[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 08:33.05 AM GMT ]
ஐ.நா.மனித உரிமைகள் பேரவை வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
அந்த தகவல்களின்படி, இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் பணியகம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
இந்த விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிக்க வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் இலங்கையின் மனித உரிமைகள் வெளிநாடுகளுக்கு சென்று சாட்சியமளிப்பதில் சிக்கல்கள் உள்ளன.
குறிப்பாக நியூயோர்க், ஜெனீவா, பாங்கொக் நகரங்களுக்கு சென்று சாட்சியமளிப்பதில் சிக்கல்கள் உள்ளன.
காரணம் ஐ.நா. குழுவிடம் சாட்சியமளிப்பவர்கள் துன்புறுத்தல், அச்சுறுத்தலுக்கு ஆளாகக் கூடிய நிலைமை இலங்கையில் உள்ளது. சாட்சியமளிப்போரைப் பாதுகாக்கும் விதத்திலான சட்ட அமைப்புகள் இலங்கையில் இல்லை.
எனவே இலங்கையில் வாழும் சாட்சியாளர்கள் தொலைபேசி, “வீடியோ கொன்பெரன்ஸ்”(video conference), “ஸ்கைப்“ மூலமாக நியூயோர்க், ஜெனீவா, பாங்கொக்கில் அமையும் ஐ.நா. விசாரணைக் குழுவின் முகவர் இடங்களுக்கு தங்கள் சாட்சியங்களை அளிக்க முடியும் - என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
எந்த ஒரு சர்வதேச விசாரணையையும் இலங்கையில் நடத்த அந்நாட்டு அரசாங்கம் விரும்பவில்லை என்பதுடன் அனுமதிக்கவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclp6.html
82ல் சிங்கள தேச ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் வந்த ஜே.ஆரும்! இப்போது இங்குவரப் போகும் மகிந்தவும்!- ச.ச.முத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 09:16.20 AM GMT ]
சே யை பற்றி பிரெஞ்சுஅறிஞர் சாத்தர் கூறும்போது ' பூமியில் வந்துபோன முழுமையான மனிதர் அவர்' என்றே கூறுவார்.சீலனுக்கும் இதுவே மிகப்பொருந்தும்.
மிகமிக முழுமையான மனிதன் அவன்.அதனைவிட முழுமையான அர்ப்பணம் நிறைந்த போராளி சீலன்.
ஒரு போராளியின் வாழ்வு எதன் ஊடாக முழுமை அடைகின்றது என்றால் அவன் அடிக்கடி நன்றியுடன் நினைக்கப்படுவதனாலேயே.
வெறும் வெற்றிக் கோசங்களின் போது மட்டுமே நினைக்கப்பட வேண்டியவன் போராளி அல்ல.எப்போது ஒரு போராட்டம் தளர்வடைந்து இருக்கின்றதோ, பின்னடைந்து செல்கின்றதோ, பெரும் தோல்வியில் வீழ்ந்து கிடக்கின்றதோ அப்போது எல்லாம் ஒரு போராளியின் வாழ்வும் அவனது நுட்பமும் அந்த தோல்வியில் இருந்து வெளியேற தேவையாக இருக்கின்றதோ அதுவே அந்த போராளிக்கு உரிய மாபெரும் அங்கீகாரம் ஆகும்.
அந்த வகையில் லெப்.சாள்ஸ் அன்ரனியின்(சீலன்) நினைவுகள் இன்றைய சலிப்புநிறைந்த,தோல்வித்தளும்புகள் அழுத்தும் பின்னடைவில் இருந்து மீண்டுஎழ தேவையாக இருக்கின்றது.இது போதும் சீலனின் முழுமைக்கு-அவனது போராட்ட வாழ்வுக்கான அங்கீகாரத்துக்கு...
தேசியத்தலைவர் சில முக்கியமான வேலைகள் சம்பந்தமாக தமிழ்நாட்டிலேயே நின்றாக வேண்டி இருந்த நேரம் அது.அது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஒரு சம்பவம் காரணமாக நீதிமன்ற பிணையில் வேறு அவர் மதுரையில் இருந்த பொழுதுகளும் அவை..
அங்கிருந்தபடியே தலைவரின் ஆலோசனைகள், உத்தரவுகளின்படி அமைப்பு ஒரு பெரும் சுழியை தாண்டிய பயணத்தில் நின்றிருந்த நேரம் 80களின் ஆரம்ப வருடங்கள்.1981ன் பிற்பகுதி,,1982,.
அன்றாட கணக்குகளை பண்டிதர் கவனித்து கொண்டிருந்தார். மற்றைய அனைத்து நடவடிக்கைகளின் பொறுப்பையும் சீலனே ஏற்று நடாத்தும் ஒரு நிலை.
மிகவும் சிக்கலானதும் இக்கட்டான காலம் அவை.தமிழீழ விடுதலை இயக்கத்துடனான ((ரெலோ) கூட்டுறவு முறிந்து விட்டிருந்த நேரம். அவர்களுடனான காலத்தில் நடாத்தப்பட்ட அரச பணம் பறிப்பில் எமது பாதுகாப்பில் இவ்வளவு காலமும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை பணம் அவர்களிடம் ஒரு சதம்கூட கணக்கு பார்த்து முழுமையாக ஒப்படைத்துவிட்டு வெறும்கையுடன் வெளியேறி இருந்த காலகட்டம்.
இருபத்தி ஐந்துக்கும் குறைவான உறுப்பினர்களே இருந்த பொழுது அது.நிதி நிலமை மிக மோசம். அடுத்த நேரத்துக்கான உணவு பெரும் கேள்வியாக இருந்தது.
மறுபுறத்தில் இனவெறியன் ஜே ஆரின் தமிழின அழிப்புக்கான தயாரிப்புகளும் இனவெறி ஆட்சியும் எம்மை அழுத்தின. சிங்களத்தின் இராணுவ தளபதியாக ஜேஆரின் உறவினன் திஸ்ஸ வீரதுங்க பிரிகேடியர் நிலையில் இருந்து மேஜர் ஜெனராக உயர்த்தப்பட்டு அமர்த்தப்பட்ட காலம்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதிலேயே அவரின் கவனம் முழுதும் இருந்தது. அத்துடன் இனவெறியன் ஜேஆர் ' சாரணர்களை அனுப்பி விடுதலைப் புலிகளை ஒழிப்பேன்' என்பது போன்ற போர்ப் பிரகடனங்கள் வேறு..
எமது மக்களை பொறுத்தவரையில் இதற்கு சில காலம் முன்னர் தான் (1979 july 20th) கொண்டு வரப்பட்ட மிகவும் கொடூரமான சட்டமான பயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துகளை எண்ணி அஞ்சிக்கொண்டிருந்தார்கள்.
பதினெட்டு மாதத்துக்கு ஒரு நபரை எந்தவித வெளியுலக தொடர்பும் இன்றி தனிமை சிறையில் வைக்கவும், எவரையும் கைது செய்யவோ, சிறையில் போடவோ படைகளுக்கு அதிகாரம் வழங்கியது இந்த சட்டம். எமது மக்களுக்கு மிக்க அச்சத்தை வழங்கியது...
எம்மை பாதுகாக்கும் மக்கள்கூட மிகவும் கவனத்துடனும் கலக்கத்துடனுமே இருந்தனர். இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் இன்னும் கூர்மையாக்கப்பட வேண்டிய வரலாற்று தேவை ஒன்று எழுகிறது...
தமிழ் மக்கள் சிங்கள பேரினவாத ஆட்சியை ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளவில்லை, ஒருபோதுமே ஏற்றுக் கொள்ள போவதும் இல்லை என்ற செய்தியை ஒவ்வொரு வரலாற்று தருணத்திலும் அழுத்தமாக வெளிப்படுத்துவதே ஒரு விடுதலை அமைப்பின் முக்கிய செயற்பாடு.
இம்முறை இன்னுமொரு வரலாற்று சேதி சிங்களத்தின் முகம்கிழிய கொடுத்தே ஆகவேண்டிய நேரம் வந்தது.
சிங்கள தேசத்தின் அதிபரான ஜேஆர் முதலாவது ஜனாதிபதி தேர்தலுக்கு பிரச்சாரத்துக்காக 1982 செப்டம்பர் 29ம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பதாக ஒப்புக்கு சொல்லிவிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி அதற்கு எந்தவித நகர்வும் செய்யாமல் மறைமுகமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்த போது சீலனின் தலையில் இன்னும் பொறுப்புக் கூடியது..
தமிழ் மக்களின் சார்பில் ஒரு அழுத்தமான, ஆனால் மிகவும் காத்திரமான செய்தி இதற்கு கொடுத்தே ஆகவேண்டும்...
இதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் 'சாரணர்களை வடக்கிற்கு அனுப்பி விடுதலைப் புலிகளை ஒழிப்பேன்' என்று சங்கநாதம் முழங்கி ஜேஆர் ஓய்வதற்குள் 02.07.82 அன்று நெல்லியடியில் வைத்து சிங்கள அரச பொலீஸ் படை மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்தி ஜேஆரின் முகத்தில் பெரும் கரியை பூசி விட்டிருந்தனர்.
இந்த நிலையில் செப்டெம்பர் 29ல் ஜேஆர் முதலாவது சிங்களதேச ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் வருகிறார்.
சிங்கள தேசத்தின் அதிபர் யாழ் வரும் போது பொன்னாலை பாலத்தருகில் வைத்து அவரது கடற்படை ரோந்துக்கு பெரும் அழிவு ஒன்றை உருவாக்க சீலன், சங்கருடன் இணைந்து திட்டமிட்டான்.
சிங்கள தேசத்தின் படைகள் யாழ்குடா எங்கும் ஜேஆரின் வருகைக்காக குவிக்கப்பட்டிருந்த அந்த பொழுதில் மிகவும் துணிவான,மிகவும் நுட்பமான நகர்வு இது..
29.09.82 அன்று ஜேஆர் ஜெயவர்த்தன யாழ் வரும் நாளின் அதிகாலை 06:30 மணியளவில் பொன்னாலை பாலத்தில் வாகன வரிசையாக ரோந்து வந்த சிங்கள கடற்படை மீது நிலக்கண்ணிகள் வெடிக்க வைக்கபட்டன.
ஜெனரேற்றர் வயர்களின் இணைப்பும் வேறு தொழில் நுட்பமும் பிழைத்ததால் ரோந்து வாகனங்களின் மீது குண்டுகள் வெடிக்கவில்லை. ஆனாலும் பாலம் சேதமானது. வெடித்த சத்தம் ஆறு மைல்களுக்கு அதிர்வை ஏற்படுத்தின..ஜேஆருக்கும் தான்..
இது எமது தேசம்..இங்கு வர உனக்கு அனுமதி இல்லை என்ற செய்தி உறுதியாக சிங்களத்துக்கு சீலனின் இரவு பகல் மறந்த ஒருங்கிணைப்பால் நடந்தேறியது...இந்த சம்பவமும் அந்த இடத்திலும் அதே நாளன்று யாழ்குடாவின் அனைத்து தெருக்களிலும் எமது இயக்க துண்டுப் பிரசுரம் இந்த சம்பவத்தை உரிமை கோரி துண்டுப்பிரசுரம் கொடுத்ததும் சிங்கள பேரினவாத தலைவருக்கு பெரும் மூக்குடைவையும் தோல்வியையும் கொடுத்தது.
தமிழினத்தின் விடுதலை வேட்கை ஒருபோதும் அழிக்கப்பட முடியாது என்ற சேதியை சிங்கள அதிகார மையம் உணர்ந்து கிலியில் வீழ்ந்தது..
இப்'போது இது சிறு சம்பவம் போன்று தோன்றினாலும் அந்த நேரத்தின் அரசியல், ஆயுத நடவடிக்கையின் பெரும் நகர்வு இது..
அந்த துண்டுப்பிரசுரத்தில் 'இன்றைய இத்தாக்குதல் பரந்துபட்ட தமிழ் மக்களின் ஆதரவுடன் கூடிய எமது இயக்கத்தின் புரட்சிகர நடவடிக்கைகளின் தொடர்ச்சியே ஆகும்.
தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான சரியான பாதை எதுவென்பதை நடைமுறை அனுபவங்களில் இருந்து கற்று போராட்டத்தை வழிநடாத்தும் எமது இயக்கத்தின் பின்னே வீரமும் தீரமும் மிக்க போராளிகள்
ஆயிரமாயிரமாக அணிதிரள்வார்கள்..' என்று இருந்தது.. எந்தவாரு நிதிவளமும், பலமும் அற்ற ஒரு காலத்தில் தங்குவதற்கான இடங்களும், அடுத்த நேர உணவும் கூட கடினமான ஒரு காலகட்டத்தில் சீலன் முன்னின்று செய்த இந்த சம்பவம் இன்று இன்னொரு அறைகூவலை எமக்கு ஏறத்தாழ 31ஆண்டுகள் கழித்து விடுக்கின்றது..
பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை தொடக்கி வைக்க சிங்கள தேச அதிபர் இனப்படுகொலையாளி மகிந்த வருகிறான். அவனுக்கும் இந்த நாட்டு சட்டங்களுக்கு அமைவான விதத்தில் ஆனால் மிகமிக உறுதியாக சேதி சொல்லப்படல் வேண்டும்.
சிங்கள பேரினவாதத்தின் முழு உருவாக இனப்படுகொலையின் முழுச் சூத்திரதாரியான உன்னை ஒருபோதும் நாம் ஏற்க போவதில்லை...நீ மனித விழுமியங்களின் எதிரி...மானுடத்தின் பொது எதிரி..
தமிழீழ தேசத்தின் எதிரி...திரும்பி போ என்ற சேதியை சொல்ல அனைவரும் ஒன்று திரள்வதே இன்றைய கடமை...
தமிழீழ தேசத்தின் எதிரி...திரும்பி போ என்ற சேதியை சொல்ல அனைவரும் ஒன்று திரள்வதே இன்றைய கடமை...
http://www.tamilwin.com/show-RUmsyHRULclp7.html
Geen opmerkingen:
Een reactie posten