பாலஸ்தீன விடுதலை இயக்கங்களோடு இன்றுவரை தொடர்பில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய, உறுப்பினர் ஒருவரின் தகவலுக்கு அமைய இச்செய்தி எழுதப்படுகிறது. பாலஸ்தீன இயக்கத்தின் முன்னோடியான அமரர் யாசீர் அராஃபாத்தின் மெய்ப் பாதுகாப்பளர்கள் சிலர், தமிழர்கள் கூட செய்ய நினைக்காத காரியத்தை செய்ய துணிந்தார்கள். ஒரு போராட்ட இயக்கம் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக, புலிகளின் தலைமையை அவர்கள், முள்ளிவாய்க்காலில் இருந்து காப்பாற்ற முனைந்தார்கள். அங்கே என்ன நடந்தது ? இது சற்று நீண்ட செய்தி என்பதனால் 2 பாகங்களாகப் பிரித்துளோம். 2ம் பாகம் நாளை(31) வெளியாகும் !

வன்னியில் இறுதியுத்தம் நடைபெற்றவேளை, விமான தாக்குதல் காரணமாகவே இராணுவத்தினர் அதிக அளவில் முன்னேறுகிறார்கள் என்று உணர்ந்துகொண்ட புலிகள் அதனை சமாளிக்க விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தேவை என்பதனை புரிந்துகொண்டார்கள். இதனை வாங்கி வன்னிக்கு கொண்டு வரும் பொறுப்பில் ஒரு பகுதியை சாள்ஸ் அன்ரணி(தேசியதலைவரின் புதல்வர்) பொறுப்பேற்றார். இந்தவேளையில் தான் நரித்தனமாக மீண்டும் புலிகளுக்கு உதவுவதுபோல நடித்து, கே.பி அவ்வியக்கத்தினுள் ஊடுருவுகிறார். கே.பியை மட்டும் நம்பி இருக்காமல், வேறு சிலர் ஊடாகவும் விமான எதிர்வு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய புலிகள் திட்டம் தீட்டினார்கள். அந்தவேளை தான், தமது பழைய உறவுகளை தூசுதட்ட அவர்கள்ஆரம்பித்தார்கள்.

ஐரோப்பாவில் உள்ள சில நபர்கள் ஊடாக, புலிகள் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் உதவியை நாடியது. தற்போது அவ்வியக்கமானது பல துண்டுகளாக உடைந்து வேறு வேறு பெயர்களில் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வருகிறார்கள். ஆனால் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தேசிய தலைவராக விளங்கிய யாசிர் ஆராஃபாத் இறக்க முன்னர், அவ்வியக்கமானது பெரும் கட்டுக்கோப்பில் இருந்தது. ஈழ விடுதலைக்கு பல வழிகளில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொடக்கமே அவர்கள் உதவி வந்துள்ளார்கள் என்பதனை எவராலும் மறுக்க முடியாது. பாலஸ்தீனத்தில் இருந்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முடியுமா என்று அவ்வியக்கத்தில் உள்ள முக்கியஸ்தர்களோடு பேச்சுவார்தை நடைபெற்றது.
இந்த வேளையில் புலிகள் இயக்கம் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம், எந்த நிலையில் உள்ளார்கள் என்பது பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு விளக்கப்பட்டது. புலிகளின் பாரிய பின்னடைவு குறித்து பாலஸ்தீன இயக்கம் கவலைகொண்டு இருந்தது. யாசீர் அராபாத் இளமைப் பருவத்தில் போராட ஆரம்பித்த நாள் முதல், அவருடன் நட்பு வட்டாரத்தில் இருந்தவர்கள் பலர், பின்னர் அவரது போராட்டத்தில் இணைந்து அவரது மெய்ப் பாதுகாவலர்களாகவும் மாறினார்கள். அவர்களின் 3 மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார்கள். அவர்களுக்கு தேசிய தலைவர் பிரபாகரனை நன்கு தெரியும். கடந்த 30 ஆண்டுகளாக புலிகள், பலம்பெற்று ஒரு பெரும் நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முதல் அனைத்தையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.

இப்படியாக 1 ஆண்டு கழிந்தது. இந்தவேளையில் தான்(2009) அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்டின்(Secretary of state) தலைவியான ஹிலரி கிளிங்ரனிடம் இருந்து புலிகளுக்கு ஒரு பேக்ஸ்(FAX) வந்தது அமெரிக்காவில் உள்ள ருத்திரகுமாரன் மேலும் சிலர் இணைந்து அமெரிக்காவின் உதவியை நாடியதாலும் மேலும் அமெரிக்காவில் உள்ள பெரும் ஈழத் தமிழ் செல்வந்தரான ராஜ் ராஜரட்னம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருந்த ஹிலரி கிளிங்ரனுக்கு பெரும் நிதி உதவிசெய்திருந்தார். இதனால் அமெரிக்க அரசியலில் உள்ள சில முக்கிய புள்ளிகள் தாம், உதவ உள்ளது போல நாடகம் ஆடியுள்ளார்கள். கடல்கரை ஓரமாக வந்தால், பசுபிக் பிராந்தியத்தில் உள்ள தமது கப்பல் சிலரை மீட்க்கும் என்று அவர்கள் கூறியவேளை, இது அனைத்தும் பொய் !
அமெரிக்கா புலிகளை அழிக்கவே திட்டம் தீட்டியுள்ளது என்று, முதலில் உண்மையை போட்டு உடைத்தது பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இருந்த முன் நாள் உறுப்பினர்கள் தான். ஒரு சிறிய விடுதலை இயக்கம் எவ்வாறு வளர்சியடைந்து ஒரு நாட்டு இராணுவம் போல உருவாகலாம் என்பதற்கு நல்ல உதாரணம் புலிகள் தான். இவர்களை பின் பற்றி பல அமைப்புகள் பிற்காலத்தில் முஸ்லிம் நாடுகளில் உருவாகலாம். எனவே புலிகள் அழிக்கப்படவேண்டிவர்கள் என்ற அமெரிக்காவின் கருத்தில் மாற்றம் இல்லை. இவர்கள் தற்போது நடிக்கிறார்கள் என்று பாலஸ்தீன முக்கியஸ்தர்கள் எவ்வளோ எடுத்துச் சொன்னார்கள். ஆனால் தற்போது நாடு கடந்த அரசின் பிரதமர் என்று தன்னை கூறிக்கொள்ளும் ருத்திரா போன்றவர்கள் கண்மூடித் தனமாக அமெரிக்காவை நம்பினார்கள்.. இதனால் பாலஸ்தீன இயக்கத்தில் உள்ள சிலர் தாமே புலிகளின் தலைமை காப்பாற்ற முயற்சி ஒன்றை மேற்கொள்ள திட்டம் ஒன்றை தீட்டினார்கள்.... (நாளை தொடரும் 31.07.2014)
http://www.athirvu.com/newsdetail/627.html
Geen opmerkingen:
Een reactie posten