யாழ்ப்பாணத்துக்கு மலேசியாவின் சூரிய, காற்றலை மின்சாரம்!- மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய சொகுசு பஸ்கள்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 12:33.30 AM GMT ]
இதற்கான உடன்படிக்கை இலங்கை அரசாங்கத்துடன் அண்மையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மலேசிய நிறுவனம் யாழ்ப்பாணத்தில் தமது முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளது.
மலேசியாவின் பாரிய நிறுவனங்களில் ஒன்றான தெனகா நாசனல் இந்த திட்டத்தின் மூலம் 35 மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்திசெய்ய எதிர்ப்பார்க்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய சொகுசு பஸ்கள்
மாற்றுத்திறனாளிகளுக்காக பஸ் சேவை ஒன்றை இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதற்காக இந்தியாவின் நிறுவனம் ஒன்றுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்;று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்தச் சேவைகள் கொழும்பிலும், கொழும்பை அண்டிய பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இவை சொகுசு பஸ்களாக இருக்கும். இவை கெஸ்பாவ, ஹோமாகம, மஹரகம, மாலபே, கடுவெல, களனி. ஜா- எல, கிரிபத்கொட ஆகிய இடங்களுக்கு நடத்தப்படும்.
இதேவேளை இலங்கைக்கு 2500 புதிய பயணிகள் பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
அதேநேரம் 10- 15 வருட கால காலசேவையில் உள்ள பஸ்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchty.html
கொமன்வெல்த் முதலாம் உலகப்போர் நினைவு பிரார்த்தனை நிகழ்வில் மகிந்த பங்கேற்கமாட்டார்!- த ரைம்ஸ்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 02:10.05 AM GMT ]
2009ம் ஆண்டு முடிவுக்கு வந்த 26 ஆண்டு காலப் போரின் இறுதிக் கட்டத்தில், 40 ஆயிரம் தமிழர்களைக் கொன்றதாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை நடக்கவுள்ள பிரார்த்தனையில் தாம் பங்கேற்றால், இதன் தாக்கம், எதிரொலிக்கும் என்ற கவலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ளது.
கொமன்வெல்த் தலைவர்கள் மற்றும் பிரித்தானிய அரசியல்வாதிகள் இந்தப் பிரார்த்தனையில் பங்கேற்கின்றனர். ஆனால் அடுத்த ஆண்டு வரை கொமன்வெல்த் அமைப்பின் தலைவராக மகிந்த ராஜபக்ச பதவி வகிப்பார் என்ற போதும், அவர் இந்த நிகழ்வில் இருந்து ஒதுங்கி நிற்கவுள்ளார்.
புனித முன்கோஸ் தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனையில், இலங்கையின் சார்பில், பிரித்தானியாவுக்கான அதன் தூதுவர் பங்கேற்கவுள்ளார்.
இந்தப் பிரார்த்தனையில் பங்கேற்குமாறு, கொமன்வெல்த் அமைப்பின் தலைவரான இலங்கை ஜனாதிபதிக்கு, பிரித்தானிய அரசாங்கம் கடந்த மாதம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHQULcht0.html
Geen opmerkingen:
Een reactie posten