தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 juli 2014

இலங்கை முழுவதும் ஒரே இரவில் சுவரொட்டிகள்: ஒட்டியது யார்?

மேர்வின் சில்வாவின் புதல்வர் போதைப் பொருள் கடத்தியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 10:52.14 AM GMT ]
பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
2010ம் ஆண்டு அமெரிக்க தூதரகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட கேபிள் தகவல்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எக்ஸ்டசி என்னும் ஓர் போதைப் பொருளை இலங்கையில் மாலக பெரேராவே விநியோகம் செய்து வருவதாகவும் அவரே ஏக முகவராக செயற்பட்டு வருகின்றார்.
இது தொடர்பில் பொலிஸார் இரகசியமாக தகவல்களை திரட்டியுள்ளனர்.
மாலகவை கைது செய்யும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
விக்கிலீக்ஸ் கேபிள் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcix2.html
புத்தளம் இராணுவ முகாமில் வெடிப்புச் சம்பவம் - இளைஞர்களுக்கு சிறந்த சமூக முறையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்: ரணில்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 11:07.27 AM GMT ]
புத்தளம் இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் ஒன்றில் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த இராணுவ வீரர், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பயிற்சிகளை முடித்து செல்லும் வைபவம் இன்று மதியம் நடைபெற்ற வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முகாமில் பணியாற்றிய, குண்டு செயலிழக்க செய்யும் பிரிவின் இராணுவ வீரரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
சம்பவம் குறித்து இராணுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்காலத்தை பொறுப்பேற்கும் இளைஞர்களுக்கு சிறந்த சமூக முறையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்: ரணில்
அடிப்படை எதிர்பார்ப்பை எதிர்காலத்தை பொறுப்பேற்கும் இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த சமூக முறைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் உள்ள தனியார் பகுதி நேர கலாசாலையில் பயிலும் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இன்று கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மாணவ, மாணவிகளுடன் குறுகிய நேர கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcix3.html

இலங்கை முழுவதும் ஒரே இரவில் சுவரொட்டிகள்: ஒட்டியது யார்?
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 11:31.53 AM GMT ]
திட்டமிட்ட குழுவொன்று நாடு முழுவதும் இன்று அதிகாலை சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இருளை எதிர்க்கும் உங்களுக்கு என அதில் எழுதப்பட்டுள்ளதுடன் கீழ் பகுதியில் முதலாம் முன்னணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டிகளினால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் யாரால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன என்பது தெரியவில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyHRcLcix4.html

Geen opmerkingen:

Een reactie posten