[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 10:03.03 AM GMT ]
மட்டக்களப்பு, நொச்சிமுனையைச் சேர்ந்த சின்னதம்பி நவரெட்ணம் ஜெயசீலன் (வயது 28) என்பவரே இவ்வாறு காணாமல் போயிருந்ததாக அறிவிக்கப்பட்டது.
மனித அபிவிருத்தித் தாபனமும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்தியக் கிளையும் கடந்த 23.06.2014 ல் செய்த முறைப்பாட்டுக்கமைவாக இச்செய்தியை அனுப்பி வைத்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் கே.எம்.பி. றந்தெனிய அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பிரஸ்தாப ஜெயசீலன் தொடர்பான தேடலில் அவர் ஜெட்டா ஜெயிலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் மேலதிக தகவல்கள் கிடைத்தால் பின்னர் அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வறிவிப்பையடுத்து மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த சின்னதம்பி நவரெட்ணம் ஜெயசீலனின் (வயது 28) மனைவி ஜெ. சுதர்சினி ஆறுதலடைந்துள்ளார்.
இது தொடர்பாக மனைவி சுதர்சினி தெரிவித்ததாவது.
நொச்சிமுனையை சேர்ந்த எனது கணவர் சி.ந. ஜெயசீலன் 2012.03.20ம் திகதி சவூதி அரேபியாவுக்கு தொழில் வாய்ப்புக்காக சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வருடம் வேலை செய்தார். அங்கு சம்பளம் போதாது என்று கருதிய அவர் வேறொரு நிறுவனத்தைத் தேடி அலைந்த போது 2013.03.19ல் சவூதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
அவரது நண்பர்களின் தொலைபேசி மூலம் அதனை அறிந்தோம். பின்பு அவர் சிறைச்சாலையிலிருந்து கதைத்தார். இறுதியாக 2013.12.15ம் திகதி தொடர்பு கொண்டார். தன்னுடன் இருந்த பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும் தான் இம்மாதம் இலங்கைக்கு வருவேன் என்றும் கூறினார்.
ஆனால் அவர் வரவும் இல்லை அவரிடமிருந்து அதன் பிறகு எதுவித தொடர்புமில்லை அவர் சவூதியிலிருந்து வந்தாரா? இல்லையா என்பது கூட தெரியாமலுள்ளது. எனவே உரியவர்களுடன் தொடர்பு கொண்டு எனது கணவரை மீட்டுத் தாருங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார்.
மனித அபிவிருத்தி தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஆர்.மனோகரன் ஆகியோர் இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வெலைவாய்ப்பு பணியகத்துடன் தொடர்பு கொண்டிருந்தார்கள்;.
அதன்பலனாக மேற்படி செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclq0.html
எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 11:05.19 AM GMT ]
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டான ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்கான 59 பேர் கண்டுபிடிக்கப்பட்டதாக எயிட்ஸ் நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு 181 எயிட்ஸ் நோயாளிகளும், 2013 ஆம் ஆண்டு 196 எயிட்ஸ் நோயாளிகளும், 2014 ஆம் ஆண்டின் முடிவடைந்துள்ள காலம் வரை 110 எயிஸ்ட் நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
1989 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆயிரத்து 955 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். 2013 ஆம் ஆண்டு 7 லட்சம் பேர் தமது உடலில் எச்.ஐ.வி. உள்ளதா என்பதை அறிய பரிசோதனைகளை செய்துள்ளனர்.
அத்துடன் கடந்த ஏப்ரல் மாதங்களில் 4 லட்சம் பேர் இவ்வாறான பரிசோதனையை செய்துள்ளனர் எனவும் சிசிர லியனகே குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclq1.html
வடக்கு விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் காரைநகர் ஊரி கிராமத்துக்குக் குடிநீர் விநியோகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 12:40.34 PM GMT ]
கடற்படைச் சிப்பாய் ஒருவரால் ஊரிக் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் அண்மையில் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் யாவரும் அறிந்ததே.
இந்தச் சம்பவத்தையடுத்து வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்றிருந்தனர்.
இதன்போது பிரதேசவாசிகள் தாங்கள் குடிநீருக்காகப் படுகின்ற அவலத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
வழமையாகவே குடிநீருக்கான பற்றாக்குறைவு நிலவும் காரைநகரில் இம்முறை கடும் வரட்சி காரணமாக அநேகமான கிணறுகளில் சொட்டுத் தண்ணீரைக் கூடக் காணமுடியவில்லை.
அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் குடிநீருக்காக வழங்கப்பட்டுள்ள நிதியும் போதாது இருப்பதால், காரைநகர் பிரதேச சபையால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே குடிநீரை விநியோகிக்க முடிகிறது.
இதனையடுத்தே ஊரிக் கிராமத்துக்கான குடிநீர் விநியோகத்தை காரைநகர் பிரதேச சபையுடன் இணைந்து மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு முன்வந்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஊரிக்கு நாள்தோறும் இரண்டு தடவைகள் பவுசர் மூலம் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட உள்ளது.
அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது,
இரணைமடுவில் இருந்து தீவகத்துக்குத் தண்ணீர் எடுத்துவருவதற்கு வடக்கு மாகாணசபையை வற்புறுத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்குக் குறிப்பிட்ட அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்தவர்கள் வற்புறுத்தியதாகவும், அதற்கு எங்களைப் போன்றுதான் கிளிநொச்சி மக்களும் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதால் இரணைமடுத் தண்ணீர் எங்களுக்கு வேண்டாம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள மறுத்து விட்டதாகவும் நீங்கள் என்னிடம் கூறியுள்ளீர்கள்.
குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாத நிலையிலும் உணர்ச்சி வசப்படாமலும், ஏமாற்று நடவடிக்கைகளுக்குப் பலியாகாமலும் தெளிவான பதிலைச் சொன்ன ஊரி மக்களை நான் பாராட்டுகின்றேன்.
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று அடம் பிடிப்பவர்களின் பின்னால் பெரிய அரசியல் சூழ்ச்சி மறைந்து கிடக்கிறது.
கிளிநொச்சி மாவட்டத்தின் உணவு உற்பத்தியை நிர்மூலமாக்கி உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வடக்கு மக்கள் எப்போதும் அரசிடம் கையேந்த வைப்பதற்காகவே வடக்கின் குடிநீருக்கு வேறு மாற்றுத்திட்டங்கள் இருந்தும் இரணைமடுத் திட்டத்தை மட்டுமே ஒரே தீர்வாக அரசும் அதன் ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
பவுசர்கள் மூலம் நாம் மேற்கொள்ளும் நீர் விநியோகம் தற்காலிகமானது.
ஊரிக் கிராமத்துக்கு மாத்திரம் அல்லாமல் தீவகம் முழுவதற்கும் சுத்தமான குடிநீரை தேவையான அளவு விநியோகிக்கும் நிரந்தரமான திட்டத்தை வடக்கு மாகாண சபை அதன் ஆட்சிக்காலம் முடிவடைவதற்குள் செய்து முடிக்கும் என்று உறுதி கூறுகின்றேன் என்றும் தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், வே.சிவயோகன், காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் வே. ஆனைமுகன் மற்றும் ஊரிக் கிராம மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclq3.html
கொழும்பு பிரதான வீதியில் பஸ் தீக்கிரை- குளவி கொட்டியதில் 15 பேர் வைத்தியசாலையில்!
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 11:58.47 AM GMT ]
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவாயவிலிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து கொழும்பு பிரதான வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இன்று காலை இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும் பேருந்தில் பயணித்த பயணிகள் எவ்வித பாதிப்புமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஹப்புத்தளை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
குளவி கொட்டியதில் 15 பேர் வைத்தியசாலையில்!
பொகவந்தலாவ நகரிலிருந்து அறநெறி வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவ கிலானி மற்றும் தெரேசியா தோட்டத்தைச் சேர்ந்த ஒன்பது சிறுவர்கள், ஒரு பெண் மற்றும் ஐந்து ஆண்கள் குளவித் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவர்களது உயிருக்கு ஆபத்தில்லையென பொகவந்தலாவ வைத்தியசாலை பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மலையகத்தின் குறிப்பாக பொகவந்தலாவை- தலவாக்கலை மற்றும் ஹட்டன் பிரதேசங்களில் அண்மைய நாட்களாக அதிகளவானோர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வருகின்றனர்.
கடந்த 18ம் திகதி பொகவந்தலாவையில் பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இரு மாணவிகளை குளவிகள் தாக்கியமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclq2.html
Geen opmerkingen:
Een reactie posten