[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 11:21.56 AM GMT ]
இவர்களில் பெரும்பாலானோர் டுபாய், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்தவாறு இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தவிர சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரதான போதைப் பொருள் விற்பனையாளர்கள் தமது சகாக்களை பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
வேலே சுதா என அழைக்கப்படும் கம்பொல விதானகே சமந்த குமார மற்றும் மொஹமட் வகிம் மொஹமட் சித்திக் ஆகிய இரண்டு பேரே இலங்கையின் ஹெரோயின் வர்த்தகத்தின் பிரதான நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் பாகிஸ்தான் மற்றும் டுபாய் நாடுகளில் இருந்தவாறு தமது சகாக்களை பயன்படுத்தி பாரிய அளவு போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மேலதிகமான தெமட்டகொட சமிந்த , பரவி சுதா , கொட்ட காமினி , கிம்புலாஹெலே குணா , தெல் பாலா , ஜப்பான் சூட்டி , லாலித்யா , பொடி கண்ணா , தொட்டலங்க நவுஷாட் , வசந்த மெண்டிஸ் , எராஜ் , மெண்டிஸ் , ரத்கம விதுர , ஜேசுதாசன் ஆகிய போதைப் பொருள் விற்பனையாளர்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த போதைப் பொருள் விற்பனையாளர்களை கைது செய்வதற்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcio1.html
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம்: இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 11:47.27 AM GMT ]
இந்துக்களின் தாய்தந்தையை இழந்தவர்கள் மேற்கொள்ளும் பிதிர்க்கடன்களை தீர்க்கும் மிக முக்கிய தீர்த்த உற்சவமான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் நடைபெற்றது.
ஆடி அமாவாசை தீர்த்த உற்சவத்தின் மிக முக்கிய பதியான மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்த கேணியில் சிறப்பாக நடைபெற்றது.
தீர்த்தம்,தலம்,விருட்சம் ஆகியவற்றினை ஒருங்கேகொண்டு பன்னெடுங்காலமாக கிழக்கிலங்கையில் இந்த மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாக விளங்கிருகின்றது.
இராமாயண காலத்தில் இராமன் மற்றும் இராவணனால் வணங்கப்பட்ட ஆலயமாகவும் அனுமாரின் தீப்பிடித்த வாலினை அணைத்த ஆலயாகவும் இந்த ஆலயத்தின் வரலாறுகள் பறைசாற்றி நிற்கின்றன.
அற்புதங்கள் பல நிறைந்த மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 10தினங்களாக சிறப்பான முறையில் நடைபெற்றுவந்தது.
நேற்று வெள்ளிக்கிழமை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ தேர் உற்சவம் சிற்பாக நடந்தது.
இன்று காலை விசேட பூசைகள் நடைபெற்று,விநாயகர், சிவன், பார்வதி அம்மை ஆகியோருக்கு ஒன்று சேர வசந்த மண்டபத்தில் விசேட அலங்கார உற்சவம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து ரிஷப வாகனங்களில் மூவரும் எழுந்தருளி பல்லாயிரக்கணக்கானோர் புடை சூழ மாமாங்கேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று அங்கு விசேட பூஜைகள் நடைத்தப்பட்டு தீர்த்தக்கேணியில் இலட்சக்கணக்கானோர் புடை சூழ தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றுது.
தீர்த்த உற்சவத்தினை தொடர்ந்து தாய்தந்தையினை இழந்தோர் தீர்த்தக்கரையினில் பிதிர்க்கடன்களை நிறைவேற்றினர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcio2.html
முல்லைத்தீவு பொலிஸ் விடுதியில் குண்டு வெடிப்பு...
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 12:00.21 PM GMT ]
இந்த வெடிப்புச் சம்பவம் இன்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும் இதன்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcio3.html
Geen opmerkingen:
Een reactie posten