யாழில் மக்கள் வாழ்க்கைக்கு குழி தோண்டும் பிரேத குழிகள்!
உரும்பிராய் வடக்கில் உள்ள கிறிஸ்தவ மயானம் ஒன்றில் இது சம்பந்தப்பட்ட புகைப்படங்களை நாம் எடுத்துக் கொள்ள முடிந்தது.
ஆனால் இம்மயானம் இப்பகுதி மக்களால் பயன்படுத்தப்படுவது அல்ல. வெளியூர் மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இப்பகுதி மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை குறித்து வெளியூர் மக்கள் சிந்திக்க தவறுகின்றனர் என்று குற்றம் சாட்டப்படுகின்றது.
http://www.jvpnews.com/srilanka/77565.html
வடக்கு ஊடகவியலாளர்களுக்கு எதிராக கொழும்பில் அரசு ஆர்ப்பாட்டம்!
இந்த நிலையில் அத்தகைய செயலமர்வை நடத்தக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘பயங்கரவாத ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு நடத்தாதே’, ‘நாட்டைக் காட்டிக்கொடுத்து சர்வதேச விசாரணைக்கு இட்டுச் செல்பவர்கள் இவர்கள்தான்’ போன்ற கோசங்களை எழுப்பியவாறு பதாகைகளை ஏந்தியிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, செயலமர்வில் கலந்துகொள்வதற்காக வடபகுதியிலிருந்து கொழும்புக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் நேற்றிரவு பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/77575.html
திருமலையில் கைகலப்பு! இருவர் படுகாயம்
அஸ்லம்( 37) 103/1 மூர் வீதி-திருமலை மற்றும் தாஹீர் (22) அந்தோனியார் வீதி – திருகோணமலை ஆகிய இருவருமே பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சோனகத் தெருவில் புதிதாக வீடு ஒன்றினை நிர்மாணிக்கச் சென்ற ஒப்பந்தகாரர் மீது இத்தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
தாக்கிய நபரின் வீட்டுக்கு அருகில் புதிதாக புதிய வீடு ஒன்றினை நிர்மாணிக்க தாக்குதலுக்குள்ளான ஒப்பந்தக்காரருக்கு வெளிநாட்டில் உள்ள நண்பர் வீடு கட்டுவதற்கு பணம் அனுப்பியுள்ளதாகவும் அதனையடுத்து வீடு கட்டுவதற்கு ஆயத்தமாகும் வேளையில் தங்களுடைய வீட்டுக்கு மூன்று அடி தள்ளி நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்குமாறு கூறியே ஒப்பந்த காரரையும் சக ஊழியர்களையும் இரும்பு கம்பியினால் தாக்கியதாகவும் நேரில் கண்டவர்கள் வாக்கு மூலம் வழங்கி உள்ளனர்.
தாக்குதல் நடாத்திய இரண்டு பேரை கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/77578.html
Geen opmerkingen:
Een reactie posten