[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 07:40.15 AM GMT ]
முஸ்லிம் மக்களுக்கு வீடு அமைப்பதற்கென அமைச்சர் றிசாத் பதியூதீன் 18 கோடி ரூபாவுக்கும் மேல் வெளிநாட்டு நிதியுதவியை தனது அமைச்சுக்கு நேரடியாக பெற்றுக் கொண்டதன் காரணமாக பாரிய இராஜதந்திர சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு கிழக்கில் 22 வருடங்களாக வீடுகளை இழந்து அகதிகளான முஸ்லிம் மக்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்க வேண்டும் என தெரிவித்தே அமைச்சர் றிசாத் பணம் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் அகதி முகாம்கள் இல்லை எனவும் இடம்பெயர்ந்தவர்கள் சகலரும் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர், நாட்டில் அகதிகள் இருப்பதாக கூறி வெளிநாட்டு நிதியுதவியை கோரியதன் மூலம் இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளது.
வெளிநாட்டு உதவியை பெறச் சமர்ப்பித்துள்ள கடிதத்துடன், இலங்கையில் முஸ்லிம் அகதிகள் இருப்பதாக உறுதிப்படுத்த தயாரிக்கப்பட்டுள்ள விவரணப் பட காணொளியையும் இணைத்து அமைச்சர் அனுப்பியுள்ளார்.
இதன் காரணமாக நடத்தப்பட உள்ள போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேச விசாரணையின் போது இந்த காணொளி நாட்டுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இந்த அறிக்கை தொடர்பில் கொழும்பில் உள்ள மேற்குலக தூதரகங்கள் கடும் கவனத்தை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான், சவூதி அரேபியா, பஹ்ரைன், கஸகஸ்தான் போன்ற நாடுகளிடம் நிதியுதவியை கோரியுள்ள அமைச்சர் பதியூதீன், ஏற்கனவே 14 லட்சம் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கான அனுமதியை பெற்றுள்ளார்.
இதில் பஹ்ரைனிடம் இருந்து மாத்திரம் 15 கோடி ரூபாவை பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சாதாரணமாக அரச அபிவிருத்திப் பணிகளுக்கு நிதியமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வள திணைக்களத்தின் ஊடாகவே வெளிநாட்டு உதவியை பெற முடியும் என்ற நிலையில், அமைச்சர் பதியூதீன் நேரடியாக நிதியை பெற்றுள்ளமையானது பாரதூரமான நிலைமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyH
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தில் பாரிய அரசியல் பிளவு?- தேசிய வங்கிகளிடம் அரசு கடன்: வங்கிகள் ஆபத்தில்!
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 07:58.15 AM GMT ]
ராஜபக்ச குடும்ப ஆட்சியினால் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை இரண்டரை வருடங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வழங்குவதாக ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றிக் கொள்ள அந்த கட்சி முயற்சித்து வருகிறது.
இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் ராஜபக்ச நிர்வாகத்திற்கும் இடையில் புதிய மோதல்கள் உருவாகி வருகிறது.
கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சிக்கு இருக்கும் 22 உறுப்பினர்களில் 7 உறுப்பினர்கள் தமது கட்சிக்கு இருப்பதால், அதனை தீர்மானிக்க கூடிய வகையில் பயன்படுத்த போவதாக முஸ்லிம் காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
வீதிகளை நிர்மாணிக்க தேசிய வங்கிகளிடம் அரசு கடன் - வங்கிகள் ஆபத்தில்
வீதிகளை நிர்மாணிப்பதற்காக இன்றைய அரசாங்கம் தேசிய வங்கிகளிடம் இருந்து 3 ஆயிரத்து 373 கோடி ரூபாவை கடனாக பெற்றுள்ளது.
இந்த கடன் நீண்டகால கடன் அடிப்படையில் பெறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வீதிகளை நிர்மாணிக்க தேசிய வங்கிகளிடம் இருந்து கடனை பெற்றமையானது பாரதூரமான நிலைமையாகும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வீதிகளை நிர்மாணிப்பது நேடியான பொருளாதார முதலீடு அல்ல எனவும் தேசிய முதலீடுகளுக்காக பயன்படுத்தக் கூடிய இந்த பணத்தை நீண்டகால கடன் அடிப்படையில் பெற்றுள்ளமையானது நாட்டின் தேசிய கைத்தொழிலாளர்கள் வங்கி கடனை பெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளதே இதற்காக காரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதியின் கீழ் இயங்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை 2012 ம் ஆண்டு 9,768, 169.00 ரூபா இலாபத்தை பெற்றதுடன் 2013 ம் ஆண்டு 1,059,761, 549.00 ரூபா இழப்பை சந்தித்துள்ளது.
இப்படியான நிலைமையில், தேசிய வங்கிகளில் நீண்டகால கடன் அடிப்படையில் கடனை பெற்று வீதி அபிவிருத்திக்கு பயன்படுத்துவது வங்கிகளுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclp5.html
Geen opmerkingen:
Een reactie posten