தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 20 juli 2014

வடக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி இனி இயங்காது!

த.தே.கூட்டமைப்பைத் தடை செய்ய, அது மண் குதிரை அல்ல: அரியநேத்திரன் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 05:21.18 AM GMT ]
தமிழர்களின் பலமிக்க கட்சியான த.தே.கூட்டமைப்பினை தடை செய்வதென்பது சர்வ சாதாரணமான விடயம் அல்ல என்பதனை ஜாதிக ஹெல உறுமயவும், தேசிய சுதந்திர முன்னணியும் புரிந்து கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அண்மையில் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டாக இணைந்து த.தே.கூட்டமைப்பினை தடை செய்ய வேண்டும் என ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக கருத்துக்கூறும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்பது வடகிழக்கு மக்களின் ஏகோபித்த ஆணையைப் பெற்ற ஜனநாயகக் கட்சி. 65 வருட காலமாக இந்த மண்ணிலே பல அர்ப்பணிப்புக்களை செய்து அனாதரவாய் நிற்கும் எமது தமிழ் மக்களின் அரசியல் பலமாக இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே கட்சி என்பதனை இரண்டு இனவாதக் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
த.தே.கூட்டமைப்பினை தடை செய்வதென்பது உலக அரங்கிலே உள்ள அனைத்து தமிழர்களையும் தடை செய்வதற்கு ஒப்பானதாகும்.
இன்று எமது விடுதலைப் பயணம் சர்வதேச ரீதியாக பரிணமித்து தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தரத் தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டியே சகல நாடுகளும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் காலமாக இக்காலம் அமைந்திருக்கின்றது.
இதனை பொறுத்துக் கொள்ளாத சிங்கள இனவாதிகளும், அந்த இனவாதக் கட்சிகளின் ஊதுகுழலாய் செயற்படும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரான மொஹகமட் முஸ்ஸமில் போன்றவர்களும், அரசாங்கத்தின் அடிவருடிகளாக இருந்து கொண்டு வடகிழக்கு மக்களுக்கான உரிமைக்குரலாய் எஞ்சியிருக்கும் த.தே.கூட்டமைப்பினை தடை செய்வதற்கு ஆலோசனை கூறுகின்றார்கள்.
இவர்களால் முடிந்தால் வடகிழக்கு மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வினை வழங்கும் படி அரசாங்கத்திற்கு ஏன் ஆலோசனை வழங்க முடியாது? த.தே.கூட்டமைப்பு சட்டதிட்டங்களை ஒதுக்கிவிட்டோ, நீதிக்கு முரணாகவோ செயற்படவில்லை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு செய்யும் அநீதிக்கு எதிராகத்தான் குரல் கொடுக்கின்றோம்.
நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராகவோ சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு எதிராகவோ செயற்படவில்லை இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்றால் அந்த நாட்டிலே வாழும் சகல இன மக்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும் அவ்வாறு சம உரிமை இருந்தால் மாத்திரம்தான் அந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் நாட்டுப்பற்று இருக்கும்.
இந்த நாட்டிலே உரிமை இல்லாத எமக்கு எவ்வாறு நாட்டுப்பற்று வரும் என்பதனை மாற்று அரசியல் கட்சிக்குப் பின்னால் சோரம் போகும் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் த.தே.கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என்று அரசாங்கத்தில் இருக்கும் இனவாதிகள் இவ்வாறான கருத்தை கூறும் போது த.தே.கூட்டமைப்பு தேவையா, இல்லையா என்பதனை இவர்கள் சிந்திக்க வேண்டும்.
த.தே.கூட்டமைப்பை தடை செய்து தமிழ் மக்களுக்கு வாய்ப்பூட்டை போட்டுவிட்டால் இனி ஒரு தமிழர் என்ற இனத்தையே இல்லாமல் செய்வதற்கான செயற்பாடே இதுவாகும். இதனை தன்மானமுள்ள தமிழர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclo6.html
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்குதல் - வீதியில் சென்றவர் திடீர் மரணம்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 05:31.31 AM GMT ]
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம், இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கல்கிஸ்ஸ டெம்பலர்ஸ் வீதியில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை இனந்தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கொஹூவலை பிரதேசத்திற்கு அழைத்துச் சென்ற குழுவினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீதியில் சென்றவர் திடீர் மரணம்
மட்டக்களப்பு பொதுச்சந்தையில் பொருட்கள் வாங்க சென்றவர் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை மட்டக்களப்பு பொதுச்சந்தையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருக்கும் போது குறித்த நபர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு, ஊறணியைச் சேர்ந்த மரக்கறி வியாபாரியான முத்துப்பிள்ளை கணபதிப்பிள்ளை (வயது 57) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேர்தல்கள் ஒரே தினத்தில் நடத்தப்பட வேண்டும்: ரணில் - போர்த்துக்கல் பிரதமர் இலங்கையை வந்தடைந்தார்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 05:31.41 AM GMT ]
மாகாணசபைத் தேர்தல்கள் ஒரே தினத்தில் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையும் மாகாணசபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்த வேண்டும். இதன்மூலம் பாரியளவில் பணத்தை சேமிக்க முடியும்.
இந்த ஆண்டில் இரண்டு மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதனால் அது பற்றி பேச வேண்டியதில்லை. ஏனைய தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதனால் மக்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதனை தவிர்க்க முடியும் என ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,  ரணில் விக்ரமசிங்க கம்பளை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது, 
சிங்கள பௌத்தர்களை பாதுகாப்பதற்காக நாட்டில் வாழும் சகல மக்களையும் பாதுகாப்பது அவசியமானது தெரிவித்துள்ளார்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் தேசிய ஐக்கியத்திற்கு தடையேற்படுத்தி, நாட்டை இரண்டாக பிளவுபடுத்த முயற்சித்தார்.
எனினும் அவரது முயற்சி தோல்வியடைந்தது. இந்த நிலையில், சிறிய தரப்பினர்களின் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் பெரும்பான்மை பௌத்தர்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை சில பொய்யான விடயங்களை திருத்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
போர்த்துக்கல் பிரதமர் இலங்கையை வந்தடைந்தார்
போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பெசோஸ் கொயில்ஹோ இன்று காலை 8.45 அளவில் இலங்கைக்கு வந்தடைந்தார்.
பிரதமருடன் போர்த்துக்கல் அரசாங்கத்தின் 20 பிரதிநிதிகளும் இலங்கை வந்துள்ளனர்.
போர்த்துக்கல் பிரதமரை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இலங்கை வந்துள்ள போர்த்துக்கல் பிரதமர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் அவர் காலி பிரதேசத்திற்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclpy.html
வடக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி இனி இயங்காது
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 06:10.58 AM GMT ]
வடக்கு மாகாண அபிவிருத்திகளுக்கான ஜனாதிபதி செயலணி இனிமேல் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
பசில் ராஜபக்ச தலைமையிலான வடக்கின் அபிவிருத்திக்கான  ஜனாதிபதி  செயலணி கலைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நல்லிணக்க பணியகம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சுக்கள், அரசாங்க திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கைகளில், ஜனாதிபதி செயலணி இனி நடைமுறையில் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமக்கு ஜனாதிபதி செயலணியின் செயலாளர் டி.திவாரட்ண அறிவித்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாஸ தெரிவித்துள்ளார்.
எனினும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இன்னும் 23 ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்படவுள்ளனர். இவர்கள் நலன்புரி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
பலர், இராணுவ ஆக்கிரமிப்பினால் தமது இடங்களில் குடியேற முடியாமல் உள்ளனர்.
ஜனாதிபதி செயலணியானது, மீள்குடியேற்றம் மற்றும் அந்த குடும்பங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே அமைக்கப்பட்டது.
இதில் 19 பேர் அங்கம் வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRULclp0.html

Geen opmerkingen:

Een reactie posten