[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 12:28.08 AM GMT ]
இவர் கிராமசேசகர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரின் தேடுதலுக்குள்ளாகியுள்ளார்.
இந்தநிலையில் பொலிஸ் குழு ஒன்று அவரது வீட்டுக்கு சென்ற போதே அவர் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டமை தெரியவந்தது.
எனினும் அவர் எங்கிருக்கிறார் என்ற விடயம் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த சனிக்கிழமை இவர் கிராமசேவகர் ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமசேவகர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
2ம் இணைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் நில்வலா 1500 ரூபா பிணையில் விடுதலை
குருநாகல் - அம்பகொட 617 பிரிவு கிராம சேவகர் ஆனந்த விமலசிறி மீது தாக்குதல் நடத்திய ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிமல் விஜேசிங்க என்றழைக்கப்படும் நில்வள விஜேசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை குருநாகல் நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததன் பின்னர் பிணையில் விடுதலையாகியுள்ளார்.
இதன்படி 1500 ரூபா ரொக்கப் பணம் மற்றும் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் இவர் விடுதலையாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் நிமல் விஜேசிங்கவை பொலிஸார் கைது செய்யச் சென்ற வேளையில் அவர் தான் வசிக்கும் வீடு மற்றும் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நேற்று தெரிவித்திருந்தார்.
ஆனந்த விமலசிறி என்ற கிராம சேவகர் கடந்த 19ம் திகதி தாக்குதலுக்கு இலக்காகினார்.
குறித்த கிராம சேவகரது பிரிவிலுள்ள பலா மரத்தை சட்டவிரோதமான முறையில் வெட்டிச் செல்வதாக தகவலறிந்த கிராம சேவகர் அவ்விடத்துக்குச் சென்றுள்ளார்.
இதன்போது அங்கிருந்தவர்கள் தாம் பாராளுமன்ற உறுப்பினர் நில்வலா விஜேசிங்கவின் ஆதரவாளர்கள் என தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, கிராம சேவகரை கதைக்குமாறு குறிப்பிட்டுள்ளனர். எனினும் கிராம சேவகர் அதனை மறுத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் கிராம சேவகரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கியும் உள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLclx1.html
யாழ். காரைநகர்ப் பகுதியினைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 7 கடற்படை வீரர்களும் பாதுகாப்பாக காலி கடற்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இந்தநிலையில் பொலிஸ் குழு ஒன்று அவரது வீட்டுக்கு சென்ற போதே அவர் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டமை தெரியவந்தது.
எனினும் அவர் எங்கிருக்கிறார் என்ற விடயம் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த சனிக்கிழமை இவர் கிராமசேவகர் ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமசேவகர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
2ம் இணைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் நில்வலா 1500 ரூபா பிணையில் விடுதலை
குருநாகல் - அம்பகொட 617 பிரிவு கிராம சேவகர் ஆனந்த விமலசிறி மீது தாக்குதல் நடத்திய ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிமல் விஜேசிங்க என்றழைக்கப்படும் நில்வள விஜேசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை குருநாகல் நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததன் பின்னர் பிணையில் விடுதலையாகியுள்ளார்.
இதன்படி 1500 ரூபா ரொக்கப் பணம் மற்றும் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் இவர் விடுதலையாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் நிமல் விஜேசிங்கவை பொலிஸார் கைது செய்யச் சென்ற வேளையில் அவர் தான் வசிக்கும் வீடு மற்றும் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நேற்று தெரிவித்திருந்தார்.
ஆனந்த விமலசிறி என்ற கிராம சேவகர் கடந்த 19ம் திகதி தாக்குதலுக்கு இலக்காகினார்.
குறித்த கிராம சேவகரது பிரிவிலுள்ள பலா மரத்தை சட்டவிரோதமான முறையில் வெட்டிச் செல்வதாக தகவலறிந்த கிராம சேவகர் அவ்விடத்துக்குச் சென்றுள்ளார்.
இதன்போது அங்கிருந்தவர்கள் தாம் பாராளுமன்ற உறுப்பினர் நில்வலா விஜேசிங்கவின் ஆதரவாளர்கள் என தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, கிராம சேவகரை கதைக்குமாறு குறிப்பிட்டுள்ளனர். எனினும் கிராம சேவகர் அதனை மறுத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் கிராம சேவகரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கியும் உள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLclx1.html
காரைநகர் குற்றவாளிகளான 7 கடற்படை சிப்பாய்களும் காலி கடற்படை முகாமுக்கு மாற்றம்!
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 12:51.05 AM GMT ]
பிணையில் விடுவிப்பதற்கான அனுமதி கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் வழங்கப்பட்டிருந்த நிலையில், சனி ஞாயிறு விடுமுறை தினமாகையால் கடற்படை வீரர்களின் உறவினர்கள், தங்கள் பகுதி கிராம அலுவலரின் கடிதங்கள் பெற்று நேற்று மன்றில் சமர்ப்பித்து அவர்களை பிணையில் எடுத்துள்ளனர்.
மேற்படி வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஏலாரைக் கடற்படை முகாமிலிருந்த கடற்படைச் சிப்பாய்கள் அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.
எனினும், இதன்போது சிறுமி எவரையும் அடையாளம் காட்டவில்லை. இதனால், அன்றைய தினம் 7 கடற்படைச் சிப்பாய்களையும் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
பாடசாலை செல்லும் இச்சிறுமியினை ஏலாரை கடற்படை முகாமிற்குள் அழைத்துச் சென்று 11 நாட்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் கடந்த செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
எனினும் இவ்விடயத்தினில் பாதுகாப்பு செயலாளரது ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி மட்டத்தில் தலையீடுகள் செய்யப்பட்டு விடுவிப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த சிப்பாய்கள் ஏழு பேரும் பாதுகாப்பாக காலியில் உள்ள கடற்படை தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLclx2.htmlமேற்படி வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஏலாரைக் கடற்படை முகாமிலிருந்த கடற்படைச் சிப்பாய்கள் அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.
எனினும், இதன்போது சிறுமி எவரையும் அடையாளம் காட்டவில்லை. இதனால், அன்றைய தினம் 7 கடற்படைச் சிப்பாய்களையும் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
பாடசாலை செல்லும் இச்சிறுமியினை ஏலாரை கடற்படை முகாமிற்குள் அழைத்துச் சென்று 11 நாட்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் கடந்த செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
எனினும் இவ்விடயத்தினில் பாதுகாப்பு செயலாளரது ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி மட்டத்தில் தலையீடுகள் செய்யப்பட்டு விடுவிப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த சிப்பாய்கள் ஏழு பேரும் பாதுகாப்பாக காலியில் உள்ள கடற்படை தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களில் மாற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 01:16.19 AM GMT ]
இலங்கைக்கு மிகவும் முக்கியமான ஐரோப்பிய நாடுகளின் தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர் பதவிகளில் சில மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன்படி, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ரொட்னி பெரேரா, பெல்ஜியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் அசேல வீரக்கோன் கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார்.
இந்த இரண்டு நியமனங்களுக்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLclx3.html
தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஐக்கிய தேசியக் கட்சி விசேட குழு ஒன்றை நியமிக்க உள்ளது.
இதன்படி, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ரொட்னி பெரேரா, பெல்ஜியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் அசேல வீரக்கோன் கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார்.
இந்த இரண்டு நியமனங்களுக்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLclx3.html
தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகளை கண்காணிக்க விசேட குழு நியமனம்? - சீனி இறக்குமதிக்கான வரி அதிகரிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 01:24.58 AM GMT ]
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஆளும் கட்சிக்கு சார்பாக செயற்பட்டு வருகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உள்ளிட்டவர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தலைமைத்துவ பேரவைக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இந்த கண்காணிப்பு குழு நியமிக்கப்பட உள்ளது.
ஊவா மாகாணசபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் போன்றன தொடர்பில் தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட உள்ளது.
சீனி இறக்குமதிக்கான வரி அதிகரிப்பு: சீனியின் விலையும் அதிகரிக்கும்
இலங்கையில் சீனியின் விலையில் அதிகரிப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.
நேற்றிரவு நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு கிலோ சீனியின் இறக்குமதி மீதான வரி மூன்று ரூபாவால் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இதுவரை 25 ரூபாவாக இருந்த வரி 28 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே இதன் அடிப்படையில் சீனியின் விலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையில் சீனி 100 ரூபா முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLclx4.html
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது உண்மையென்றால் வடக்கில் ஏன் அவ்வளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உள்ளிட்டவர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தலைமைத்துவ பேரவைக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இந்த கண்காணிப்பு குழு நியமிக்கப்பட உள்ளது.
ஊவா மாகாணசபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் போன்றன தொடர்பில் தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட உள்ளது.
சீனி இறக்குமதிக்கான வரி அதிகரிப்பு: சீனியின் விலையும் அதிகரிக்கும்
இலங்கையில் சீனியின் விலையில் அதிகரிப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.
நேற்றிரவு நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு கிலோ சீனியின் இறக்குமதி மீதான வரி மூன்று ரூபாவால் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இதுவரை 25 ரூபாவாக இருந்த வரி 28 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே இதன் அடிப்படையில் சீனியின் விலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையில் சீனி 100 ரூபா முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLclx4.html
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டால், வடக்கில் ஏன் இராணுவம் குவிக்கப்படுகிறது?: சரவணபவன் எம்.பி கேள்வி
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 01:41.16 AM GMT ]
வடக்கில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
வடக்கில் பாரியளவில் அமைதி நிலவினால் ஏன் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவே இவ்வாறு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அநீதிக்கு எதிராக 1956ம் ஆண்டுக்கு முன்னதாகவே தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்தனர்.
காலத்திற்கு காலம் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ வேண்டுமா என்ற கேள்வியை சிங்கள மக்கள் மனங்களில் ஏற்படுத்தியுள்ளனர்.
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஏன் வடக்கில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புச் செயலாளரிடம் கேட்கின்றோம்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கூறும் அரசாங்கம் அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என சரவணபவன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற போராட்டமொன்றின் போது, அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLclx5.html

Geen opmerkingen:
Een reactie posten