தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 juli 2014

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!


மத வழிபாட்டு சுதந்திரத்தில் எவரும் தலையீடு செய்ய முடியாது!– பிரதம நீதியரசர்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 11:56.48 PM GMT ]
மத வழிபாட்டு சுதந்திரத்தில் தலையீடு செய்ய முடியாது என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தாம் விரும்பிய மதத்தை வழிபாடு செய்வதற்கும் மத கலாச்சாரத்தை பின்பற்றுவதற்கும் நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அனைவருக்கும் உரிமை காணப்படுகின்றது.
இந்த உரிமையில் நீதிமன்றங்களுக்கோ அல்லது பிரதம நீதியரசருக்கோ தலையீடு செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
முன்னேஸ்வரம் காளி கோயில் மிருக பலி பூஜை தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மிருக பலி பூஜைகளை தடை செய்ய வேண்டுமென தேசிய சங்க சம்மேளனம் மற்றும் மிருக வதையை தடுக்கும் அமைப்பு ஆகியன நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தன.
மிருகங்களை பலியிடுவதற்கு அனுமதியளிக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓர் நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட ரீதியான அனுமதி இல்லாவிட்டாலும், அந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் கருதினால் அதற்கான உத்தரவினை பிறப்பிக்கும் அதிகாரம் காணப்படுகின்றது என பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.
மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 30ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 12:10.33 AM GMT ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
ராஜீவ் படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, கடந்த 9ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, 7 பேரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, குற்றவாளிகளை விடுவிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு கிடையாது என்று கூறி, புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இதற்கு அனைத்து மாநில அரசுகளும் பதில் தர உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்திருந்தது.
தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல்
http://www.tamilwin.com/show-RUmsyHRWLclx0.html

Geen opmerkingen:

Een reactie posten