தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 juli 2014

அமெரிக்க தூதரகம் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறது!- இலங்கை இராணுவம்!

ஐக்கிய சோசலிசக் கட்சியினரின் சமாதான யாத்திரையை தடுத்து நிறுத்திய பொலிஸார்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 02:26.10 PM GMT ]
ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தலைமையில் நடத்தப்பட்ட  சமாதான யாத்திரையை பொலிஸார்  தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அளுத்கம, பேருவளை, தர்கா நகர் நோக்கி சென்ற சமாதான யாத்திரையே பொலிஸாரால் இன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பிரதேசத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சிலர் சமாதான யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மோதல் ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிதுங்க ஜயசூரிய தலைமையிலான குழுவினர் கொழும்பு நாராஹேன்பிட்டியில் இருந்து வஸ்கடுவ வரை சென்றிருந்தனர்.
அங்கு மோதல் ஒன்று ஏற்பட்டதாகவும் தாம் அதனை தடுத்து நிறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcip0.html
பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதியின் ஆதரவாளரை நியமிக்க முயற்சி!
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 02:41.46 PM GMT ]
இலங்கையின் பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ்மா அதிபர் என். கே. இலங்ககோனுக்கு தூதுவர் பதவியை வழங்கி விட்டு, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை பொலிஸ்மா அதிபராக நியமிக்குமாறு, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த பரிந்துரையின் அடிப்படையில் அனுர சேனாநாயக்கவை பொலிஸ்மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் இலங்கோனின் பதவிக்காலம் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டே முடிவடைகிறது.
இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே கோத்தபாய ராஜபக்ஷ, தனக்கு நெருக்கமான அனுர சேனாநாயக்கவை பொலிஸ் மா அதிபராக நியமிக்குமாறு பரிந்துரை செய்துள்ளார்.
அனுர சேனாநாயக்க கோத்தபாயவுடன் மாத்திரமல்லது ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமான அதிகாரியாவார்.
ஏற்கனவே ஓய்வுபெறும் வயதை எட்டி விட்ட அவருக்கு மூன்றாவது முறையாக அண்மையில் பணி நீடிப்பு வழங்கப்பட்டது.
வழங்கப்பட்டுள்ள சேவை நீடிப்பானது 2014 ஜூலை மாதம் 07 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ஆம் திகதி வரை செல்லுப்படியாகும்.
அனுர சேனாநாயக்கவை விட சிரேஷ்ட அதிகாரியான காமினி நவரத்னவை ஒதுக்கி விட்டே தற்போது அவருக்கு பொலிஸ்மா அதிபர் பதவியை வழங்க ராஜபக்ஷவினர் தீர்மானித்துள்ளனர்.
அனுர சேனாநாயக்க ராஜபக்ஷ அரசுக்கு எதிரான போராட்டங்களை தாக்குதல் நடத்தி அடக்குமாறு உத்தரவிட்ட அதிகாரியாவார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcip1.html
அமெரிக்க தூதரகம் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறது!- இலங்கை இராணுவம்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 03:02.28 PM GMT ]
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிப்பவர்கள் இலங்கைப் படையினரால் அச்சுறுத்தப்படுவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.
இலங்கை இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டே அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது அடிப்படையற்றது என்றும் ரூவன் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நம்பகமான தகவல்கள் கிடைத்தால் அமெரிக்க தூதரகம் தமது அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் இலங்கை அரசாங்கத்துக்கு முறையிடலாம்.
இதனைவிடுத்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவது அதன் அதிகார வரம்பு மீறிய செயற்பாடு என்று வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcip2.html

Geen opmerkingen:

Een reactie posten