தீர்வு இன்றி திண்டாடும் சம்பூர் மக்கள் மனு
உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் பொருளாதார முதலீட்டு வலயத்திற்கு என அடையாளம் காணப்பட்ட காணிகள் தவிர ஏனைய காணிகளில் மீள்குடியேற்றத்திற்கு உதவுமாறு சம்பூர் மக்கள் வலியுறுத்தி கேட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சித் டி சில்வா ஊடாக ஜனாதிபதிக்கு இந்த மனு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எட்டு வருடங்களுக்கு மேலாக தீர்வு இன்றி தொடரும் தங்களது மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி உதவ வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு போர் காரணமாக தமது பிரதேசத்திலிருந்து வெளியேறிய சம்பூர் பிரதேச மக்கள் போர் முடிவடைந்த பின்னரும் மீள்குடியேற்றம் மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்கள் உட்பட தற்காலிக குடியிருப்புகளிலே தங்கியுள்ளார்கள்.
சொந்த மண்ணில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி 2007ஆம் ஆண்டு ஜுலை மாதம் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட காலந்தொட்டே இவர்கள் போராட்டங்களை நடத்தியுள்ள போதிலும் சாதகமான பதில்கள் இதுவரை கிடைக்கவில்லை. சம்பூர் பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயம் என்றும் பொருளாதார முதலீட்டு வலயம் என்றும் வர்த்தமானி பிரகடனம் மூலமாக அரசாங்கத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/77474.html
இந்தியாவிற்கு செல்ல விசா கோரவில்லை – UN
குறித்த விசாரணைகளை மேற்கொள்ள இந்தியா விசா வழங்க மறுத்ததாக வௌியான தகவல்கள் தொடர்பில் கருத்து வௌியிடுகையிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையால் குழுவென்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என இதுவரை இலங்கை அரசு கூறிவருகின்றது. இதனால் மூன்று நாடுகளில் விசாரணைகளை மேற்கொள்ள இவர்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
இந்தநிலையில் சர்வதேச விசாரணைக் குழுவினர் இந்தியாவுக்குள் பிரவேசிக்க விசா கோரியதாகவும் இந்தியா அதனை மறுத்ததாகவும் அண்மையில் செய்திகள் வௌியானமை குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறு இருப்பினும் குறித்த குழுவினருக்கு இந்தியாவிற்கு செல்ல விசா வழங்குமாறு, தமிழக முதல்வர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/77477.html
Geen opmerkingen:
Een reactie posten