பளை வந்த ரயிலிலிருந்து வீழ்ந்து இளைஞன் மரணம்!
கொழும்பிலிருந்து பளையை நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலில் இருந்து தவறிவீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயிலில் இருந்து தவறிவீழ்ந்து பாலமொன்றின் மீது மோதுண்டு இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள உறவினர் வீடொன்றிற்கு வருகைதந்து, மீண்டும் திரும்பி வரும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/77581.html
பயிற்சிக்காக இந்தியா செல்கிறது இலங்கை விமானப்படை
இந்தியாவில் பயிற்சி பெறுவதற்காக சிறிலங்காவின் விமானப் படைக் குழு ஒன்று இந்தியா நோக்கி பயணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. லக்னோவில் இந்த பயிற்சிகள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியாவின் விமானப்படைத் தளபதி இது தொடர்பான இணக்கப்பாட்டை வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த குழு அங்கு செல்கிறது.
ஏற்கனவே இலங்கை படைத்தரப்புக்குப் பயிற்சிகளை வழங்க வேண்டாம் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் அடிப்படையில் கடந்த வாரம் இந்த பயிற்சி குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் வை.கோ. இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/77584.html
மகிந்தரின் குழு முன் சாட்சியமளிக்க தயார் – எரிக் சொல்ஹெய்ம்
சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள, விசாரணைக் குழு முன்பாக “மறைப்பதற்கு எதுவும் இல்லை. எனக்கு என்ன தெரியுமோ அவற்றை தாம் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், தகவல்களை வழங்குவதற்கு நான் முன்வருவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, ஐ.நா விசாரணைக் குழு முன்பாக சாட்சியமளிக்கத் தயார் என்று எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/77587.html
Geen opmerkingen:
Een reactie posten