தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 juli 2014

கோத்தபாயவிற்கு எதிராக முன்னாள் இராணுவ அதிகாரி சாட்சியம்

தோல்வியை நோக்கி நகரும் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரம்- மதுபான ஒழிப்பை கொண்டு வந்த அரசாங்கம் அதனை ஊக்குவிக்கிறது
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 03:39.39 AM GMT ]
இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர போர், தோல்வியடைந்து வருவதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்ததாக கூறப்பட்ட பின்னர், போர்க்குற்ற மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணையோ அல்லது சர்வதேச விசாரணையோ நடத்தப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
படையினரின் வெற்றியை பாதித்து விடலாம் என்ற அடிப்படையில் இந்த கருத்தை அரசாங்கம் கொண்டிருந்தது. எனினும் பின்னர் ஒரு கால கட்டத்தில் உள்நாட்டு விசாரணையை அரசாங்கம் ஏற்படுத்தப்போவதாக கூறியது.
அதனை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்வதா? என்ற கேள்விக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.
இந்தநிலையில் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ளாத போக்கை கொண்டுள்ள அரசாங்கம் சர்வதேசத்தை திருப்திப்படுத்த வேண்டுமானால், தமது உள்நாட்டு விசாரணைக்கு சர்வதேச நிபுணர்களை சேர்த்துக்கொள்ளும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இது அரசாங்கத்தின் ராஜதந்திரம் தோல்வியடைந்து வருகின்றமையை எடுத்துக்காட்டுவதாக ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
மதுபான ஒழிப்பை கொண்டு வந்த அரசாங்கம் அதனை ஊக்குவிக்கிறது
“மத்தட்ட தித்த” என்ற பெயரில் மதுபானதை ஒழிக்கும் திட்டத்தை முன்கொண்டு வந்த அரசாங்கம், தற்போது அதனை ஊக்குவிக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் கடந்த வருடத்தில் மாத்திரம் நாட்டில் 62 புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2012 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டதை விட அதிகமானதாகும்.
இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் 2005 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆம் ஆண்டுவரை மதுபானசாலைகளுக்காக 500 அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcir0.html
கோத்தபாயவிற்கு எதிராக முன்னாள் இராணுவ அதிகாரி சாட்சியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 07:04.27 AM GMT ]
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் முன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளார்.
ஐ.நா விசாரணைக்குழு நியூயோர்க், ஜெனிவா, பேங்கொக் ஆகிய நகரங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய தீர்மானித்துள்ளது.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்றுள்ள இராணுவ அதிகாரி ஒருவர் நியூயோர்க்கில் விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ளதுடன் அதற்கான சத்திய கடிதம் ஒன்றும் அவர் வழங்கியுள்ளார்.
அத்துடன் வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆரம்பம் முதல் இறுதி வரை செய்திகளை சேகரித்து வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான ஊடகவியலாளர் ஒருவர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிராக வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து ஜெனிவாவில் சாட்சியமளிக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.
ஐ.நா விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் நபர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட மாட்டாது, சாட்சியமளித்தவர்கள் யார் என்பது 2034 ஆம் ஆண்டே இலங்கை அறிந்து கொள்ள முடியும்.
இதற்கு முன்னர், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு சாட்சியங்களை பதிவு செய்த போது 4 ஆயிரம் சாட்சிய ஆவணங்களும் 2 ஆயிரத்து 300 பேரும் சாட்சியமளித்திருந்தனர்.
தருமஸ்மன் குழு முன் சாட்சியமளித்தவர்கள் பற்றிய தகவல்களை 2031 ஆம் ஆண்டே இலங்கை அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcisy.html

Geen opmerkingen:

Een reactie posten