தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 juli 2014

இலங்கை முஸ்லிம்களாக வாழ்வதற்கு மறந்து விடுகின்றோம்

கரையோரப் பாதுகாப்பு உச்ச அளவில் – கடற்படை

எனினும், கரையோரப் பாதுகாப்பு உச்சளவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளா கோசல வர்னகுலசூரிய தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 24 மணித்தியாலங்களும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/77608.html

இலங்கை முஸ்லிம்களாக வாழ்வதற்கு மறந்து விடுகின்றோம்

‘இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் சவூதி அரேபியா, பாகிஸ்தான் நாட்டில் இருப்பவர்கள் போன்று சிந்திக்கக் கூடாது’ என்று கட்டார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தீன்முஹம்மட் தெரிவித்தார். ’இலங்கையில் முஸ்லிம்களாக வாழ்கின்ற நாம் இலங்கை முஸ்லிம்களாக வாழ்வதற்கு மறந்து விடுகின்றோம்.
அக்கரைப்பற்று மாநகரசபை வளாகத்தில் சனிக்கிழமை(26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் விசேட சொற்பொழிவாளராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலே அவர் இவ்வாறு கூறினார். ’இலங்கை முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ளும் நாம் இலங்கை முஸ்லிம்கள் என்பதை மறந்து, எமது அடையாளங்கள்; மறந்து தவறு விட்டுக்கொண்டிருக்கின்றோம். இது ஆபத்தானதொரு விடயமாகும்.
ஐரோப்பாவிலே யூதர்கள் இவ்வாறானதொரு நிலையையே அன்று எதிர்நோக்கினார்கள். இஸ்லாத்திற்கும், எமது இலங்கையின் தன்மைக்குமிடையில் ஒற்றுமையை, கூட்டுறவை ஏற்படுத்துவது என்பது இன்றைய சிந்தனையாளர்களுக்கும், உலமாக்களுக்கும், அறிஞர்களுக்கும் இடையே தோன்றியுள்ள மாபெரும் சவாலாகும்.
ஒரு சமூதாயம் உண்மையான, ஸ்திரமான சமூகமாக வாழ்வதற்கு அரசியலும் அதிகாரமும் செல்வமும் மட்டும் போதாது. இதற்கு மேலாக கூட்டுறவு, ஒருமைப்பாடும் காணப்படும் போதுதான் ஒரு முன்னேற்றகரமான சமூதாயமாக காணப்படும்.
ஆனால், நாங்கள் அந்த கூட்டுறவு ஒருமைப்பாட்டினைப் பற்றி சிந்திக்காமல், பேசாமல் அரசியலையும் செல்வத்தையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றோம்.
நமக்கு ஒரு தேவை ஏற்படும் போது அதனை ஒரு அரசியல் வாதியூடாக அல்லது செல்வந்தர் ஊடாக அடைய முற்படுகின்றோம். இவ்வாறே எமக்கு ஒரு குறையேற்படின் அதற்கும் அரசியல், செல்வம் படைத்தவர்களே காரணம் என்று கூறிக் கொள்கின்றோம். ஒரு மனிதனின் அதிகளவிலான மாற்றத்தினை வீடும் பாடசாலையும் வணக்கஸ்தலமும் ஏற்படுத்துகின்றது. இந்த மூன்று நிறுவனங்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு சமூதாயம் முன்னேற முடியாது.
இதில் விழுமியங்கள், அன்பு, நம்பிக்கை, உறவு, மற்றவர்கள்மீது அன்பு செலுத்துதல் இவ்வாறான சகல பண்புகளும் இங்கு வளர்க்ப்படுகின்றன. எனவேதான் இந்த மூன்று நிலையங்களும் அதன் பொறுப்பை சரியான முறையில் செய்ய வேண்டும். அதிகாரமுள்ளவர்கள் இம்மூன்று நிறுவனங்களின் பணிகளை வளர்ப்பதநற்கான உதவிகளை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் ஒரு பிரதேசத்தினதும் நாட்டினதும் ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும்.
நமது சமூகத்தின் வரலாறு தெரியாமல் அங்குமிங்கும் கதைத்து திரிவதில் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. நாம் யார் என்ற ஓர் அறிவு இருக்க வேண்டும், நமது தேவைகள் என்ன என்பதனை அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு ஏனைய மதங்களையும், அவர்களின் வரலாறுகளையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
முக்கியமாக முஸ்லிம்கள் யூதர்களின் வரலாற்றினைப் படிக்க வேண்டும். அங்குமிங்குமாக வாழ்ந்த திரிந்த யூதர்கள் இன்று பலமாக இந்த உலகில் எவ்வாறு கால் பதித்துள்ளனர் என்பதனை நாங்கள் படிப்பதன் மூலம் பல விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.
கடந்த 200 ஆண்டு கால வரலாற்றிலே யூதர்கள் தங்களை வெற்றிகரமாகமானவர்களாக மாற்றிக்கொண்டது போன்று உலக வரலாற்றில் எந்தவொரு சமூதாயமும் ஆக்கிக் கொள்ளவில்லை. 15 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இவர்கள் இன்று இந்த உலகையே ஆட்டிப் படைக்கும் சக்தியை கொண்டுள்ளனர்’ என்று கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/77611.html

Geen opmerkingen:

Een reactie posten