தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 juli 2014

தமிழர்களின் தனித்துவத்தை அழிக்க வடக்கில் அரசு திட்டமிட்ட நடவடிக்கை! பாஸ்க்கரா குற்றச்சாட்டு!



கனடாவில் எழுச்சியுடன் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவுநாள் நிகழ்வுகள்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 07:54.28 AM GMT ]
கனடியத் தமிழர்கள் கறுப்பு ஜூலையின் 31 ஆம் ஆண்டு நினைவுகளை நேற்று உணர்வெழுச்சியோடு நினைவு கூர்ந்தார்கள்.
கனடா டொரோண்டோ, ஸ்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் சதுர்க்கத்தில் நேற்று மாலை 6:00 மணிக்கு கறுப்பு ஜுலையின் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.  இந்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் பிரமுகர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள்.
அவர்கள் தமது உரையில், தமிழர்களின் துன்பங்களில் பங்கேடுப்பதாகவும், பாராளுமன்றத்தில் தமிழர்களின் குரலாக தாங்கள் ஒலிப்போம் எனவும் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட International Assosiation of Genocide Scholars இன் தலைவரும் பேராசிரியருமான Danial Ferenstein சிறப்புரை ஆற்றினார்.
அவர், ஈழ மண்ணில் இனப்படுகொலையே நடைபெற்றது  என்பதை வலியுறுத்தி பேசினார். உலகெங்கிலும் இனப்படுகொலைகள் நடைபெற்றிருந்தாலும் எங்குமே நடைபெறாத கொடிய இனப்படுகொலை வடிவம் தமிழீழத்தில் நடைபெற்றது எனத் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclu0.html
தமிழர்களின் தனித்துவத்தை அழிக்க வடக்கில் அரசு திட்டமிட்ட நடவடிக்கை! பாஸ்க்கரா குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 08:06.52 AM GMT ]
இராணுவ பிரசன்னத்தை வடபகுதியில் அதிகரித்து, அதற்கேற்ற அணுகுமுறைகளை வகுத்துக் கொள்கிறது அரசு. அதுமட்டுமன்றி வடக்கு மக்களிடையே கலாசார சீர்கேட்டையும் பரவலடையச் செய்து தமிழ் மக்களின் தனித்தவத்தையும் இல்லாமல் செய்ய முயற்சிக்கிறது என்கிறார் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி.பாஸ்க்கரா.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் மூட்டப்பட்டுள்ள இனவாதத் தீ ஓர் இனத்தின் துன்பங்களை ஏனைய இனம் பகிர்ந்து கொள்வதற்கு இடையூறாகவுள்ளது.
குறிப்பாக கொழும்பில் நாம் எமது மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசும்போது எங்களை இனவாதிகள் என்று சிங்கள மக்களே குறிப்பிட்டனர்.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. தென்னிலங்கையில் இருந்து வந்து பெரும்பான்மை சிங்கள மக்களே தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கு எதிராக, அரசுக்கு எதிராக குரல்கொடுக்கின்றனர்.
இலங்கையின் வடபகுதியில்தான் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் சோதனையிடுகின்றனர்.
இந்த நிலைமை தெற்கில் இல்லை. சிங்கள மக்களை சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் அரசு தமிழ்மக்களை திறந்த வெளியில் அடைத்து வைத்திருக்கவே பார்க்கிறது - அவர்கள் விரும்பாத ஆட்சிமுறையையே திணிக்கிறது.
குறிப்பாக வடக்கில் சிவில் பிரதிநிதி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படவேண்டும் என்று நீண்டகாலமாக மக்கள் கோரிவந்தனர்.
ஆனால் அரசு அந்தக் கோரிக்கைகளை பொருட்படுத்தாது இராணுவ அதிகாரியாக இருந்த சந்திரசிறியையே மீண்டும் ஆளுநராக நியமித்துள்ளது.
அதுமட்டுமின்றி, வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அகதிகளாக வேறு இடங்களில் அல்லாடிக்கொண்டிருக்க, அவர்களது காணிகளைச் சுவீகரித்து படையினருக்கு முகாம்களும், விடுதிகளும் அமைத்து இந்த அரசு அராஜகம் செய்கிறது.
தமிழர்களுக்கு நீதி கிடைக்கக்கூடாது என்பதற்காக ஐ.நா.விசாரணையையும் மறுத்து, சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரசு, தம்மை சமாதான விரும்பிகள் என்று காட்டுவதற்காக தென்னாபிரிக்காவை அழைத்து பேசுவது போல பாசாங்கு செய்கின்றது.
நாட்டில் மதவாத சக்திகளைத் தூண்டிவிட்டு அமைதியைக் குழப்பி அதனூடாக அரசியல் செய்வதற்கு முயற்சிக்கின்றது.
இத்தகைய கபட நாடகங்களைக் கைவிட்டு அரசு மனச்சுத்தியுடன் தமிழ்மக்களுக்கு தீர்வை வழங்க முன்வரவேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclu1.html

Geen opmerkingen:

Een reactie posten