[ புதன்கிழமை, 30 யூலை 2014, 07:13.18 AM GMT ]
இந்திய மத்திய அரசு மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை மாவட்ட குழு கூட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கச்சதீவு, இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமானது. மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின்னர் அவை அனைத்தும் அரசுக்கு சொந்தமாகி விடும். ஆனால் கச்சதீவு எப்போதும் இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளது.
இலங்கை போர் குறித்து விசாரணை நடத்துவதற்காக இந்தியா வரும் ஐ.நா. குழுவுக்கு விசா அளிக்க மத்திய அரசு மறுத்துள்ளது.
இலங்கை இராணுவத்தினருக்கு கடந்த மாதம் வரை குன்னூரில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இராணுவ கருத்தரங்குக்கு இந்திய அதிகாரிகள் கலந்து கொள்ள செல்வது என இலங்கையின் ராஜபக்ச அரசுக்கு ஆதரவாகவே மத்திய பாரதீய ஜனதா அரசு கண்ணை மூடிக்கொண்டு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என தா.பாண்டியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchu0.html
அமெரிக்கா எத்தகைய அறிக்கையினை விடுத்தாலும் எமது பணி தொடரும்!- ஞானசார தேரர் திட்டவட்டம்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 07:18.37 AM GMT ]
அமெரிக்காவின் அரசியல் தேவைகளை இலங்கைக்குள் நிறைவேற்றுவதற்கு பொதுபலசேனா தடையாக இருப்பதன் காரணமாகவே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பொதுபல சேனாவுக்கு எதிரான அறிக்கைகளை தொடர்ச்சியாக வெளியிடுகின்றதென குற்றம்சாட்டும் அதன் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர், இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் செயற்படுவதாக இந்திய உளவுப் பிரிவினர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவென்றும் கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் பொதுபலசேனா அமைப்பு உள்ளதாக அமெரிக்கா ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக தெளிவுபடுத்திய போதே கலகொட அத்தே ஞானசாரதேரர் இதனை தெரிவித்தார்.
தேரர் இது தொடர்பாக மேலும் தெளிவுபடுத்துகையில்,
இலங்கையில் அமெரிக்காவின் கைபொம்மையாக ஆட்டுவிக்கக்கூடிய அரசியல் பொம்மைகளை உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இங்கு மதங்களிடையே நல்லிணக்கம் இல்லையென்றும் இனங்களிடையே ஒற்றுமை இல்லையென்றும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
அதற்காக நாட்டுக்குள்ளேயே கைக்கூலிகள் அமர்த்தப்பட்டனர். மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதில்லையென்றும் ஜனநாயகம் வாக்குரிமை பாதுகாக்கப்படுவதில்லையென்றும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டதோடு அவற்றை நிவர்த்தி செய்வதற்கென கூறிக்கொண்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பணத்தை அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்கள் ஊடாக வழங்கி குழப்பங்களை நாட்டுக்குள் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், பொதுபலசேனா விழிப்பாக இருந்து இவ்வாறான திட்டங்களை தடுத்து நிறுத்தியது. இந்த கோபாவேசமே எமக்கெதிராக குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. அதைவிடுத்து எமக்கெதிராக நியாயமான முறையில் எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை.
இலங்கையில் அடிப்படைவாத கிறிஸ்தவ அமைப்புக்களுக்கு பணம் கொடுத்து மதமாற்றங்களை அமெரிக்காவே முன்னெடுக்கின்றது.
அத்தோடு இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதமும் அடிப்படைவாதமும் செயற்படுவதாக இந்திய உளவுப்பிரிவினர் தகவல்களை வெளியிட்டனர்.
இது தொடர்பில் அமெரிக்காவின் கவனம் எங்கே போனது? எந்த அறிக்கையை வெளியிட்டார்கள்? எதனையும் செய்யவில்லை. அரசாங்கத்திற்குள்ளிருக்கும் முஸ்லிம் அடிப்படைவாத சக்திகளும் அமெரிக்காவுக்கு துணை போகின்றன.
எவர் தடுத்தாலும் அமெரிக்கா எந்த அறிக்கைகளை வெளியிட்டாலும் பௌத்தத்தையும் நாட்டையும் பாதுகாக்கும் எமது வேலைத்திட்டம் தொடரும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchu1.html
Geen opmerkingen:
Een reactie posten