[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 02:15.37 PM GMT ]
இந்த சம்பவம் இன்று மாலை நடந்துள்ளது. வானத்தில் பறந்த பட்டம் அலரி மாளிகை எல்லைக்குள் வந்ததால், பொலிஸார் உடனடியாக தலையிட்டு அதனை இறக்கியுள்ளனர்.
வானில் பறந்த பட்டத்தின் உரிமையாளரை தேடி சென்ற பொலிஸ் அதிகாரிகள், அலரி மாளிகையின் பாதுகாப்பு அச்சுறுத்தல் எனக் கூறியே பட்டத்தை இறக்கியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcit3.html
தமிழர் உரிமைப் போராட்டம் என்பது முஸ்லிம்களுக்கும்தான்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 02:56.41 PM GMT ]
மீள்குடியேற்றம், இராணுவ வெளியேற்றம், அதிகாரப் பரவலாக்கல், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் சர்வதேசம் வலியுறுத்தும் கோரிக்கைகள் அத்தனையும் முஸ்லிம்களுக்கும்தான் என்பதை முஸ்லிம் சமூகம் இன்னும் உணரவில்லையா?
அதிகாரப் பரவலாக்கலை எதிர்க்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளையும் முஸ்லிம்கள் இன்னும் தெரிந்து கொள்ளவில்லையா?
வெளியொன்றும் உள்ளொன்றும் பேசும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை இன்னும் மஸ்லிம் மக்கள் கண்டு கொள்ளவில்லையா?
அதிகாரப் பரவலாக்கல் என்பது வடகிழக்கு வாழ் மூன்று இனங்களுக்கும் சொந்தமானது. யாரும் யாரையும் அடிமையாக்கக் கோரும் கோரிக்கையல்ல. தலை நிமிர்ந்து வாழ்வதற்காக அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவதற்காகவே என்பதை ஏன் இன்னும் முஸ்லிம்கள் உணரவில்லை.
தமிழ் தேசியம் உரிமை கேட்டு நிற்கின்றது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் எந்தத் தீர்வு அமைந்தாலும் அந்தத் தீர்வு முஸ்லிம்களுக்கும் உரித்தானதுதான். இந்த விடயத்தில் முஸ்லிம்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஏன் எதிர்க்கின்றார்கள் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.
தமிழர் இல்லாத கிழக்கு மாகாண சபை
தமிழர்களின் இரத்தம் சிந்திய தியாகப் போராட்டம்தான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் 13ஆவது திருத்தச் சட்டத்தையும் உருவாக்கியது. அதன் மூலமாக மாகாணசபை அமைந்தது.
கிழக்கு மாகாணசபை அமைந்த பின்பு மாகாண அமைச்சர்கள், முஸ்லிம் முதலமைச்சர் அவர்களின் படை பட்டாளம் என்று தமிழர்களை விட முஸ்லிம்களே அதிகளவு நன்மைகள் பெற்று வருகின்றார்கள்.இல்லை முஸ்லிம் அரசியல் வாதிகள்தான் சகல சுகபோகங்களையும் அனுபவித்து வருகின்றார்கள். ஆக தமிழர்கள் கேட்கும் அத்தனை உரிமைகளிலும் சுகம் அனுபவிப்பது முஸ்லிம் அரசியல்வாதிகள்தான்.
இது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் அந்த மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பிடுங்கும் தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்குவதும் முஸ்லிம் அரசியல்வாதிகள்தான்.
சிறுபான்மை மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் வழங்க வேண்டும் என்று சர்வதேசம் இலங்கையை கேட்கும் போது அதனை எதிர்த்து நிற்பவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள்தான். சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் மூலம் நன்மையடையப் போவது தமிழர்கள் மட்டுமல்ல முஸ்லிம்களும்தான் என்பதை முஸ்லிம்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
மாகாண சபை உருவாக்கம் என்பது தமிழ் மக்களின் குருதியின் மூலம் பெறப்பட்டதாகும் என்பதை முஸ்லிம்களால் மறுக்க முடியுமா? அப்படிப் பெறப்பட்ட கிழக்கு மாகாண சபையில் ஒரு தமிழர் கூட அமைச்சராக கிடைக்கவில்லையே. இதற்கான முழுப் பொறுப்பும் முஸ்லிம் காங்கிரசையே சாரும், ஹக்கீமையே சேரும்.
கிழக்கு மாகாண சபையின் ஆட்சி என்பது முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து ஆழ வேண்டும் தனித்து நின்று முஸ்லிம்களால் எதையும் சாதிக்கவும் முடியாது. ஆழவும் முடியாது. தனித்து நின்று அரசின் சுகபோகங்களையும் அரசின் எலும்புத் துண்டுகளை மட்டுமே கடிக்க முடியும். அதுதான் இப்போதும் நடைபெற்று வருகின்றது.
அதிகாரப் பரவலாக்கல்
அதிகாரப் பரவலாக்கல் என்கின்ற போது முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் நாடுகளும் எதிர்ப்பதன் நோக்கம்தான் என்னவென்று புரியாமல் உள்ளது. முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்னவென்று முஸ்லிம் நாடுகளுக்கு இன்னும் தெரியாமல் உள்ளது.
முஸ்லிம் நாடுகள் முஸ்லிம் அரசியல்வாதிகளால் பிழையாக நடாத்தப்படுகின்றது. தமிழ் முஸ்லிம் உறவுகளை மேம்படுத்தக்கூடிய முஸ்லிம் அரசியல் புதிய அணியொன்று அமைகின்ற போது முஸ்லிம் நாடுகளிடம் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை நன்கு புரிய வைக்கலாம், தெளிவுபடுத்தலாம்.
வடகிழக்கில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் நல்லதொரு தீர்வு அமையும் போது அந்தத் தீர்வானது முஸ்லிம் மக்களுக்கும்தான் என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் இன்னும் புரியவில்லை.
அதை ஏன் இன்னும் முஸ்லிம் மக்களுக்கும் தெரியவில்லை. கடந்த 12 வருடங்களாக முஸ்லிம் மக்கள் வடகிழக்கில் வாக்குரிமையே இல்லாத ரவூப் ஹக்கீம் என்னும் தனிமனிதனின் சுமநலனுக்காக முஸ்லிம் சமுகம் ஏமாற்றப்பட்டு வருவதை முஸ்லிம்கள் ஏன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை முஸ்லிம்களுக்கும் சேர்த்துத்தான் தமிழர்கள் அதிகாரப்பரவலாக்கல் கோருவதை முஸ்லிம்கள் நன்றாகப் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிறுபான்மை இனங்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. ஆனால் இதை எதிர்பார்ப்பதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் வரிந்துகட்டிக் கொண்டு முஸ்லிம் நாடுகளையும் இணைத்துக் கொண்டு கோதாவில் இறங்குவதன் நோக்கம் என்ன. எல்லாமே சுயநலம்தான்.
சர்வதேச அழுத்தங்களால் கிடைக்கப்போகும் நன்மைகள் முஸ்லிம்களுக்கும்தான் என்று தெரிந்து கொண்டும் இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்த்து நிற்பது என்பது அரசின் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு தீர்வு வரும் போது அதன் பலன்களையும் நன்மைகளையும் தாம் அனுபவிக்கலாம் என்ற சுயநலம்தான். தற்போது கிழக்கு மாகாண சபையை முஸ்லிம்கள் பங்குபோட்டது போன்று அனுபவிக்கலாம் என்ற நோக்கம்தான்.
சர்வதேச நாடுகள் இன்று அழுத்தம் கொடுப்பது என்பது தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளையும், வாழ்வியல் உரிமைகளையும் மீட்பதற்காகத்தான் என்பதை இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கும், சிறுபான்மை இனங்களுக்கு எதிரான ஜனநாயக மீறல்களுக்கும் துணைபோகும் முஸ்லிம் அரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழர்களின் போராட்டத்திற்குக் குறுக்கே முஸ்லிம் அரசியல்வாதிகள்
தமிழ் மக்களின் இராஜதந்திர நடவடிக்கைகளையும், அரசியல் முன்னெடுப்புக்களை யும் முஸ்லிம் அரசியல்வாதிகள் உதவி செய்யாவிட்டாலும், உபத்திரமாவது செய்யாமல் இருப்பது முஸ்லிம் மக்களுக்கு அதிக நன்மைகளைத் தரும்.
ஆனால் தமிழ் மக்களின் இராஜதந்திர நடவடிக்கைகளையும், அரசியல் முன்னெடுப்புக்களையும் முறியறிக்கும் நடவடிக்கைகளிலும் அந்த முறியடிப்புக்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகளையும் இணைத்துக் கொண்டு இலங்கைக்கு ஆதரவு தேடி முஸ்லிம் நாடுகளிடம் ஹக்கீம் போன்ற அரசியல்வாதிகள் வரிந்து கட்டுவதும் முஸ்லிம் மக்களுக்குச் செய்யும் படுபச்சைத் துரோகமாகும்.
முஸ்லிம்களை வழிநடாத்தக் கூடிய முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்கள் மத்தியில் தற்போது யாருமேயில்லை. விலைபோகக் கூடிய முஸ்லிம் அரசியல்வாதிகளே உள்ளார்கள்.
முஸ்லிம் சமூகம் என்பது வியாபாரச் சமூதாயம் என்ற யதார்த்தங்களை இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் மெய்யாக்கி வருகின்றார்கள். அரசியலை நிலையான வியாபார மாக்கிவிட்டார்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள். ஆனால் அந்த அசிங்கமான வியாபாரத்தின் மூலம் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் தமிழர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதுதான் யதார்த்தம்.
தமிழர்களும் முஸ்லிம்களும் இணைய வேண்டும்
தமிழர்களும், முஸ்லிம்களும் இணைய வேண்டும். இரு இனங்களும் இணைந்து இணைக்க அரசியல் நடாத்த வேண்டும். இரு இனங்களும் இணைவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு போதும் விரும்பவுமாட்டார்கள்.
குறிப்பாக ஹக்கீம் என்ற தனிமனிதன் விரும்பமாட்டார். இந்த உண்மையை முஸ்லிம்கள் தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள் என்பதையும் முஸ்லிம்கள் உணர வேண்டும்.
முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து இணக்க அரசியல் செய்யாது போனால் முஸ்லிம்கள் எடுப்பார்கைப் பிள்ளையாக மாறி விடுவார்கள். முஸ்லிம்கள் தனிமைப்பட்டுப் போவார்கள்.
முஸ்லிம்களும் தமிழர்கள் போன்று ஒரு நேர்கோட்டில் அரசியல் செய்வதற்கு ஒரு புதிய அணியொன்று உருவாக்கப்பட வேண்டும். இல்லாது போனால் முஸ்லிம்கள் எதிர்வரும் காலங்களில் நஷ்டமடைந்து விடுவார்கள்.
சர்வதேசத்தின் அணுகுமுறைகள், தமிழ் மக்களின் முன்னெடுப்புக்கள் பிரித்தானியாவில் தமிழர்களின் முன்னேற்றங்கள் ஆகியவைகளை முஸ்லிம்கள் நன்கு அவதானிக்க வேண்டும்.
வடகிழக்கு முஸ்லிம்களின் இருப்பிடம், தமிழ் மக்களின் உரிமைகளுடன் சங்கமித்து புதைந்து கிடக்கின்றது. நல்ல காலங்களும் வாய்ப்புக்களும் புறச் சூழலில் பிரகாசமாக வுள்ளது. இந்த வாய்ப்புக்களை முஸ்லிம்கள் நன்கு பயன்படுத்த வேண்டும்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வொன்று அமையும் போது முஸ்லிம்களுக்கும்தான் என்பதை ஒவ்வொரு வடகிழக்கு முஸ்லிம்களும் உணர்ந்து கொள்ளாத வரை முஸ்லிம்களுக்கு விமோசனம் கிடைக்கப் போவதில்லை.
முஸ்லிம்கள் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு வாக்களித்து கிடைக்காத உரிமைகளை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் மூலம்தான் கிடைக்கும் என்பதையும் உணர வேண்டும்.
தமிழ் மக்கள் கேட்கும் அதிகாரப் பரவலாக்கல் கிடைப்பதற்கு முஸ்லிம்களும் இணைந்து கொள்வதன் மூலம் முஸ்லிம்களுக்கு அதிக நன்மைகளும் இனஉறவும் மேலோங்கி நிற்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. முஸ்லிம் அரசியல்வாதிகள் இவைகள் பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் சிந்தித்தால் அவர்களது அரசியல் பிழைப்பு முடிந்து விடும்.
முஸ்லிம் மக்கள்தான் சிந்திக்க வேண்டும். எதிர்வரும் காலங்கள் முஸ்லிம்களுக்கு சவாலாகவே இருக்கும். முஸ்லிம்களை அடகு வைத்து பிழைப்பு நடாத்தும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளால் முஸ்லிம்களுக்கு எந்தவொரு பலனும், பயனும் கிடைக்கப் போவதில்லை. நம்பி மோசம் போவது மட்டும்தான் மிஞ்சப்போகின்றது.
முஸ்லிம்கள் தெளிவடைய வேண்டும். முஸ்லிம்கள் தமிழ்த் தேசியத்தை புறந்தள்ளுவதன் மூலம் முஸ்லிம்கள்தான் பின்தள்ளப்படுவார்கள். தீண்டத்தகாத அரசியலாக தமிழ் அரசியலை ஓரங்கட்டுவதன் மூலம் முஸ்லிம்களின் இருப்பிடம் கேள்விக்குறியாகிவிடும்.
தமிழர்களும் சிங்களவர்களும் என்றும் இணையமாட்டார்கள் என்ற நிலையில் தான் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் பிழைப்பு நடாத்தி வருகின்றார்கள். காலம் மாறும் அப்போது தமிழர்களிடம் முஸ்லிம்கள் உரிமை கேட்கும் நிலையொன்றை ஏற்படுத்திவிடும். அந்த நிலை மாற வேண்டுமானால் தமிழர்களுடன் முஸ்லிம்கள் இணக்க அரசியல் நடாத்த வேண்டும்.
சர்வதேசத்தினூடாக வடகிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறுமானால் முஸ்லிம்கள் எந்தப் பக்கம் என்பதை இப்போதே சிந்தித்து தெளிவடைய வேண்டும்.13ஐ ஒழிப்பதை விடமாட்டோம் என்கின்றார்கள்.
கலைஞர் கருணாநிதி போன்று தமிழர் விடயத்தில் டெல்லிக்கு கடிதம் அனுப்புவது போன்று இங்கு 13 ஐ ஒழிக்கக் கூடாது என்றும், அரசுக்கு சவால் விட்டு முஸ்லிம் காங்கிரஸ் கடிதம் அனுப்புகின்றார்களாம் மு.கா.
இது யாரை ஏமாற்ற இந்தக் கடித நாடகம் நாடாளுமன்றத்தில் பேசவேண்டியவைகளையும், ஜனாதிபதியிடம் பேசி தீர்வு காணவேண்டிய விடயங்களையும் கடிதம் எழுதிக் கேட்கின்றார்களாம். இது வேடிக்கையாக இல்லையா? விந்தையாக இல்லையா? கடிதங்களுக்கெல்லாம் இந்தக் காலத்தில் ஏதாவது பதில் வருகின்றதா? மக்களை ஏமாற்றுவதற்கு எப்படியெல்லாம் நடிக்க வேண்டியுள்ளது.
பறிபோகும் காணிகள்
அம்பாரை மாவட்டம் பொத்துவில் லபுகல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் மக்களின் கிராமன்சோலை பாலையடிவட்டை பகுதியில் 502 ஏக்கர் காணிகளை சிங்கள மக்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றதாம்.
காலா காலமாக விவசாயம் செய்து வந்த முஸ்லிம் மக்களின் 502 ஏக்கர் காணிகளையும் சுவீகரித்து சிங்கள மக்களுக்கு பிரித்துக் கொடுக்குமாறு அரசு உத்தரவு இடப்பட்டுள்ளதாம். இது பற்றி முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி என்று தம்பட்டம் அடிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் ஏவராவது வாய் திறந்துள்ளார்களா? பொத்துவிலுக்கென்று இருந்து வந்த ஒரேயொரு பிரதிநிதி பொலிஸ் அதிகாரி அப்துல் மஜீட் தோற்கடிக்கப்பட்ட பின்பு பொத்துவில் மக்கள் அரசியல் அநாதைகளாகி விட்டார்கள்.
தங்களது காணிகளுக்குள் உழவு வேலைகளுக்காகச் சென்ற போது முஸ்லிம் விவசாயிகள் விரட்டப்பட்டுள்ளார்கள். இதை எந்தவொரு முஸ்லிம் மக்கள் பிரதிநிதியாவது கேட்டுள்ளார்களா? இல்லையே அப்படியானால் மக்கள் இவர்களுக்கு எதற்காக வாக்களிக்கின்றார்கள் என்பதையாவது சிந்திக்க வேண்டாமா?
முஸ்லிம் எம்பிக்களாலோ அல்லது முஸ்லிம் அமைச்சர்களாலோ எந்தவொரு தீர்வோ நன்மையோ கிடைக்கப் போவதில்லை. பாவம் மக்கள்தான் ஏமாளிகள். மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரைக்கும் அரசியல்வாதிகள் எல்லோரும் வீரம் பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள்.
தமிழ் மக்களுக்காக இன்று அமெரிக்கா, கனடா உட்பட ஐரோப்பிய நாடுகள் இலங்கையைத் தட்டிக் கேட்கின்றது. ஐ.நா. மன்றமே கேட்கின்றது. ஆனால் இலங்கை முஸ்லிம்களுக்காக எந்த நாடாவது ஏதாவது கேட்கின்றதா? எத்தனை பள்ளிவாசல்கள் காடையர்களால் உடைக்கப்பட்டுவிட்டது. இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களே என்னவென்று கேட்காத போது இலங்கை முஸ்லிம்கள் யாரை நம்பி யாரில் தங்கியிருக்கின்றார்கள் என்ற கேள்வி பலமாக எதிரொலிக்கின்றது.
வடகிழக்கில் நாடு பிரிவதற்கான முன்னெடுப்புக்களை சர்வதேசம் நகர்த்தி வருகின்றது. முஸ்லிம்கள் ஒரு தெளிந்த நிலையை அடையவேண்டிய தேவையொன்று தொக்கி நிற்கின்றது.
முஸ்லிம்கள் மத்தியில் முஸ்லிம்களை வழி நடாத்தக் கூடிய தலைவர்கள் இல்லை. அரசியல்வாதிகள் இல்லை. முஸ்லிம்களுக்கென்று ஒரு புத்திஜீவியில்லை.
முஸ்லிம்களுக்கென்று ஒரு குரல் இல்லை என்கின்ற போது முஸ்லிம்களின் நிலைதான் என்ன? வடகிழக்கில் முஸ்லிம்களை வழி நடாத்தக் கூடிய ஒரு புதிய அணி உருவாகாமல் போனால் பாரிய நஸ்டம் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படப் போகின்றது.
வட கிழக்கில் முஸ்லிம் சமூகம் தமிழ் தேசியத்துடன் இணக்கம் காணாது இன்னும் ஊமையாக இருப்பார்களானால் முஸ்லிம்கள் தமிழ் தேசியத்தினாலும் கைவிடப்பட்ட மக்களாகவே அமைந்து விடும்.
வட கிழக்கு முஸ்லிம்கள் தங்களுக்கான அரசியல் பாதையை தெரிவு செய்ய முடியாது போனால் முஸ்லிம்களின் நிலைமை மிகவும் கேள்விக் குறியாகிவிடும். இலங்கை தொடர்பான சர்வதேசத்தின் அழுத்தம் மற்றும் ஐ.நா. மன்றத்தின் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் வாக்குமூலம் என்பது மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டும்.
வடகிழக்கு முஸ்லிம்களை வழி நடாத்தக் கூடிய ஒரு புதிய அணி உருவாக்கப்படும் போது மட்டும்தான் வடகிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலம் சுவீட்சமடையும். உறுதிப்படுத்தப்படும் வடகிழக்கு முஸ்லிம்களை வழிநடாத்தக் கூடிய அந்தப் புதிய அணி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒரு இணக்கப்பாட்டை ஒப்பந்தங்களாக போட்டுக் கொள்ளலாம்.
கூட்டமைப்புடன் இணக்க அரசியலுக்கு ஒரு அணியொன்று அவசரமாக அவசியமாக உருவாக்கப்பட வேண்டும். அரசியல் பிழைப்பு நடாத்துவதற்காக அல்லாமல் வடகிழக்கு முஸ்லிம்களைக் காப்பாற்றுவதற்காக முஸ்லிம்களின் உரிமைகளுக்காக வடகிழக்கு முஸ்லிம்களின் எதிர்காலத்திற்காக வடகிழக்கு முஸ்லிம்களின் இருப்பிடத்தை, வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்காக அந்த அணி கூட்டமைப்புடன் இணைந்து இணக்க அரசியல் நடாத்த வேண்டும்.
தமிழ் மக்களின் முன்னெடுப்புக்களையும், இராஜதந்திர நடவடிக்கைகளையும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முறியடிப்பதிலும், தடுப்பதிலும் ஈடுபட்டு வருவது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமும் கூட.
முஸ்லிம்களுக்கென்று ஒரு புதிய அணி உருவாகின்ற போது மொத்த வியாபாரிகள் இல்லாமல் போய்விடுவார்கள். முஸ்லிம்களிடத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஹக்கிமினால் முஸ்லிம்கள் பிழையாக வழி நடாத்தப்பட்டு வருகின்றார்கள்.
அந்த அரசியலுக்குப் பின்னால் பாதி அமைச்சு கேட்டு ஒரு கூட்டம், பதவி கேட்டு ஒரு கூட்டம் என்று ஒரு இளி நிலைக்கும், அவல நிலைக்கும் முஸ்லிம்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலை மாற வேண்டாமா? மாற்றம் வேண்டாமா? எந்தவொரு கொள்கையுமின்றி வீதியோர பேமண்ட் வியாபாரம் போன்று முஸ்லிம் காங்கிரஸ் அணி வடகிழக்கு முஸ்லிம்களை அரசின் பாதணிகளாக மாற்றியுள்ளது.
முஸ்லிம்களை அடிமையாக்கியுள்ளது. அந்த அடிமைச் சங்கிலியை உடைக்க வேண்டாமா? வடகிழக்கில் எதிர்கால முஸ்லிம் இளம் சந்ததியினரைக் காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்புக்குள் ஒரு புதிய அணிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
அந்தப் புதிய அணியொன்று கிழக்கில் இருந்து உருவாக வேண்டும். அந்த அணியை யார் உருவாக்கி, யார் முன்னெடுக்கப் போகின்றார்கள் என்ற கேள்வி விரிந்து காணப்படுகின்றது.
எம்.எம்.நிலாம்டீன்
mmnilamuk@gmail.com
mmnilamuk@gmail.com
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcit4.html
Geen opmerkingen:
Een reactie posten