தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 20 juli 2014

அமெரிக்கத் தூதுவரின் இடமாற்றம் இலங்கைக்கு நிம்மதியைத் தருமா?

அமெரிக்காவுடன் இராஜதந்திர உறவை புதுப்பித்துக் கொள்ள இலங்கை முயற்சி!
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 06:22.17 AM GMT ]
அமெரிக்காவுடன் இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள இலங்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எனினும் அது சாத்தியப்படாத நிலையே காணப்படுவதாக இராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே சிசனுக்கு எதிராக இலங்கை அரசாங்க தலைமைத்துவத்தின் அனுசரணையுடன் தனிப்பட்ட குரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வாசிங்டன் தரப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
அமெரிக்காவுடன் கடும் எதிர்ப்பாக நடந்து கொள்ளும் நாடுகளில் கூட இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்று வாசிங்டன் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தநிலையில் அதிக செலவில் அமெரிக்காவுடனான உறவை புதுப்பித்துக் கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன கடந்த வாரத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தான் வம்சாவளியான அமெரிக்க பிரஜையான இமாட் ஸிப்ரியை கொண்டு இராஜதந்திர உறவை கட்டியெழுப்பவும் இலங்கை முயற்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இமாட் ஸிப்ரி என்பவர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் சிறந்த நட்பை கொண்டவர் என்ற அடிப்படையிலேயே, அவரின் உதவியை இலங்கை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.
ஒபாமாவுக்கான தொழில்நுட்ப அமைப்பின் இணைத்தலைவராக ஸிப்ரி செயற்படுகிறார். அத்துடன் தேசிய நிதிக்குழுவிலும் ஸிப்ரி பிரதித்தலைவராக செயற்படுகிறார்.
இந்தநிலையில் பாகிஸ்தானின் முதலீட்டு சபையில் முன்னர் தலைவராக இருந்த சலீம் எச் மன்ட்விவாலா என்பவரே ஸிப்ரியை இலங்கையின் அரசாங்க கட்சி தலைவர்களுக்கு அறிமுகப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைடுத்து ஸிப்ரியும் மற்றும் ஒரு அமெரிக்க வர்த்தகரும் இலங்கைக்கு அடிக்கடி சென்று திரும்பியதாகவும் சுற்றுலாத்துறையில் சுமார் 200 மில்லியன் டொலர்களை முதலீடு செய்வதற்கு குறித்த வர்த்தகர் ஆராய்வுகளை மேற்கொண்டதாகவும் இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
எனினும் முதலீடுகளின் போது ஏற்படும் ஆரம்பச் செலவுகள் எதனையும் தாம் இலவசமாக மேற்கொள்ளப் போவதில்லை என்றும் அமெரிக்க வர்த்தகர் கூறியிருப்பதாக செய்தித்தாள் கூறியுள்ளது.
இதன் அடிப்படையிலேயே தற்போது அதிக செலவில் அமெரிக்காவுடன் இராஜதந்திர உறவை புதுப்பித்துக் கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclp1.html
அமெரிக்கத் தூதுவரின் இடமாற்றம் இலங்கைக்கு நிம்மதியைத் தருமா?
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 06:59.41 AM GMT ]
இலங்கை அர­சாங்­கத்­துக்கும், கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிச­னுக்கும் இடை­யி­லான முறுகல் தீவி­ர­ம­டைந்­துள்ள ஒரு கட்­டத்தில், அவரை ஐ.நாவுக்­கான பிரதித் தூது­வ­ராக நிய­மிக்க அமெ­ரிக்க ஜனாதிபதி ஒபாமா முடிவு செய்­தி­ருக்­கிறார்.
ஐ.நா.வுக்­கான பிரதித் தூது­வ­ரா­கவும், ஐ.நா. பாது­காப்புச் சபைக்­கான பிரதி பிர­தி­நி­தி­யா­கவும், இவ­ரது பெயரை கடந்த 8ம் திகதி முன்­மொ­ழிந்­துள்ளார் அமெ­ரிக்க ஜனாதிபதி ஒபாமா.
மிச்சேல் ஜே சிசனை இலங்­கையில் இருந்து வெளி­யேற்ற அர­சாங்கம் உத்­த­ர­விடக்கூடும் என்ற ஊகங்கள், சில ஊட­கங்­களில் வெளி­யான நிலையில் தான், அவ­ரது பெயரை ஒபாமா முன்­மொ­ழிந்­தி­ருக்­கிறார்.
அதற்­காக, அத்­த­கைய வெளி­யேற்ற உத்­த­ரவு ஒன்றை அமெ­ரிக்கா எதிர்­பார்த்­த­தாக கருத முடி­யாது.
இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்னர், 2012 ம் ஆண்டு ஜுன் 29ம் திகதி தான், மிச்சேல் ஜே சிசனின் நிய­ம­னத்தை, அமெ­ரிக்க செனட் ஏற்றுக் கொண்­டி­ருந்­தது.
மீண்டும், அவர் ஐ.நா.வுக்­கான பிரதித் தூதுவர் பத­விக்­காக, அவ­ரது பெயரை அமெ­ரிக்க செனட் உறு­திப்­ப­டுத்த வேண்­டிய நிலையுள்­ளது.
அது­வ­ரையில், அவர் இலங்­கையில் தான் பணி­யாற்­றுவார்.
எதற்­காக, சிசன், ஐ.நா.வுக்­கான தூது­வ­ராக நிய­மிக்­கப்­ப­டு­கிறார்,  இதில் இலங்­கைக்கு எதி­ராக ஏதேனும் வலை பின்­னப்­ப­டு­கி­றதா என்­றெல்லாம் இப்­போது பலரும் ஆராயத் தொடங்­கி­யுள்­ளனர்.
இலங்­கைக்கு எதி­ராக, சர்­வ­தேச வலைப்­பின்னல் ஒன்று பின்­னப்­ப­டு­வ­தாக, எச்­ச­ரித்­துள்ள, கலா­நிதி தயான் ஜெய­தி­லக, தனது கட்­டு­ரை­யொன்றில், மிச்சேல் ஜே சிசன் ஐ.நா. பத­விக்கு நிய­மிக்­கப்­ப­டு­வதை தனித்த ஒரு விவ­கா­ர­மாக தான் பார்க்­க­வில்லை என்று குறிப்­பிட்­டுள்ளார்.
ஐ.நா.வுக்­கான அமெ­ரிக்­காவின் தூது­வ­ராக உள்ள, சமந்தா பவ­ருக்கு அடுத்த நிலையில், பிரதித் தூது­வ­ராக, றோஸ் மேரி ஏ டிக்­காலா, 2010ம் ஆண்டு தொடக்கம் பதவி வகித்து வரு­கிறார்.
அவ­ரது இடத்­துக்குத் தான்,  தூதுவர் என்ற நிலை­யுடன் கூடிய, ஐ.நா. மற்றும் ஐ.நா. பாது­காப்புச் சபைக்­கான பிரதி பிர­தி­நி­தி­யாக மிச்சேல் ஜே சிசன் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார்.
அமெ­ரிக்­காவின் ஐ.நா.வுக்­கான தூது­வ­ராக உள்ள சமந்தா பவர், முன்னர், தேசிய பாது­காப்புச் சபையின் உறுப்­பி­ன­ராக இருந்­தவர்.
ஒபா­மா­வுக்கு நெருக்­க­மான அவரும், இலங்­கைக்கு எதி­ராக ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில், தீர்­மானம் கொண்டு வரப்­ப­டு­வதில் முக்­கிய பங்கு வகித்­தி­ருந்தார்.
இப்­போது அவ­ருக்கு அடுத்த நிலையில், நியூ­யோர்க்கில் உள்ள ஐ.நா.வுக்­கான பிரதி பிர­தி­நி­தி­யாக மிச்சேல் ஜே சிசன் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார்.
இது இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில், சிந்­திக்க வேண்­டி­ய­தொரு விடயம் தான்.
அமெ­ரிக்கத் தூது­வ­ராகப் பொறுப்­பேற்ற காலத்தில் இருந்தே, இலங்கை அர­சாங்­கத்­துடன், நெருக்­க­மான உறவை மிச்சேல் ஜே சிசன் பேணி வர­வில்லை.
அதற்குக் காரணம், இவர், கொழும்பில் பத­வியைப் பொறுப்­பேற்க முன்­னரே, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ரான முத­லா­வது தீர்­மா­னத்தை அமெ­ரிக்கா நிறை­வேற்­றி­யி­ருந்­தது.
இந்த தீர்­மா­னங்­க­ளுக்குப் பின்னர், அமெ­ரிக்க - இலங்கை உற­வுகள் படிப்­ப­டி­யாக சீர்­கு­லைந்து வந்­ததே தவிர, ஒரு­போதும் மேம்­ப­ட­வில்லை.
அதே­வேளை, கொழும்பில், தனது பணியை பொறுப்­பேற்ற பின்னர், ஜன­நா­யகம், மனித உரி­மைகள், சட்­டத்தின் ஆட்சி உள்­ளிட்ட விவ­கா­ரங்­களில், மிச்சேல் ஜே சிசன் இலங்கை அர­சாங்­கத்தை கடு­மை­யாக விமர்­சித்து வந்தார்.
அத்­துடன், இலங்­கையின் எல்லாப் பாகங்­க­ளிலும், சிவில் சமூ­கத்­து­ட­னான உறவை அவர் வலுப்­ப­டுத்திக் கொண்­டி­ருந்தார்.
இதனால், இவர் இலங்கை அர­சாங்­கத்­தினால் வேண்­டப்­ப­டாத ஒரு தூது­வ­ரா­கவே கணிக்­கப்­பட்டார்.
அத்­த­கை­ய­தொ­ருவர், ஐ.நா.வுக்­கான பிரதி பிர­தி­நி­தி­யாக நிய­மிக்­கப்­ப­டு­வதை அர­சாங்கம் முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் தான் நோக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.
ஏனென்றால், ஏற்­க­னவே ஐ.நா.வுக்­கான தூதுவ­ராகப் பணி­யாற்றும் சமந்தா பவ­ருடன், சிசனும் இணையும் போது, அது இலங்­கைக்கு எதி­ரான கூடுதல் அழுத்­தங்­களைக் கொடுக்கும்.
இலங்கை விவ­கா­ரத்தில், சிசன், நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்ட ஒரு­வ­ராக நிலை­மை­களை இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேலாக நேரில் அவ­தா­னித்த ஒரு­வ­ராக இருப்­பதால், ஐ.நா.வில் இலங்­கைக்கு எதி­ரான நகர்­வு­களை அவர் தீவி­ர­மாக முன்­னெ­டுப்­ப­தற்கு வாய்ப்­புகள் அதிகம்.
உதா­ர­ணத்­துக்கு, றொபேர்ட் ஓ பிளேக்கை எடுத்துக் கொள்­ளலாம்.
இலங்­கையில் தூது­வ­ராக பணி­யாற்­றிய அவர், போர் முடி­வுக்கு வந்த கையோடு தெற்கு மத்­திய ஆசி­யா­வுக்­கான உதவி இரா­ஜாங்கச் செய­ல­ராக நிய­மிக்­கப்­பட்டார்.
அவர் அந்தப் பத­வியில் இருந்த காலத்தில் தான், இலங்­கைக்கு எதி­ரான நகர்­வு­க­ளுக்கு அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் பிள்­ளையார் சுழி போட்­டது.
அவர் கொழும்பில் பணி­யாற்­றிய போது பெற்ற அனு­ப­வங்கள், கணித்து வைத்­தி­ருந்த நிலை­மைகள் எல்­லா­வற்­றையும், இலங்­கைக்கு எதி­ரான அமெ­ரிக்க நகர்­வுக்­காகத் திருப்பி விட்­டி­ருந்தார்.
அவர் இப்­போது அந்தப் பத­வியில் இல்­லா­விட்­டாலும், அவ­ரது அந்த நகர்வு தான், இலங்கை அர­சாங்­கத்தைத் தொடர்ந்து துரத்தி வரு­கி­றது.
அது­போ­லவே, இலங்கை அர­சாங்­கத்தை நன்கு அறிந்­த­வ­ரான, அதன் நெளிவு சுளிவு­களை நன்­றா­கவே மதிப்­பிட்­ட­வ­ரான, மிச்சேல் சிசன், ஐ.நா. பத­வியைப் பொறுப்­பேற்கும் போதும், இலங்­கைக்கு நெருக்­க­டிகள் அதி­க­ரிக்கும்.
அதுவும், அடுத்து வரும் ஆண்டில், இலங்கை விவ­காரம், ஐ.நா. பாது­காப்புச் சபைக்கு முன்­மொ­ழி­யப்­படக் கூடிய சாத்­தி­யங்­களும் உள்­ளன.
ஏனென்றால், தற்­போது, ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும், இலங்­கையில் போரின் போது நடந்த மீறல்கள் குறித்த விசா­ர­ணையின் அறிக்கை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­படும்.
ஜெனீவா அந்த அறிக்­கையை வைத்து எதையும் செய்ய முடி­யாது.
அதற்­கான அதி­கா­ரங்கள் ஏதும், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்கு கிடை­யாது.
இது தான், இலங்கை அர­சாங்­கத்­துக்கு துணிச்­சலைக் கொடுத்­துள்ள விடயம்.
எப்­ப­டி­யா­வது, மேல் நட­வ­டிக்­கைக்­காக அந்த அறிக்கை, ஐ.நா. பாது­காப்புச் சபைக்குத் தான் அனுப்பி வைக்­கப்­படும்.
ஆனால், ஐ.நா. பாது­காப்புச் சபையில், இலங்­கைக்கு ஆத­ர­வான சீனாவும், ரஷ்­யாவும், அந்த அறிக்­கையை வீட்டோ அதி­கா­ரத்தைக் கொண்டு, தூக்கிக் குப்­பையில் போட்டு விட முடியும்.
ஐ.நா. பாது­காப்­புச்­ச­பையில், இலங்­கையைப் பாது­காக்க எல்லா நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படும் என்று அண்­மையில் கூட சீனா உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.
இலங்கை குறித்து விசா­ரணை அறிக்கை மீது மேல் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு பாது­காப்புச் சபை, தடை­யாக இருந்­தாலும், அங்கு பத­வி­யேற்கப் போகும், மிச்சேல் சிசன் சும்­மா­யி­ருப்பார் என்று எதிர்­பார்க்க முடி­யாது.
பாது­காப்­புச்­சபை அந்த அறிக்­கையை குப்பைக் கூடையில் வீசி­னாலும், அதனை வைத்து, இலங்­கைக்கு எதி­ராக புதிய வழியில் திருப்பி விடு­வ­தற்கு சமந்தா பவ­ருடன் இணைந்து, மிச்சேல் சிசன் முயற்­சிக்க வாய்ப்­புகள் உள்­ளன.
அதா­வது அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றியம் ஆகி­ய­வற்றின் மூலம், தடை­களை விதிப்­ப­தற்­கான முன் முயற்­சிகள் எடுக்­கப்­ப­டலாம்.
எனவே தான், சிசனின் இந்த இட­மாற்­றத்தை இலங்கை உன்­னிப்­பா­கவும், எச்­சரிக்­கை­யோடும் அவ­தா­னிக்கத் தொடங்­கி­யுள்­ளது.
ஏற்­க­னவே அவர், இலங்­கையில் ஆட்­சி­மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும், அர­சாங்­கத்­தினால் குற்­றம்­ சாட்­டப்­பட்டு வரு­கிறார்.
இத்­த­கைய பின்­ன­ணியில், அவர் ஐ.நா.வின் பிரதிப் பிர­தி­நி­தி­யாகப் பொறுப்­பேற்­பது மிகவும் ஆபத்­தா­னது என்றே அர­சாங்கம் உணர்­கி­றது.
ஆனாலும், இப்­போ­தைக்கு அர­சாங்­கத்­துக்கு ஆறுதல் அளிக்கக் கூடி­ய­தொரு விட­யமும் உள்­ளது.
அது என்­ன­வென்றால், அமெ­ரிக்க செனட், இவ­ரது நிய­ம­னத்தை, உட­ன­டி­யாக அங்­கீ­க­ரிக்­குமா? என்­பதே அது­வாகும்.
அமெ­ரிக்க செனட்டில் ஒபா­மாவின் ஜன­நா­யக கட்­சிக்கு பெரும்­பான்மை பலம் இல்லை.
இதனால், அவ­ரது நிய­ம­னங்­களை குறிப்­பாக, வெளி­நா­டு­க­ளுக்­கான தூதுவர் நிய­ம­னங்­களை அங்­கீ­க­ரிக்க செனட் இழுத்­த­டித்து வரு­கி­றது.
கடந்த ஜூலை 11ம் திகதி வரை, ஜனாதிபதி ஒபா­மா­வினால், முன்­மொ­ழி­யப்­பட்ட 58 தூது­வர்­களின் நிய­ம­னங்­களை செனட் உறு­திப்­ப­டுத்­தாமல் உள்­ளது.
இதனால், உலகின் 40 நாடு­களில் நிரந்­தரத் தூது­வர்கள் இல்­லாத நிலையில் அமெ­ரிக்கா உள்­ளது.
இவற்றில், பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான், லிபியா, உள்­ளிட்ட முக்­கி­ய­மான நாடு­களும் அடங்கும்
புதிய பத­வி­களைப் பொறுப்­பேற்க முடி­யாமல், பல தூது­வர்கள் உள்­ளனர்.
இதனால், அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம், மிகப்­ பெ­ரிய நெருக்­க­டியில் சிக்­கி­யுள்­ளது.
அமெ­ரிக்­காவின் வர்த்­தகம், பொரு­ளா­தாரம், இரா­ஜ­தந்­திர மற்றும் இரா­ணுவ நலன்கள் கூட இந்த தாமத்­தினால் பாதிப்பை எதிர்­கொண்­டுள்­ளன.
அண்­மையில் அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் ஜோன் கெரி, இந்த நிய­ம­னங்­களை, உட­ன­டி­யாக உறுதி செய்­யு­மாறு, செனட் உறுப்­பி­னர்­க­ளிடம் கோரி­யி­ருந்தார்.
ஆனாலும், செனட் வெளி­வி­வ­காரக் குழு­வினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட 34 தூது­வர்­களின் நிய­ம­னங்­களைக் கூட சாதா­ர­ண­மான ஒரு வாக்­கெ­டுப்பின் மூலம், அங்­கீ­க­ரிக்க செனட் நட­வ­டிக்கை எடுக்­காமல் இருந்து வரு­கி­றது.
இத்­த­கைய பின்­ன­ணியில், சிசனின் நிய­ம­னமும், அமெ­ரிக்க செனட்டில் இழு­ப­றிப்­படும் நிலை ஏற்­ப­டலாம்.
அதை­யிட்டு இலங்கை அர­சாங்கம், வருத்­தப்­ப­டுமா அல்­லது மகிழ்ச்சி கொள்­ளுமா? என்று கூற முடி­யாது .
ஏனென்றால், சிசன் இங்கே இருந்தாலும் சிக்கல், அங்கு சென்றாலும் சிக்கல்.
அதேவேளை,அமெரிக்காவுடன் உறவுகளைப் புதுப்பிக்கும் முயற்சியிலும் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
வெளிவிவகார அமைச்சைக் கவனிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார்.
அவர் அங்கு, மனித உரிமை விவகாரங்களை முக்கியத்துவப்படுத்தாமல், இலங்கையுடனான உறவுகளை அமெரிக்கா பலப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மனித உரிமைகளை முக்கியத்துவப்படுத்துவதால் தான், சீனாவின் கை ஓங்கியும், அமெரிக்காவின் கை இறங்கியும் வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்பும், இலங்கை அரசாங்கம் அதற்கு நிபந்தனை விதிக்க முனைவது வேடிக்கையானது.
இலங்கையுடன் அத்தகைய நிபந்தனைக்கு இணங்கி உறவுகளைப் பலப்படுத்துவதற்கு அமெரிக்கா, ஒன்றும் பலவீனமான நிலையில் இல்லை.
ஹரிகரன்
http://www.tamilwin.com/show-RUmsyHRULclp3.html

Geen opmerkingen:

Een reactie posten