தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 31 juli 2014

மீண்டும் சரத் என் சில்வா அரசாங்கத்தின் வலையில் சிக்கினாரா?

நிபுணர் குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம்?
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 11:36.44 PM GMT ]
வெளிநாட்டு நிபுணர் குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணை நடாத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க வெளிநாட்டு நிபுணர் குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
மூவர் அடங்கிய விசாரணைக்குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
பிரித்தானிய சட்டத்தரணியான டெஸ்மன் டி சில்வா தலைமையிலான இந்த நிபுணர் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
நிபுணர் குழுவின் மூன்று பிரதிநிதிகளும் முதல் தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் பிரிட்டன் சட்டத்தரணிகளான டெஸ்மன் டி சில்வா மற்றும் ஜெப்ரி நைஸ் ஆகியோரை பிரிட்டன் சட்டத்தரணிகள் சங்கத்திலிருந்து வெளியேற்றுமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
எனினும் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchw7.html
பலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்!
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 11:45.04 PM GMT ]
பலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
காஸா நிலப்பரப்பில் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்த தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான பலஸ்தீன மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.
தாக்குதல்களுக்கு கண்டனம் வெளியிட்டு இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் பிற்பகல் 4.00 மணிக்கு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
பலஸ்தீன மக்கள் மீதான காலணித்துவ தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும், பலஸ்தீன இஸ்ரேல் மக்களின் சமதானத்தை உறுதி செய்ய வேண்டுமென கோரி போராட்டம் நடத்தப்படவுள்ளது.
“பாலஸ்தீனத்திற்கு வாழ இடமளிப்போம்” என்ற தொனிப்பொருளில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
முன்னணி சோசலிச கட்சி,  புதிய சமசமாஜ கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி,  இலங்கை சோசலிச கட்சி,  இலங்கை மாவோவாதி கம்யூனிஸ்ட் கட்சி,  ஜனநாயக மாக்ஸ்லைன் கட்சி ஆகிய கட்சிகளினால் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

மீள்குடியேற்றம், சுற்றுலாத்துறைக்கு சுவிஸ் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது!– பிரதமர்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 12:29.57 AM GMT ]
மீள்குடியேற்றம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் ஆகியவற்றுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் சுவிட்சர்லாந்து தூதுவர் தோமஸ் லிட்ஸ்வர், பிரதமரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பிரதமரை சந்தித்தித்திருந்தார்.
சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பு முன் பிரியாவிடை பெற்றுக் கொள்ளும் நோக்கில் லிட்ஸ்வர் பிரதமரை சந்தித்திருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள தூதுவர் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்து பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
மீள்குடியேற்றம், மனிதாபிமான உதவிகள்,  மருத்துவ உதவிகள் என சுவிட்சர்லாந்தின் உதவிகளை பட்டியலிட முடியும்.
மூன்று தசாப்த காலமாக நீடித்து வந்த போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டில் வடக்கில் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டது. வடக்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு சிவில் நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்ள மேலும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதமர் கோரியுள்ளார்.
இதேவேளை,  இலங்கை ஓர் எழில்மிகு நாடு என சுவிட்சர்லாந்து தூதுவர் லிட்ஸ்வர் தெரிவித்துள்ளார்.
எனது பதவி வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் தூதுவரும் இலங்கையுடன் நெருக்கமாக செயற்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLchx1.html
மீண்டும் சரத் என் சில்வா அரசாங்கத்தின் வலையில் சிக்கினாரா?
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 01:57.12 AM GMT ]
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையில் இலங்கையின் அரசியலமைப்பு தொடர்பிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தனவின் ஆலோசனையி;ன்பேரில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சரத் என் சில்வாவை இந்த விடயம் தொடர்பாக அண்மையில் சந்தித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எது எப்படியிருப்பினும் இந்தக்குழு இலங்கையின் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைத்து 17வது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும், மேலும் பல திருத்தங்களை அரசியலமைப்பில் கொண்டு வரவும் தமது பரிந்துரைகளை செய்யும் என்று கூறப்படுகிறது.
தாம் அத்துரலியே ரத்தன வழங்கிய பணிகளை ஏற்றுக்கொண்டு குறித்த பரிந்துரைகளை மேற்கொள்ளவிருப்பதாக சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஊவா மாகாணசபை தேர்தலின் பின்னர் இந்த பரி;ந்துரைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்றும் சில்வா குறிப்பிட்;டுள்ளார்.
சரத் என் சில்வா ஏற்கனவே அரசாங்கத்துடன் முரண்பட்டு சரத் பொன்சேகாவுடன் இணைந்து செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHQVLchx2.html

Geen opmerkingen:

Een reactie posten