தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 juli 2014

பிரதமர் மோடி பேரறிவாளனின் விடுதலையை உறுதி செய்வார்: அற்புதம்மாள் நம்பிக்கை!

ராஜபக்ஷ ஆட்சி முடிவுக்கு வரும் நாளில் பௌத்த சாசனம் பாதுகாக்கப்படும்: ரணில் விக்ரமசிங்க
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 09:22.38 AM GMT ]
ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நாளில் பௌத்த சாசனம் பாதுகாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய புத்திஜீவிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
போதைப் பொருள் விற்பனை செய்யும், ஊழல்களை மேற்கொள்ளும் அரசாங்கம் நீண்டகாலம் முன்னோக்கி செல்ல முடியாது,  அத்துடன் ராஜபக்ஷ அரசாங்கம் பௌத்த சாசனத்தை தமக்கு அடிபணிந்ததாக மாற்ற முயற்சித்து வருகின்றது.
அரசாங்கம் பௌத்த சாசனத்தை பாதுகாக்க கடமைப்பட்டிருக்க வேண்டும். பௌத்த சாசனம் ஜனாதிபதிக்கு அமையவோ,  கட்சிக்கு அமையவோ ஏற்படுத்தப்படவில்லை.
பௌத்த சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பௌத்த சாசன அமைச்சில் உள்ள சில பிக்குமார் உதவி வருகின்றனர், அவர்கள் அதனை செய்யக் கூடாது.
கண்டியில் அண்மையில் இரவு நேர கார் ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டது.  மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும் அந்த பந்தயம் நடத்தப்பட்டது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchv1.html
பிரதமர் மோடி பேரறிவாளனின் விடுதலையை உறுதி செய்வார்: அற்புதம்மாள் நம்பிக்கை
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 09:32.52 AM GMT ]
இந்தியப் பிரதமர் மோடி தனது மகனின் விடுதலையை உறுதி செய்வார் என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவிக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
அற்புதம்மாள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த வேளை நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
எனது மகனின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த சதாசிவம் உத்தரவிட்டார். பேரறிவாளனின் விடுதலையை மாநில அரசு முடிவு செய்யலாம் எனவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பேரறிவாளனை விடுதலை செய்யப்போவதாக அறிவித்து, மத்திய அரசிடம் இது பற்றி தெரிவித்திருந்தார்.
ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பழிவாங்கும் நோக்கில் எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து விடுதலையை தடுத்தது.
தற்போது இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மூன்று முறை குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடிக்கு மாநிலத்தின் அதிகாரம் பற்றி தெரியும்.  அவர் எனது மகனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், விடுதலையில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை உறுதி செய்வார் என எதிர்பார்க்கிறேன் என அற்புதம்மாள் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchv2.html

Geen opmerkingen:

Een reactie posten