தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 juli 2014

இலங்கையில் மொழிப் பயன்பாட்டினை ஊக்குவிக்க இணையத்தில் மும்மொழி அகராதி!



புலிகளை அழித்ததில் எமக்கு பங்கில்லை! புலிகளின் ஆதிக்கம் இன்றும் உள்ளது: தர்மலிங்கம் சித்தாத்தன்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 09:36.31 AM GMT ]
விடுதலைப்புலிகளின் செல்வாக்கு இன்றும் உள்ளது, அதன் விளைவாகவே கூட்டமைப்பு இன்றும் வெற்றி அடைகிறது என்கிறார் வடமாகாணசபை உறுப்பினர் தர்லிங்கம் சித்தாத்தன்.
லங்காசிறி வானொலியின் வட்டமேசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நோர்வே அதிகாரிகளுடன் சந்திப்பு
புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கடந்த 11.07.2014 வெள்ளிக்கிழமை அன்று நோர்வே நாட்டின் பிராந்திய அலுவல்கள் மற்றும் அபிவிருத்திக்கான மூத்த ஆலோசகர் ரூடில் லங்க லெட்டா மற்றும் நோர்வே வெளிவிவகார அமைச்சின் உதவி இயக்குநர் நாயகம் தூண அலோஸ் ஆகியோருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
ஓஸ்லோவில் அமைந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின்போது, வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் தமிழ் மக்கள் தற்போது முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக நோர்வே அதிகாரிகளுக்கு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டதுடன் நோர்வே நாடானது தற்போது இலங்கைக்கான உதவிகளை குறைத்திருப்பதோடு சிறிது சிறிதாக தன்னுடைய கவனத்தை வேறு நாடுகளுக்கு திசை திருப்பியிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டி இதை தாங்கள் மீள் பிரிசீலனை செய்து தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது
அத்துடன் வடக்கு மாகாண சபையை சரியான முறையில் நடத்திச் செல்வதற்கு பல்வேறு தடைகள் போடப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் விளக்கிக் கூறப்பட்டது. தமிழ் மக்களுக்கான ஒரு நியாயமான தீர்வினை நோக்கி நகர வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
முக்கியமாக வடகிழக்கின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி அவர்களை சொந்தக் கால்களில் நிற்பதற்கும் நோர்வே கடந்த காலங்களைப் போல தொடர்ந்தும் பங்களிப்பினைச் செலுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இவ்விடயங்களை மிகவும் அக்கறையுடன் கேட்டறிந்த நோர்வே அதிகாரிகள் இவை தொடர்பில் தாம் கூடுதல் கவனம் செலுத்தி பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சுவிஸ்வாழ் தமிழ் மக்களுடன் கலந்துரையாடல்..
புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கடந்த 20.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச் மாநகரில் சுவிஸ் வாழ் தமிழ் மக்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.
தர்மலிங்கம் சித்தார்த்தன் கருத்துக் கூறுகையில்,
"வெளிநாடுகளில் இருக்கின்ற புலம்பெயர் மக்கள் இன்று முக்கியமாக இரண்டு விஷயங்களை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒன்று மாகாண சபை என்ன செய்கின்றது என்பது மற்றையது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்பதாகும்.
மாகாணசபை ஒரு பலம்பொருந்திய சபையாக இயங்க வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். மக்கள் எல்லோரும் மிகவும் உற்சாகமாகவே வாக்களிப்பில் பங்குகொண்டார்கள். மாகாணசபை தம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் என்றே மக்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் நாங்கள் ஒரு அதிகாரமற்ற மாகாண சபையிலேயே பதவியேற்றிருக்கின்றோம். இந்த மாகாணசபையை முழுமையாக இயங்க விடாமல் அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. நாங்கள் ஒரு உண்மையை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.. நாங்கள் சபைக்குப் புதியவர்கள். ஆகவே இந்த சபையை சரியாக இயங்க வைப்பதற்கு ஆறுமாதங்களோ ஒரு வருடமோ தேவைப்படுகின்றது. இப்போது தான் ஆரம்பித்திருக்கின்றோம். பல நியமச் சட்டங்களை கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றோம். இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தி எமது மக்களுக்கும் பிரதேசத்திற்கும் செய்யக் கூடியவற்றை செய்ய ஆரம்பித்துள்ளோம்".
மேலும் "தமிழ் மக்களுடைய தேவைகளை நிச்சயமாக அரசு நிறைவேற்றாது என்பது எங்களுக்குத் தெரியும். அதற்காக ஒரு நிதியத்தை உருவாக்க புலம்பெயர் மக்களின் உதவியினை எதிர்பார்த்துள்ளோம். அந்த உதவிகளின் மூலம் எமது மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள் குறிப்பாக சுயதொழில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய உதவிகளைச் செய்து அவர்களை வாழ வைக்க வேண்டியது எங்களுடைய கடமை. அதை நிறைவேற்றுவதற்கு சபை நிச்சயமாக முயற்சிகளை எடுக்கும்.
முதலமைச்சர்கள் அவர்கள் மிகவும் கவனமாகவும் அக்கறையாகவும் சில வேலைகளைச் செய்து வருகின்றார். அவர் அந்தக் கடமைகளை சரியாக நிறைவேற்றுவார் என்கின்ற நம்பிக்கை சபையிலே இருக்கின்ற எங்கள் அனைவருக்கும் இருக்கின்றது.

 அத்துடன் புலம்பெயர் மக்களும் இப்படியான உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டுமென்பதுடன் தாங்கள் வாழும் நாடுகளின் அரசியல் தலைமைகளினூடாக தமக்கிருக்கும் அரசியல் செல்வாக்கைச் செலுத்தி தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கு இலங்கையரசு மீது அழுத்தத்தை கொடுக்க வேண்டுமென்றும்" கேட்டுக் கொண்டார்.
பிரான்ஸில் விசேட கலந்துரையாடல்
தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் கடந்த 17.07.2014 வியாழக்கிழமை அன்று மாலை 4மணிமுதல் இரவு 8 மணிவரையில் பிரான்ஸின் பொபினி என்ற இடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விசேட கலந்துரையாடலின்போது வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறினார்.
குறிப்பாக அனைத்தையும் இழந்து நிற்கின்ற தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி அவர்கள் தமது சொந்தக் கால்களில் நிற்பதற்கு புலம்பெயர் உறவுகள் உதவி வருவது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட புளொட் தலைவர். அம் மக்களுக்கான உதவிகளை தொடர்ந்தும் வழங்குவது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுமென்று தெரிவித்தார்.


http://www.tamilwin.com/show-RUmsyHRcLcixy.html

இலங்கையில் மொழிப் பயன்பாட்டினை ஊக்குவிக்க இணையத்தில் மும்மொழி அகராதி
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 09:41.44 AM GMT ]
இலங்கையில் மும்மொழிப் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் நோக்கில் ஜேர்மனியின் உதவியுடன் இணையத்தில் மும்மொழி அகராதி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மும்மொழி இணைய அகராதியை www.trilingualdictionary.lk என்ற முகவரியில் அணுகலாம்.
இலங்கையில் மும்மொழிப் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக ஜேர்மன் அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையின் அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் இந்தச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த மும்மொழி அகராதியில் 25,000 இற்கும் மேற்பட்ட சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளதோடு, பயனர்களின் வசதிக்காக இலவசமாகத் தரவிறக்கப்படக் கூடிய கணினி மென்பொருளொன்றும் காணப்படுகின்றது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரை 9.244, மொழிக் கொள்கையினை உரிய விதத்தில் அமுல்படுத்தவும், சிறிய வயதிலிருந்தே சிறுவர்களுக்கு மும்மொழிக் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) கல்வியினை வழங்கவும் பரிந்துரைக்கிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcixz.html

Geen opmerkingen:

Een reactie posten