இவனது உடல் வெள்ளிக்கிழமை பிற்பகல் போர்ட்டபிள் கழிவறைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பொலிசார் இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானதாக கருதுவதாகவும் ஆனாலும் உறுதிப்படுத்து முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இசை நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடத்தில் இருந்து தங்கள் முகாம்களிற்கு திரும்பி வந்த போது அங்கு பொலிசாரை கண்டதாக சடலம் கண்டு பிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள முகாமில் தங்கியிருந்த அலெக்சான்ரா விராடோ என்ற 20-வயது இளைஞன் தெரிவித்துள்ளார்.
இந்த மரணம் கொலை என சந்தேகப்படுவதால் ஒருங்கிணைந்த கொலை புலனாய்வு குழு {IHIT}புலன் விசாரனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
கொலைகள், உயர் ஆபத்து, காணாமல் போனவர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான மரணங்கள் போன்ற குற்றச் செயல்களை புலன்விசாரனை செய்வது IHIT யினரின் பொறுப்பாகும்.
இந்த இசை நிகழ்ச்சி Huka Entertainment நிறுவனத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகியது.
மரணத்திற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை நடாத்தப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியல் கலந்து கொள்ள 20,000-ற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்துள்ளனர். இதனால் பாரிய பகுதி மக்கள் கூட்டம், முகாம்கள் என்பனவற்றால் நிறைந்து காணப்படுவது விசாரனை செய்வதற்கு மிகவும் கடினமானதென அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:
Een reactie posten