கோல்டன் கீ வழக்கு விசாரணை!- மொஹன் பீரிஸ் விலகல் - குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்களுக்கு வாய்ப்பு
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 07:02.46 AM GMT ]
கோல்டன் கீ வழக்கு விசாரணைகளில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக பிரதம நீதியரசர் மொஹன் பீரிஸ் அறிவித்துள்ளார்.
தனக்கு எதிராக அவதூறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக நீதிமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் நோக்கில் தான் இந்தத் தீர்மானத்தினை எடுத்ததாக பிரதம நிதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டிலிருந்து இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கோல்டன் கீ நிறுவனம் தனது நிறுவனத்தில் வைப்புச் செய்தவர்களின் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, வைப்பாளர்கள் சார்பில் கறித்த நிறுவனத்திற்கு எதிராதக இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்களுக்கு பொன்னான வாய்ப்பு - ஐக்கிய தேசியக் கட்சி
நாட்டு மக்களை நசுக்கி கஷ்டங்களுக்கு உள்ளாக்கி, ஊழல், வினைத்திறன் இன்றி முன்னெடுக்கப்பட்டு வரும் குடும்பவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, மக்களுக்கு பொன்னான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஊவா மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு அந்த கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
வறிய மக்களின் எதிர்பார்ப்புகள் சிதைந்து போயுள்ளன. அடைக்கலம் தேடி செல்ல வேண்டிய இடம் பற்றிய சிறிய எண்ணம் கூட அந்த மக்களிடம் இல்லை.
போரில் பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் தொடர்ந்தும் சுதந்திரம் இன்றியே இருக்கின்றனர். வேலையில்லா பிரச்சினை சொல்ல முடியாதளவிற்கு அதிகரித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக நாட்டில் வாழும் முழு சமூகத்தை சுற்றியுள்ள துன்பத்தை துடைத்தெறியும் காலம் வந்துள்ளது.
இதனை இன்றே செய்தாக வேண்டியது முக்கியமானது. இல்லாது போனால் மக்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவிக்க நேரிடும் எனவும் கரு ஜயசூரிய தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciw2.html
வேறுபாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்: பிரித்தானியா
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 08:06.06 AM GMT ]
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் நோன்பு பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனை கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் ஒரு மாத நோன்புக்கு பின்னர் இந்த பெருநாளை கொண்டாடுகின்றனர்.
இது தொழுகை, தொண்டு உட்பட இஸ்லாத்தின் உண்மையான ஆவியை பிரதிபலிக்கின்றது.
இந்த கொண்டாட்ட நேரத்தில் இலங்கை மக்கள் நம்பிக்கையை மதித்து வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைய முடியும் என நம்புகிறேன்.
இலங்கையர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் சமாதானமான பெருநாளாக இந்த நோன்பு பெருநாள் அமைய வாழ்த்துவதாக பிரித்தானிய தூதுவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLciw5.html
Geen opmerkingen:
Een reactie posten