வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் தமிழரின் போராட்ட வலிகள்! திடுக்கிடும் ஆதாரத்துடன் சிரேஸ்ட ஊடகவியலாளர் தயாபரன்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 12:20.26 AM GMT ]
கடந்த நாட்களில் இடம்பெற்ற மலேசிய விமானத் தாக்குதல் மலேசிய அரசுக்கு ஒரு உண்மையினை புலப்படுத்தியுள்ளது,
காசா என்றுமே ஈழத்திற்கு ஒப்பானது, அன்றும், இன்றும் ஈழத்தில் நடந்தவை நடப்பவை, காசாவில் இன்றும் நடக்கிறது. என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்டமேசை நிகழ்ச்சியில் சிரேஸ்ட ஊடகவியலாளர் ரட்னம் தயாபரன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclr6.html
எமது கிராமத்து பொதுநிலம் கிராமத் தேவைக்கே! கிளிநொச்சி தொண்டமான்நகர் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 06:46.28 AM GMT ]
தமது கிராமத்தின் பொதுக்காணியை தென்னிலங்கையைச் சேர்ந்த நபர் அபகரிப்பதைக் கண்டித்து, கிளிநொச்சி தொண்டமான்நகர் மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி ஏ9 வீதியில் தொண்டமான்நகர் பகுதியில் அமைந்துள்ள உதிரவேங்கை வைரவர் ஆலயத்துக்கு சொந்தமான காணியை கடந்த ஆண்டு தென்னிலங்கையை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவருக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலரால் அடாத்தாக காணி வழங்கப்பட்டது.
தொண்டமான்நகர் மக்கள், அமைப்புக்கள் மற்றும் கோயில் நிர்வாகம் என்பவற்றின் கருத்துக்களை அறியாமல் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
குறித்த சம்பவத்தினை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதையடுத்து, கிளிநொச்சி நீதிமன்றால் அக்காணி கோவிலுக்கு உரிமையானது என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்,கடந்த 17ம் நாள் மீண்டும் கோவில் அக்காணியில் ஒரு பகுதியில் நீதிமன்றத்தையும் அவமதித்து கரைச்சி பிரதேச செயலாளரால் மீண்டும் தென்னிலங்கையை சேர்ந்த முக்கிய பிரமுகருக்கு வழங்கப்பட்டு, அந்நபர் காணியை அளந்து எல்லைக்கல் நாட்டியபோது தொண்டமான் நகர் அதை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம் செய்வதென தீர்மானித்தனர்.
இன்று அபகரிப்பட்ட காணியின் முன்பாக தொண்டமான்நகர் மக்கள், பொது அமைப்புக்கள், பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபையின் உபதலைவர், உறுப்பினர்கள், மாற்றுவலுவுள்ளோர் சங்க பிரதிநிதிகள், மாதர் அமைப்பு பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி சங்க சம்மேளனங்களின் பிரதிநிதிகள், மக்கள் விடுதலை முன்னணியின் கிளிநொச்சி அமைப்பாளர் என பலரும் கலந்து கொண்டு காணி அபகரிப்புக்கு எதிராக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
வடமாகாண முதல்வருக்கு தொண்டமான்நகர் மக்கள் மகஜர்
கிளிநொச்சி தொண்டமான்நகர் பொதுக்காணியை தென்னிலங்கையை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவருக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் கொடுக்கும் நடவடிக்கையை கண்டித்து தொண்டமான்நகர் மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இதன் போது வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதுடன், பா.உறுப்பினர் சி.சிறீதரன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் , கரைச்சி பிரதேச செயலர் ஆகியோருக்கு பிரதியிட்டுள்ளனர்.
அந்த மகஜரில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் வருமாறு,
மாண்புமிகு சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள்
முதலமைச்சர்
வடக்கு மாகாணம்
யாழ்ப்பாணம்.
2014.07.21.
முதலமைச்சர்
வடக்கு மாகாணம்
யாழ்ப்பாணம்.
2014.07.21.
கிளிநொச்சி தொண்டமான் நகர் பொதுக்காணியை அத்துமீறி ஆக்கிரமித்தல் தொடர்பான மகஜர்
மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே!
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவில் நகரை அண்டிய பகுதியில் காணப்படும் பழமை வாய்ந்த கிராமமான தொண்டமான்நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு சொந்தமான காணியை,
2013ம் ஆண்டு தென்னிலங்கையில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவரின் பின்புலத்துடன் தனியார் கம்பனி ஒன்றுக்கு கரைச்சி பிரதேச செயலர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்திற்கு முரணான வகையில் வழங்கினார்.
இதன்போது மேற்படி கிராம மக்களாகிய நாம் 2013ம் ஆண்டு 5ம் மாதம் 8ம் நாள் இக்காணி அபகரிப்புக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில், 2014ம்ஆண்டு 4ம் மாதம் மேற்படி காணி முழுமையாக கோவிலுக்கு சொந்தமானதென தீர்ப்பளிக்கபட்டது.
ஆனால் தற்போது கடந்த 2014.07.17ம் நாள் அன்று நீதிமன்றத்தால் ஆலயத்திற்கு சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்ட காணியின் ஒருபகுதியை எமது கிராமத்தின் பொது அமைப்புக்களின் அனுமதி இன்றி கரைச்சி பிரதேச செயலாளரின் அதிகார துஸ்பிரயோகத்தை பாவித்து தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பின்புலமுள்ள தனியார் ஒருவர் அத்துமீறி அளந்து எல்லைக் கற்களை வைத்துள்ளர்.
இதுதொண்டமான் நகர் கிராம மக்களாகிய எமக்கு பெரும் கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாரம்பரிய கிராமமான தொண்டமான்நகர் கிராமத்தின் முக்கிய பொதுத்தேவை பயன்பாடுகளான சனசமூகநிலையம், சிறார் முன்பள்ளி, ஆரம்பசுகாதார நிலையம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், அறநெறிப்பள்ளி, விளையாட்டுக் கழகம் போன்றவற்றிற்கு நிரந்தரமான காணிகள் இல்லாத நிலையில்,
இக்கிராமத்தில் உள்ள மேற்படி பொதுக்காணியை தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பின்புலமுள்ள ஒருவருக்கு வழங்குவதில் காட்டும் மிகபிரயத்தனம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் தொடர்பில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அத்தோடு அவரின் அதிகார துஸ்பிரயோக தன்மையையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. இது தொடர்பில் தொண்டமான்நகர் கிராம மக்களாகிய நாம் பலத்த அதிருப்தி அடைந்துள்ளோம்.
அத்துடன் அதிகார வர்க்கத்தில் உள்ள அதிகாரிகளின் இதுபோன்ற செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.
எமது கிராமத்துக்கு சொந்தமான பொதுக்காணிகள் எம்முடைய பொதுத்தேவைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டுமென்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
எனவே இவ்விடயம் தொடர்பில் தாங்கள் தங்கள் மேலான கவனத்தை செலுத்தி இக்கிராமத்துக்கு சொந்தக்காரர்களாகிய எமக்கு உரிய தீர்வை விரைந்து பெற்றுத்தருவீர்கள் என்று மிகவும் பணிவுடன் வேண்டிநிற்கின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்
தொண்டமான்நகர் கிராம பொதுஅமைப்புக்கள்.
இவ்வண்ணம்
தொண்டமான்நகர் கிராம பொதுஅமைப்புக்கள்.
http://www.tamilwin.com/show-RUmsyHRVLclt6.html
Geen opmerkingen:
Een reactie posten