[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 01:34.32 PM GMT ]
வேலூர் மத்திய சிறையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் சிறையில் முருகனிடம் இருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து முருகன், நளினியை சந்திக்க 2 வாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடந்த 12ம் தேதி அவர்கள் சந்திக்கவில்லை.
கணவரை சந்திக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் நளினி, சிறையில் அளிக்கப்படும் உணவை சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதனால் அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியை நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் வெளியே வந்த புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"முருகனுடன் சந்திக்க மறுக்கப்பட்டதை தொடர்ந்து நளினி சிறையில் 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் சோகத்துடனும், சோர்வுடனும் உள்ளார்.
நளினியை சமாதானப்படுத்த சிறையில் அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு 22ம் தேதி விசாரணைக்கு வருகிறது" என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclq6.html
இலங்கையின் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன்: ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 02:13.38 PM GMT ]
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பாஸோஸ் கோல்ஹோவுடன் (Pedro Passos Coelho) இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துரைத்த போர்த்துக்கல் பிரதமர், தமது நாடு இலங்கையுடன் உறவை மேம்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது பொருளாதாரத்தை மட்டும் இலக்காக கொள்ளாது, அரசியல் மற்றும் கலாசாரம் என்ற அடிப்படையிலும் அமைவதையே தாம் விரும்புவதாக போர்த்துக்கல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தமது முதலாவது பயணத்தை மேற்கொண்ட போர்த்துக்கல் பிரதமரிடம், இலங்கையில் நிலவிய பயங்கரவாத நிலை மற்றும் வடக்கு கிழக்கின் அன்றைய நிலை என்பவை தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளித்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கைக்கு வருவது தமது சந்தோசத்தை அளிப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி மகிந்த, இதன்போதே இலங்கையின் உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclq7.html
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை மூன்று நாடுகளில் நடத்தப்படவுள்ளது!- ஐக்கிய நாடுகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 02:32.06 PM GMT ]
இதன்படி, நியூயோர்க், ஜெனீவா மற்றும் பாங்கொக் ஆகிய நாடுகளிலேயே இந்த அமர்வுகள் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
தமது விசாரணை அமர்வை இலங்கையில் நடத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதியை எதிர்ப்பார்க்கிறது.
எனினும் இலங்கை அரசாங்கம் அதற்கு அனுமதியை வழங்கப் போவதில்லை.
தகவல்களின்படி, இலங்கையின் தமிழர்கள், வட அமெரிக்காவில் இயங்கும் தமிழ் உரிமை குழுக்கள், ஐரோப்பியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் குழுக்கள் நியூயோர்க் விசாரணைகளின் போது தமது சாட்சியங்களை பதிவுசெய்யவுள்ளன.
இதேவேளை இலங்கையில் உள்ளவர்கள் ஸ்கைப், விடியோ கொன்பெரென்ஸ், மற்றும் தொலைபேசிகளின் மூலம் சாட்சியங்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது.
இலங்கையில் உள்ளோர் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் சாட்சியமளிக்க எவ்வித தடைகளும் இல்லை. எனினும் இலங்கையின் அமைச்சர்கள் சாட்சியமளிப்பவர்களுக்கு எச்சரிக்கையை விடுத்து வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclry.html
Geen opmerkingen:
Een reactie posten