தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

கொழும்பில் ஆகஸ்ட் 18- 20 வரை இராணுவக் கருத்தரங்கு: இந்திய இராணுவம், பாஜகவினர் பங்கேற்பு!

இலங்கையின் தலைநகர் கொழும்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 18ம் திகதி தொடங்கி 20 ம் திகதி வரையுள்ள மூன்று நாட்களாக இலங்கை இராணுவம் நடத்தும் வருடாந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. 
இக்கருத்தரங்கு நிகழ்வில் இந்திய இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகளும், பாஜக சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்கவுள்ளனர்.
இதற்கான ஒப்புதல் கடிதம் இரு தரப்பில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2009ல் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு, 2011ம் ஆண்டு முதல் இராணுவக் கருத்தரங்கை அந்நாட்டு அரசு நடத்தி வருகிறது.
இதில், பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் சர்வதேச நாடுகளின் இராணுவம், காவல்துறைகள் கையாளும் உத்திகள் உள்ளிட்டவை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 18 முதல் 20ம் திகதிவரை 3 நாட்களாக கொழும்பில் நடைபெறவுள்ள இராணுவக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு இராணுவம் செய்துள்ளது.
இக்கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராணுவ உயரதிகாரிகள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இராணுவத் தலைமையகத்துக்கும், சில அரசியல் தலைவர்களுக்கும் இலங்கை இராணுவம் அழைப்பு அனுப்பியுள்ளது.
இதையடுத்து, அக்கருத்தரங்கில் பங்கேற்க தமது அதிகாரிகளை இந்திய இராணுவம் அனுப்பி வைக்கும் என்றும், பாஜக சார்பில் அதன் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் ஒரு குழுவினர் கருத்தரங்கில் பங்கேற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கு குறித்து இலங்கை தூதரக வட்டாரங்களில் விசாரித்த போது, "இலங்கை: வளரும் நாடு எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு நட்பு நாடுகளும், பிற உலக நாடுகளும் எத்தகைய பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்கும் என்பதை முடிவு செய்ய இக்கருத்தரங்கு உதவியாக இருக்கும்.
தேசிய வளர்ச்சி, பயங்கரவாத தடுப்பு உள்ளிட்டவைகள் தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள்.
ஆனால், இந்தியாவின் பங்களிப்பைத்தான் இலங்கை மிகவும் உயரியதாகக் கருதுகிறது' என்று தெரிவித்தன.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchp0.html

Geen opmerkingen:

Een reactie posten