தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 juli 2014

இராணுவத்தைக் கொண்டு போர்க்குற்றங்கள் தொடர்பில் போலி குற்றச்சாட்டு சுமத்த முயற்சி!– விமல்!!

காணி உரிமையாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும்: மாவை சேனாதிராசா
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 03:49.27 PM GMT ]
யாழ்.குடாநாட்டில் படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு காணி உரிமையாளர்களுடன் இணைந்து நாம் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என கூறப்படும் கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
மக்களுடைய காணிகளை மிக நீண்டகாலம் மக்களுக்கு வழங்காமல் வைத்திருந்தமையினால், காணி உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என பலம்வாய்ந்த சர்வதேச நாடுகளுக்கு கோரிக்கை விடுப்போம் எனவும், மக்களுடைய காணிகளை மக்களிடமே வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச மட்டத்தில் முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் மிருசுவில், அச்சுவேலி, அல்வாய், வலிகாமம் வடக்கு, வடமராட்சி கிழக்கு உள்ளடங்கலான பல பகுதிகளில் படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களுடைய காணிகள், பொதுதேவை என அடையாளப்படுத்தப்பட்டு சுவீகரிப்பதற்காக அளவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில், காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் எதிர்ப்பினால் அவை முடக்கப்படுகின்றது.
எனினும் நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகள் கைவிடப்படாத நிலையில், அவ்வப்போது பொலிஸ் பாதுகாப்புடன் காணிகளை அளவீடு செய்வதற்கும் முயற்சிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மேற்படி காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை நிரந்தரமாக கைவிடுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
குடாநாட்டில் பொதுமக்களுடைய காணிளை படையினர் ஆக்கிரமித்திருக்கின்றமைக்கு எதிராக என்னுடைய பெயரில் உச்ச நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகின்றது.
இதேபோல் 2ஆயிரத்து 176 பேர் தொடர்ந்த வழக்கும் நடைபெற்று வருகின்றது. இவை ஒட்டுமொத்தமாக குடாநாட்டில் காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிரானவையே.
இந்நிலையில் சமகாலத்தில் இடம்பெற்றுவரும் காணி சுவீகரிப்பு முயற்சிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய தேவை இல்லை என்றே நாம் கருதவேண்டியுள்ளது.
காரணம் நான் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று வழக்குகள் தற்போது நீதிமன்றில் நடைபெறுகின்றது. எனவே நாம் இந்த விடயத்தில் தற்போது மாற்றுக் கண்ணோட்டம் ஒன்றை கொண்டிருக்கின்றோம்..
அதாவது பொதுமக்களுடைய காணிகளை படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்க முடியாது. காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடும் வேண்டாம். ஆனால் மக்களுடைய காணிகளை மிக நீண்டகாலம் உதாரணமாக வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து 23 வருடங்கள் நிறைவடைகின்றது.
எனவே 23 வருடங்களாக அந்த நிலத்தில் படையினர் ஆக்கிரமித்திருக்கின்றார்கள்.  23 வருடங்கள் அவர்கள் தங்களது சொந்த நிலங்களில் வாழ்ந்திருந்தால், அவர்கள் தோட்டம் செய்திருப்பார்கள், மீன்பிடித்திருப்பார்கள் அவற்றின் மூலம் அவர்கள் வாழ்வாதார ரீதியாக முன்னேற்றமடைந்திருப்பார்கள். ஆனால் நடந்தது என்ன?
மக்கள் 23 வருடங்கள் தொழில் இல்லமல், முறையான வாழ்வாதாரம் இல்லாமல், கல்வி இல்லாமல், அடிப்படை வசதிகள் இல்லாமல், மிக அவலம் நிறைந்த வாழ்வை வாழ்ந்திருக்கின்றார்கள்.
எனவே அவ்வாறு வாழ்ந்தமையினால் அந்த மக்களுக்கு உண்டான இழப்பிற்கு இலங்கை அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும். அதனையே நாங்கள் கோருகின்றோம். அதற்காக சர்வதேச ஆதரவினை தேடும் நடவடிக்கைகளினையும் நிரந்தரமாக காணி அபகரிப்புக்களை தடுக்கும் வகையில் ஒரு சர்வதேச ஆணைக்குழு உருவாக்கும் நடவடிக்கையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.
மேலும் இதற்காக துருக்கி- சைப்பிரஸ் நாடுகளுக்கிடையில் கையாளப்பட்ட காணி தொடர்பான ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பினை நாங்கள் பெற்றிருக்கின்றோம்.
அதனடிப்படையில் நாங்கள் எங்களுடைய காணி பிரச்சினை தொடர்பான விடயத்தினையும் சர்வதேச மயப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLcit6.html

ஊடகவியலாளர்கள் மீது கைவைத்த அரசாங்கம் அதன் பலனை விரைவில் அனுபவிக்கும்: பா.கஜதீபன்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 04:53.03 PM GMT ]
தமது உயிரையும் துச்சமாக மதித்து ஊடகப்பணியில் ஈடுபட்டுவரும் ஊடகவியலாளர்கள் மீது வன்மத்துடன் பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களின் பணியினை முடக்க முயற்சித்துவரும் அரசாங்கம் இதற்கான விளைவுகளை மிகவிரைவிலேயே அனுபவிக்கும் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.
காரைநகர் கலாசார மண்டபத்தில் இன்று, வலி.தென்மேற்கு மற்றும் காரைநகர் இளைஞர் சம்மேளங்கள் இணைந்து நடாத்திய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய நிலையில் தாயகப் பகுதியில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மிகப்பாரிய சவால்களை நாளாந்தம் எதிர்கொண்டு வருகின்றார்கள். பெற்றோரை அச்சுறுத்தும் சவால்கள் பலவாக இருந்தாலும் இன்றைக்கு முக்கிய பிரச்சனையாக உருவெடுத்திருப்பது போதைப்பொருள் பாவனையாகும்.
மிகப்பலமான பின்னணியுடன் போதைப்பொருளானது எம்மக்கள் மீது திணிக்கப்பட்டு வருவதாக நான் நம்புகின்றேன். இலங்கை போதைப்பொருள் வர்த்தகத்தின் மையமாக விளங்குவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் அப்போதைப் பொருட்களை தன்களுக்கு எதிரானவர்களைப் பழிவாங்குவதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினர் பயன்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எமக்கு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
நேற்றுமுன்தினம் கூட கொழும்பில் இடம்பெறவிருந்த ஊடவியலாளர் பயிற்சிநெறிக்காக சென்றுகொண்டிருந்த எமது யாழ். மாவட்ட ஊடவியலாளர்கள் ஓமந்தையில் வைத்து பரிசோதனை எனும் பெயரில் அவமானப்படுத்தப்பட்டும், இவர்கள் பயணித்த வாகனத்தில் போதைப்பொருள் காணப்பட்டது என்று கூறி பல மணித்தியாலங்கள் அநாவசியமாக காக்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதன்பின்பு பல அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் கொழும்பு சென்று சேர்ந்த பின்பும் இவர்களை பயங்கரவாதிகள் என்றும், இவர்களை இப்பிரதேசத்தில் உள்நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி சிலர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்கள். இப்படியான ஒரு சம்பவம் ஒரு சிலமாதங்களுக்கு முன்பும் இடம்பெற்றமையையும் இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
ஓமந்தையில் வைத்து போதைப்பொருள் இருப்பதாகக்கூறி மறித்து அவமானப்படுத்தியவர்கள், கொழும்பில் வைத்து பயங்கரவாதிகள் என ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் ஆகிய இரண்டு காரியங்களையும் ஒரே தரப்பினரே ஏன் செய்திருக்க முடியாது?
அரசாங்கம் புரியும் சகல தவறுகளையும் ஆதாரத்துடன் எமது மக்களுக்கு வெளிப்படுத்தி ஊடகப்பணியாற்றி வரும் ஊடவியலாளர்களுக்கு எதிராக இடம்பெற்றிருக்ககூடிய இச்சம்பவம், அவ் ஊடகவியலாளர்களை முன்னரிலும் வேகமாக அவர்களை செயற்படத்தூண்டும்.
தமிழ்ச் சினிமாப் படப் பாணியில் நடந்திருக்கக்கூடிய இச்சம்பவம் இலங்கையில் தமிழ் ஊடகத்துறையினருக்கு எவ்வாறான அச்சுறுத்தல் நிலவுகின்றது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களின் பணியினை முடக்க முயற்சித்துவரும் அரசாங்கம் இதற்கான விளைவுகளை மிகவிரவிலேயே அனுபவிக்கும் என நம்புகிறேன்.
இச்சம்பவத்துக்கு எதிராக பாரியளவிலான போராட்டங்களை வடக்கு கிழக்கு எங்கிலும் முன்னெடுத்து இன்றைய நாட்டின் உண்மை நிலைய வெளிப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன், காரைநகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆனைமுகன் மற்றும் இளைஞர் சம்மேளன நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLciuy.html
இராணுவத்தைக் கொண்டு போர்க்குற்றங்கள் தொடர்பில் போலி குற்றச்சாட்டு சுமத்த முயற்சி!– விமல்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 11:30.11 PM GMT ]
இராணுவத்தைக் கொண்டு போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்த முயற்சிக்கப்படுவதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றது என்ற பொய்யை உண்மையாக்க இராணுவ அதிகாரியை விலைக்கு வாங்கி, அவரின் ஊடாக சாட்சியமளிக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பொய் ஒன்றை உண்மையாக்க அதே தரப்பைச் சேர்ந்த ஒருவரைப் பயன்படுத்தி சாட்சியம் பெற்றுக் கொள்வதே மேற்குலக நாடுகளின் திட்டமாகும்.
அவ்வாறு சாட்சியமளிக்க விரும்பும் நபரின் முழுக் குடும்பத்திற்கும் சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வரலாற்றில் ஏற்கனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
நாட்டின் ஏதாவது ஓர் நிலையை வகிக்கும் இராணுவ அதிகாரி ஒருவரை விலக்கு வாங்குவது சுலபமானது.
பண பலத்தினால் அவரைக் கொண்டு பொய்யான சாட்சியங்களை அளிக்க முடியும்.
அவ்வாறு சாட்சியம் பெற்றுக்கொண்டு அவற்றைப் போர்க்குற்றமாக பிரசாரம் செய்ய முடியும்.
இதற்கு இhhணுவத்தில் கடமையாற்றிய எவரையேனும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தெமட்டகொட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRbLciuz.html

Geen opmerkingen:

Een reactie posten