச்சர் டக்ளஸ் குறிப்பிட்டார். 
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchpy.html
களுத்துறையில் புதிய இராணுவ முகாம் அமையவுள்ளது!
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 12:53.17 AM GMT ]
களுத்துறையில் புதிய  இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
களுத்துறை மாவட்ட மத்துகம பிரதேச செயலகப் பிரிவில் இந்த இராணுவ முகாம் உருவாக்கப்பட உள்ளது.
களுத்துறை அபிவிருத்திக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முகாமை அமைப்பதற்கு 15 ஏக்கர் காணி வழங்குமாறு இராணுவ தளபதிää களுத்துறை மாவட்டச் செயலாளர் டி.சீ.ஜயலாலிடம் கோரியுள்ளார்.
பேருவளை, அளுத்கம சம்பவங்களைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறான ஓர் நிலையில் அரசாங்கம் அளுத்கம பேருவளைக்கு அருகாமையில் நிரந்தர இராணுவ முகாமொன்றை அமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட மாட்டாது என அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchpz.html

Geen opmerkingen:

Een reactie posten