தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 juli 2014

எனது பதவியை கவிழ்க்கவுள்ளார்கள்: அச்சத்தில் சிக்கியுள்ளார் மகிந்த ராஜபக்ஷ !

எனது பதவியை என்றாவது ஒரு நாள் மேற்குலகத்தின் துணையோடு கவிழ்ப்பார்கள் என, மகிந்த ராஜபக்ஷ பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அதிகாரத்தின் மீதான தனது பிடியை இறுக்கமாக்கிக் கொள்வதற்காக, அவர் மக்களை மௌனமாக்க முயல்வதாகவும், மனித உரிமை பணியாளர்கள் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அரச அமைச்சர் ஆகியோரை மேற்கோள் காட்டி சர்வதேச செய்திச் சேவையொன்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் அரசசார்பற்ற அமைப்புகளுக்கு எதிராக விடுக்கப்பட்ட உத்தரவிற்கு இந்த அச்சமே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொண்டே தனக்கு எதிரான குரல்களை மௌனமாக்க முயல்வதாக அரசசார்பற்ற அமைப்புகளின் பணியாளாகள் தெரிவித்துள்ளனர். அடுத்து வரவுள்ள தேர்தலில் தாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று மகிந்தர் நினைத்தார், ஏன் அவர் இவ்வாறு செய்யவேண்டும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாடு ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் வேளையில் அரசு தனது நிலை ஆட்டம் காண்பதாக உணர்கிறது, அதன் காரணமாகவே அரசசார்பற்ற அமைப்புகளுக்கு எதிரான உத்தரவு வெளியானது என ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு மேலும் கருத்து தெரிவித்துள்ளது.
இதேவேளை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்காக யு.எஸ்.எயிட் முன்னெடுக்க இருந்த திட்டம் காரணமாக அரசு கடும் அச்சமடைந்தது, ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அரசில் உள்ள சிலர் அச்சமடைந்துள்ளனர் என பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க காச்சல் மகிந்தரை இன்னும் விட்டு அகலவில்லை. என்றாவது ஒரு நாள் மகிந்தர், தோற்றுப்போனால் என்ன ஆகும் தெரியுமா ? அவர் பாதுகாப்பு குறைக்கப்படும். அவர் பயத்தின் பீதியில் நாட்டை விட்டு வெளியேறி சீனாவில் தான் சென்று வாழ நேரிடும் நிலை தோன்றும். 
http://www.athirvu.com/newsdetail/525.html

Geen opmerkingen:

Een reactie posten