தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 juli 2014

மொரிசனின் கடும்போக்கு கொள்கையில் மாற்றம்! இலங்கை அகதிகளுக்கு விசா வழங்கப்படுமா?

இலங்கையில் ஜனாதிபதி முறையை ஒழித்துக்கட்ட வேண்டும்! அமைச்சர் டியூ குணசேகர - அரசாங்கம் பீதியடைந்துள்ளது!– சிறிதுங்க ஜயசூரிய
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 01:46.22 AM GMT ]
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் அமைச்சர் டியூ குணசேகர காரசாரமான முறையில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் மிகுந்த அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்ற குரல் அண்மைக்காலமாக ஆளுங்கட்சி மற்றும் எதிரணி பிரமுகர்களிடமிருந்து ஒலித்து வருகின்றது.
இடதுசாரித் தலைவர் டாக்டர் என்.எம். பெரேரா மரணப் படுக்கையில் இருந்துகொண்டு அன்று வெளிப்படுத்திய விமர்சனக் கருத்துக்கள் எல்லாம் இன்று உண்மையில் நிரூபணமாகியுள்ளன' என்றார் டியூ குணசேகர.
அரசாங்கத்தின் நிறைவேற்றுத்துறைக்கும் நீதித்துறைக்கும் இடையே மோதல் ஏற்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரம் தாழ்ந்துபோவார்கள். அமைச்சர்கள் தரம் தாழ்ந்துபோவார்கள். அரசியல் கலாசாரம் மாறிப்போகும். இவை எல்லாவற்றையும் அவர் அன்றே எதிர்வு கூறியிருந்தார்' என்றார் அமைச்சர் குணசேகர.
இலங்கையில் தற்போது ஜனாதிபதி ஆட்சி முறையை வைத்திருக்க வேண்டும் என்று எந்தவொரு அரசியல்கட்சியும் கோரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையை கொண்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியும் இன்று எங்கள் நிலைப்பாட்டில் தான் இருக்கின்றது... இந்த ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் 3 இல் 2 அல்ல 6 இல் 5 பலத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியும். அரசியலமைப்பில் ஒரு சிறிய திருத்தம் போதும் இதனை மாற்றுவதற்கு' என்றும் கூறினார் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் குணசேகர.
ஆட்சி அதிகாரம் தனியொரு மனிதரின் கையில் இருக்கக்கூடாது.. நாடாளுமன்றத்திடமே இருக்க வேண்டும்' என்றும் மூத்த அமைச்சர் டியூ குணசேகர சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் பீதியடைந்துள்ளது – சிறிதுங்க ஜயசூரிய
அரசாங்கம் பீதியடைந்துள்ளதாக ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனக்கு சாதகமான முறையில் தேர்தல் ஆடுகளத்தை உருவாக்கி தேர்தல் நடாத்துகின்றது. இந்த போட்டியில் சுதந்திரக் கட்சியினதோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியினதோ ஆதரவாளராக கடமையாற்றும் உத்தேசமி;ல்லை.
தேர்தல் நடாத்துவதற்காக ஜாதகத்தையும், நல்ல நேரத்தையும் மட்டுமன்றி அரசாங்கத்தின் நாடித் துடிப்பையும் சோதனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
சில நாடுகள் கிரிக்கட் விளையாட்டில் வெற்றியீட்ட ஆடுகளத்தை தங்களுக்கு சாதகமான முறையில் அமைத்துக் கொள்ளும். அரசாங்கமும் இவ்வாறு தனது தேவையான வகையில் தேர்தல் களத்தை அமைத்துக் கொள்கின்றது.
நாம் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் எவ்வாறான சூழ்நிலையிலும் தேர்தல் விளையாட்டில் ஈடுபடத் தயார்.
அரசாங்கத்தினால் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிவிட முடியாது. அராங்கத்தை தோற்கடிக்கும் நடவடிக்கை ஊவா மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
தேர்தலில் வெற்றியீட்ட முடியுமா என்ற அச்சம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபடும் சக்திகளுக்கு ஆதரவளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLclx6.html


மொரிசனின் கடும்போக்கு கொள்கையில் மாற்றம்! இலங்கை அகதிகளுக்கு விசா வழங்கப்படுமா?
[ செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2014, 02:40.26 AM GMT ]
அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் கடும்போக்குக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், படகு மூலம் வந்த சிறுவனுக்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவில் இருந்து புறப்பட்டு கப்பலொன்றில் ஏறி 16 மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை அடைந்த சிறுவன், மெல்பேர்னில் வாழ்ந்து வருகிறான்.
குறித்த எத்தியோப்பிய சிறுவனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடிய ஸ்கொட் மொரிசன், சிறுவனின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமது நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை விபரித்துள்ளார்.
சிறுவனின் சார்பில் பிரபல சட்டத்தரணி டேவின் மாண் வாதாடியிருந்தார்.
விசாக்கள் இல்லாமல் அவுஸ்திரேலியாவை அடைந்த ஏனைய அகதிகள் தொடர்பிலும் இதே நிலைப்பாட்டை அனுசரிக்குமாறு மாண் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுததார்.
விசா இல்லாமல் வருபவர்களும் தம் வாழ்க்கையைக் கட்டியெழுப்பிக் கொள்ளக்கூடிய வகையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வெண்டுமென சட்டத்தரணி மாண் குறிப்பிட்டார்.
ஆனால், படகில் தஞ்சம்கோரிச் சென்ற இலங்கை அகதிகள் தொடர்பில் மொரிசன் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது ஒரு கேள்வி குறியாக இருக்கின்றது.
அதிகளவான இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட்டு வரும் நிலையில், மொரிசனின் இந்த மாற்றமானது அரசாங்கத்தின் கடும்போக்கு தன்மைக்கு எதிரான வழக்குகளின் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மொரிசனின் உத்தரவு தமது உயிரைக் காப்பாற்றியிருப்பதாக எத்தியோப்பிய சிறுவன் தெரிவித்துள்ளான்.
http://www.tamilwin.com/show-RUmsyHRWLckoy.html

Geen opmerkingen:

Een reactie posten